காலையில் முழித்த முகம் சரியில்லை! எடுத்த காரியம் எதுவும் நடக்கவில்லை! என்று அலுத்துக் கொள்வோர்களும், இன்றைக்குக் கழுதை முகத்தில் முழித்திருப்பான் போலிருக்கிறது! அதிர்ஷ்டக்காரன், அவனுக்கு அடித்தது, யோகம் என்று வியந்து போவோரும் இருக்கின்றார்கள். ஆனால், காலையில் தூங்கி எழும்போதே அன்றைய தினம் எப்படி இருக்கும்! எப்படி இருந்தால் தனக்கு நன்மை உண்டாகும் என்பதை அறிந்து செயல்படுபவர்கள் குறைவு.