Wednesday, 18 May 2016

திராட்சைப் பழம்



எல்லா வகையான திராட்சையிலும் பொதுவாக வைட்டமின் ஏ உயிர்சத்து அதிக அளவில் காணப்படும். பொதுவாக சரியாக பசி எடுக்காமல் வயிறு மந்த நிலையில் காணப்படுபவர்கள் கருப்பு திராட்சை எனப்படும் பன்னீர் திராட்சையில் அரைடம்ளர் சாறு எடுத்து அதனுடன் சர்க்கரை சிறிது சேர்த்து அருந்தி வந்தால் மந்த நிலை நீங்கி நன்றாக பசி எடுக்கும்.

ஆரஞ்சுப்பழம்

ஆரஞ்சில் வைட்டமின் ஏ அதிகமாகவும், வைட்டமின் சி-யும், பி-யும், பி-2ம் உள்ளன. மேலும் இதில் சுண்ணாம்புச்சத்தும் மிகுந்து காணப்படுகிறது. பல நாட்களாக வியாதியால் பாதித்து தேறியவர்களுக்கு இதுவொரு சிறந்த இயற்கை டானிக் ஆகும். இரவில் தூக்கமில்லாமல் கஷ்டப்படுபவர்கள் படுக்க போவதற்கு முன்பாக அரை டம்ளர் ஆரஞ்சு பழச்சாறுடன் சிறிது சுத்தமான தேனை சேர்த்து சாப்பிட இரவில் நன்றாக தூக்கம் வரும். பல் சதை வீக்கம், சொத்தை விழுந்து வலி ஏற்படுதல், பல் வலி, பல் ஈறுகளில் ரத்தக் கசிதல் இருப்பவர்கள் ஒரு வாரம் அரை டம்ளர் ஆரஞ்சு பழச்சாறை கொப்பளித்து விழுங்க உடன் நிவாரணம் பெறலாம்.

வியர்வை நாற்றத்தை ஒரே நாளில் நீக்கலாம்...



பொதுவாக வியர்வை நாற்றம் என்பது எல்லோருக்கும் இருக்கக்கூடிய பொதுவான ஒன்றாகும். ஆனால் சிலருக்கு வியர்வை நாற்றம் என்பது பக்கத்தில் இருப்பவரை கூட அருகில் செல்ல முடியாமல் செய்துவிடும். சிலர் சோப்பு, வாசனை திரவியம் போன்ற பொருட்களை உடலெங்கும் பூசி இருப்பதும் நமக்கு தெரிந்த ஒன்று தான், வியர்வை துர்நாற்றம் அடிக்கிறது என்கிறது மருந்து கேட்டால் வியர்வை வராமல் செய்துவிடும் ஆபத்தான மருந்துகளும் கிடைக்கிறது, சரி சித்த மருத்துவரிடம் சென்று மருந்து கேட்டால் அவர் 5 வகையான கூட்டு சரக்கு மருந்து இதை அரைத்து தினமும் பூச வேண்டும் என்று சொல்கின்றனர், இவற்றை எல்லாம் தாண்டி ஒரு அதிசயம் கடந்த மாதம் நண்பர் ஒருவர் மூலம் இயற்கை உணர்த்தியது.

மூலிகை சாறில் முழுமையான ஆரோக்கியம்!


நம் முன்னோர்கள் பலன் அறிந்து பயன்படுத்தி வந்த மூலிகைகள் ஏராளம். மூலிகைகளை சாறாகவும், கஷாயமாகவும் செய்து சாப்பிடுவதன் மூலம் நோய்கள் நம்மை நெருங்கவிடாமல் செய்யலாம். இதோ, சில மூலிகைகளும், அதன் பலன்களும்....

இஞ்சிப் பால்..!



கொடி போல இடை தளிர்போல நடைன்னு சொல்வாங்க. அப்படி சிக்குன்னு சுறுசுறுன்னு இருக்கனும்பாங்க. சுலபமா செஞ்சு முடிக்கக்கூடிய இஞ்சிப் பால் இருக்க பயமேன்? கவலையை விடுங்க.

வலுவூட்டும் செவ்வாழைப்பழம்.

