Monday, 21 December 2015

தெரிந்ததும் தெரியாததும் ......

1.உங்கள் வீட்டில் நீங்கள் தூங்கும்போது , கிழக்கு திசையில் தலை வைத்து படுக்கவேண்டும்.
2.சித்தப்பா, பெரிப்பா, மாமனார் வீட்டில் தூங்கும்போது தெற்கு திசையில் தலை வைத்து படுக்கவேண்டும்.
3.வெளியூருக்கு செல்லும்போதும், வெளியூரில் தங்கும்போதும் மேற்கு திசையில் தலை வைத்து படுக்கவேண்டும்.

4.கல்யாணம் ஆகாதவர்கள், நான்கு முழம் வேட்டிதான் கட்டவேண்டும்.
5.திருமணம் ஆனவர்கள்தான் எட்டு முழம் உடுத்தவேண்டும்.
6.பிரும்மச்சாரியும், திருமணம் ஆனவர்களும் எக்காரனத்தைகொண்டும், சாயம் பூசிய, கலர் வேட்டிகள் கட்டக்கூடாது.
சபரிமலை போன்ற விரத நாட்கள் விதிவிலக்கு ஆகும்
7.கிரிவலத்தின்போது , நாம், வெறும் காலுடன் நடந்து செல்லவேண்டும். அப்போதுதான் நமக்கு முழு பலன்.
8.நீங்கள் ஆலயத்தில் பிரதட்சிணம் செய்யும்போது யாரிடமும் பேசக்கூடாது. வேகவேகமாக செய்தால் பாவம் வரும்.
பேசாமல் மெதுவாக,நடக்கவேண்டும்.
9.பிள்ளையாருக்கு - ஒரு தடவை
சூரியனுக்கு - இரண்டு தடவை
சிவனுக்கு - மூன்று தடவை
விஷ்ணுவிற்கு - நான்கு தடவை
அம்மனுக்கு - ஐந்து தடவை
அரச மரத்துக்கு - ஏழு தடவை சுற்றி வந்து வணங்க வேண்டும் ..
10.பெண்கள் கிழக்கு திசையை நோக்கி குங்குமத்தை இரண்டு புருவ மத்தியிலும் உச்சந்தலையிலும் இட்டுக்கொள்ளவேண்டும். திருமணம் ஆகாதவர்கள், உச்சந்தலையில் இட்டுக்கொள்ளகூடாது
11.திருமணம் ஆனவர்கள்,தங்கள் உடம்பில் சந்தனத்தை பூசிக்கொள்ளவேண்டும்.
திருமணம் ஆகாதவர்கள், அதாவது பிரும்மச்சாரியாக இருக்கும்போது சந்தனத்தை உடம்பில் இட்டுக்கொள்ளகூடாது
12.விநாயகருக்கு தோப்பிக்கரணம் நாம் போடுகிறோம். இது மகாவிஷ்ணுவினால் வந்த செயல் தலையில் ஐந்து தடவை குட்டிக்கொண்டு பிறகு தோப்பிக்கரணம் போடவேண்டும்
13.இதில் பெண்கள் தலையில் குட்டிக்கொண்டாலே போதும். தோப்பிக்கரணம் போடக்கூடாது......

No comments:

Post a Comment

...Recently Published Post...

குளிக்கும் போது...

குளிக்கும் போது வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று குளிக்கவேண்டும். (இவை இரண்டும் உத்தம திசைகள். (கர்மம் செய்தபின்னும், மயானத்திற்க...