நரம்பு தளர்ச்சி குணமடையும்

நரம்பு தளர்ச்சி ஏற்பட்டால் உடலில் பலம் குறையும். ஆண்மை குறைபாடு ஏற்படும். எனவே நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டுவரவேண்டும். தொடர்ந்து 48 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட நரம்புகள் பலம் பெறும். ஆண் தன்மை சீரடையும்.

வெள்ளை பூண்டின் அற்புதங்கள்


பூண்டு என்றதுமே நம் அனைவரின் நினைவுக்கு வருவது இதயத்திற்கு சிறந்த உணவுப் பொருள் என்பதுவே.

இதுமட்டுமின்றி ஏராளமான மருத்துவ குணங்களும் புதைந்து கிடக்கின்றன.

புற்றுநோயை தடுக்கும்

வாழைப்பழம்



மலச்சிக்கல் இருப்பவர்கள், மூலநோய் குறைபாடு இருப்பவர்கள் தினமும் வாழைப்பழம் ஒன்றை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல், மூல நோய் குறைபாட்டிலிருந்து விடுபடலாம். மேலும் தினமும்

மாதுளம் பழம்

மாதுளம் பழத்திற்கு மலத்தை இளக்கும் சக்தி உணடு. மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலிலிருந்து குணம் பெறலாம். வறட்டு இருமல் உள்ளவர்கள் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும். பித்த சம்மந்த மான அனைத்து உடல்நல குறை பாட்டிற்கும் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வரலாம். மாதுளம் பழத்தின் தோலை அம்மியில் மை போல் வைத்து அரைத்து அதில் எலுமிச்சம்பழம் அளவு எடுத்து அரை ஆழாக்கு எருமை தயிரில் கலந்து மூன்று நாள் காலையில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பிற மருந்துகள் கொடுத்தும் குணமாகாத சீதபேதி உடன் நிற்கும்.

விளாம்பழம்

விளாம்பழம் பல வியாதிகளை குணப்படுத்தும் சிறந்த பழமாகும். இதில் இரும்பு சத்தும், சுண்ணாம் புச்சத்தும், வைட்டமின் ஏ சத்தும் உள்ளது. இப்பழத்துடன் வெல்லம் சேர்த்து பிசைந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் குணமாகும். பித்தத்தால் தலை வலி, கண்பார்வை மங்கல், காலையில் மஞ்சளாக வாந்தி எடுத்தல், சதா வாயில் கசப்பு, பித்த கிறுகிறுப்பு, கை கால்களில் அதிக வேர்வை, பித்தம் காரணமாக இளநரை, நாவில் ருசி உணர்வு அற்றநிலை இவைகளை விளாம் பழம் குணப் படுத்தும். விளாம்பழத்திற்கு ரத்தத்தில் கலக்கும் நோய் அணுக்களை சாகடிக்கும் திறன் உண்டு. எனவே எந்த நோயும் தாக்காமல் பாதுகாக் கும். அஜீரண குறைபாட்டை போக்கி பசியை உண்டுபண்ணும் ஆற்றலும் விளாம்பழத்திற்கு உண்டு. முதியவர்களின் பல் உறுதி இழப்பிற்கு விளாம்பழம் நல்ல மருந்து.

சுக்கு மருத்துவக் குணங்கள்



1. சுக்குடன் சிறிது பால் சேர்த்து, மைய்யாக அரைத்து, நன்கு சூடாக்கி, இளஞ்சூடான பதத்திற்கு ஆறினதும், வலியுள்ள கை, கால் மூட்டுகளில் பூசிவர மூட்டுவலி முற்றிலும் குணமாகும்.

2. சுக்கைத் தூள் செய்து, எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தால் பித்தம் விலகும்.

வாழைப்பூ



இயற்கையின் படைப்புகளில் பூக்கள் மிகவும் அற்புதமானது. ஒவ்வொரு பூவூம் ஒவ்வொரு விதமான அழகையும் மருத்துவக் குணங்களையும் கொண்டுள்ளது.

வீட்டு வைத்தியக் குறிப்புகள்


சீரகம்:

சீரகத்தைப் பொன்வறுவலாக வறுத்து தூள் செய்து கொதிநீரில் இட்டு காய்ச்சிக் குடித்தால் உண்ட உணவை சீரணமாக்கி பசியைத் தூண்டுவதுடன் உணவுப்பாதையையும் சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது. கேரளத்து மக்கள் எல்லோரது வீட்டிலும் இந்த சீரக வெள்ளம் இருக்கும்.

தொண்டைக்கட்டிற்கு:

இயற்கையின் அழகு சாதனப்பொருட்கள்--மருத்துவ டிப்ஸ்



தினசரி புதுப்புது அழகு சாதனங்களின் விளம்பரத்தை நாம் பார்க்கிறோம். எது உங்கள் சருமத்துக்கு தீங்கு விளைவிக்காதது, எதை வாங்கினால் நீங்கள் விரும்பும் பயன் கிடைக்கும் என்ற கேள்விகளுக்கு பதில், நீங்கள் அந்தப் பொருட்களை வாங்கி பயன் படுத்திய பிறகுதான் கிடைக்கும்!. ஆனால் எந்த விதமான பக்க விளைவுகளும் இல்லாமல் நம் அழகுக்கு அழகு சேர்க்க, இயற்கை பல அழகு சாதனங்களை நமக்கு வழங்கியுள்ளது. இவற்றை தேடி நாம் வெகு தூரம் செல்ல வேண்டாம். உங்கள் சமையல் அறையிலேயே கிடைக்கும் பொருட்கள்தான் இவை. 

முட்டைக் கோஸ் மருத்துவக் குணங்கள்



உருண்டு திரண்ட முட்டைக்கோஸ், சத்துக்கள் நிறைந்தது. சீனர்களின் சுறு சுறுப்புக்கு அவர்கள் தங்கள் உணவில் முட்டைக்கோஸை முக்கிய உணவுப் பொருளாக சேர்ப்பது ஒரு காரணம் எனலாம். உலகம் முழுவதும் விளையும் காய்கறிகளில் ஒன்றான முட்டைக்கோஸ் தன்னிடத்தில் அடக்கியுள்ள சத்துக்களை அறிந்து கொள்வோம்...

பயனுள்ள இயற்கை மருத்துவக் குறிப்புகள்



* நெல்லிக்காய், நெல்லிக்காய் ஊறுகாய், நெல்லி வத்தல் சாப்பிட்டு வர இளம் நரை மறையும்.

சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் - ஒரு மாதத்தில்


சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்:
குழந்தைகளுக்கு அதிக சத்துகளை அளிக்கும் பேரிக்காய்..!
பேரிக்காயை காய் என்று அழைத்தாலும் அது பழம் தான். இதனை நாட்டு ஆப்பிள் என்று அழைப்பார்கள்.வெளித்தோற்றத்திற்கு பச்சை காய் போல் தோன்றும். ஆனால் இது பழம் தான். சில காய்கள் பழுப்பு நிறத்தில் காணப்படும். இவை மலைப் பகுதிகளில் விளையக்கூடியது.

வெங்காயத்தை அப்படியே சாப்பிடுங்க



வெங்காயத்தின் தன்மை மற்றும் பயன்கள் குறித்த ஆய்வு ஒன்றை பார்சிலோனா பல்கலைக் கழக விஞ்ஞானிகள் சமீபத்தில் நடத்தினர். இந்த ஆய்வில் பச்சையாக உட்கொள்ளப்படும் வெங்காயம் மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை விரைவாக அதிக அளவில் தூண்டுகிறது என்ற உண்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மாதுளம்பூவின் பயன்கள்


மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும்.மாதுளம் பூச்சாறு, அருகம்புல் சாறு சமமாகச் சேர்த்து வேளைக்கு 30 மில்லி வீதம் தினசரி மூன்று வேளையாக மூன்று தினங்களுக்குக் கொடுத்தால் பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கு நிவர்த்தியாகும்.

மருந்தாகும் உணவு வகைகள்



* சமையலுக்குக் கைக்குத்தல் அரிசியைப் பயன்படுத்துவது மிக மிக நல்லது. கைக்குத்தல் அரிசியில் நார்ச் சத்துக்கள் நிறைந்துள்ளன.

* சைக்கிள் கேப்பில் எல்லாம் ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக தானியங்கள், முளைகட்டிய பயறு போன்றவற்றைச் சாப்பிடலாம். 

மருந்தாகும் உணவு வகைகள்



* நீங்கள், தினமும் ஐந்து விதமான பழங்களையும், சில காய்கறிகளையும் உணவாக எடுத்துக் கொள்பவரா..? ஆம் என்றால்… ஆரோக்கியமும் அழகும் எப்போதும் உங்க பக்கம்தான்!

பாசிப்பயறின் மருத்துவக் குணங்கள்


பாசிப்பயறு சத்தான பயறு வகைகளில் ஒன்றாகும். பண்டைய காலம் முதலே இந்தியாவில் விளைவிக்கப்பட்டு வந்த இந்த வகை பயறுகள், பின் தெற்கு சீனா, இந்தோ சீனா, மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் விளைவிக்கப்பட்டது. இதில் அதிக அளவு கால்சியமும், பாஸ்பரசும் அடங்கியுள்ளது. புரதம், கார்போஹைடிரேட், சிறிதளவு இரும்புச்சத்தும் அடங்கியுள்ளது. நார்ச்சத்தும், தாதுப்பொருட்களும் இதில் அடங்கியுள்ளன.

பயமுறுத்துகிறதா பருமன்?

கொழுப்புகள் கல்லீரலில் உற்பத்தி செய்யப்படுகின்றன. அளவுக்கு அதிகமான கொழுப்பு உடலில் சேர்வதால் உடல்பருமன் ஏற்படுகிறது. 

மரவள்ளிக் கிழங்கு (Tapioca Cassava)

மரவள்ளி (உள்நாட்டுப் பெயர்கள்: குச்சிக் கிழங்கு, குச்சிவள்ளிக் கிழங்கு) என்பது இயுபோபியேசியே தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வகைச் செடி. தென் அமெரிக்காவையும் மேற்கு ஆப்பிரிக்காவையும் தாயகமாகக் கொண்ட இச்செடி இன்று ஆப்பிரிக்காவில் அதிகம் பயிர் செய்யப்படுகிறது. மேற்கு ஆப்பிரிக்க நாடான நைசீரியாவே இன்று உலகின் மிகப்பெரிய மரவள்ளி உற்பத்தி செய்யும் நாடாக உள்ளது. வெப்பவலய, துணைவெப்பவலயப் பகுதிகளில் ஆண்டுப் பயிராகப் பயிரிடப்படும் மரவள்ளியிலிருந்து உணவுக்குப் பயன்படக்கூடிய கிழங்கு பெறப்படுகின்றது. இது மாவுப்பொருளைத் தரும் ஒரு முக்கிய உணவுப் பண்டமாகும். மனிதர்களின் உணவுக்கான கார்போவைதரேட்டுக்களைத் தருவதில் உலகின் மூன்றாவது பெரிய மூலம் மரவள்ளியாகும்.

திராட்சை

நினைக்கும்போதே இனிக்கும் பழங்களில் ஒன்று. இவற்றில் கறுப்புத் திராட்சை, பச்சைத் திராட்சை, பன்னீர்த் திராட்சை, காஷ்மீர்த் திராட்சை, ஆங்கூர் திராட்சை, காபூல் திராட்சை, விதையில்லா திராட்சை என பல வகையுண்டு. இனிப்பு மற்றும் சுவைமிகுந்தது திராட்சை. கருப்பு, வயலட், பச்சை கலர்களில் கிடைக்கிறது. இதன் இனிப்பு உடனடியாக இரத்தத்தில் கலக்கும் சிறப்பை பெற்றது. நோயாளிகளு
க்கு ஆரஞ்சுக்கு அடுத்தபடியாக திராட்சை அருமையான உணவு.

ஓரிதழ் தாமரை

மூலிகைகளின் சொர்க்க பூமியான நம் பாரதத்தில் அவதரித்த சித்தர்கள், ஞானிகள், ரிஷிகள், தங்களின் தவப்பயனால் இயற்கையின் கொடையான இந்த மூலிகைகள் மனித இனத்தை எப்படி பாதுகாக்கிறது என்பதை கண்டறிந்து சொன்னார்கள்.

இளநரையா? டை அடிக்க வெக்கமா? இதோ மூலிகை தைலம்

இன்றைய காலகட்டத்தில் சிறு வயது முதலே ஆண் பெண் இருபாலருக்கும் தலைமுடி நரைத்து விடுகிறது. ஆனால் நம் முன்னோர்கள் 60 வயது வரை தலைமுடி நரைக்காமலும் முடி உதிராமலும் அடர்ந்த கேசத்துடன் வாழ்ந்தார்கள். அதற்குக் காரணம் அவர்களின் உணவுமுறையும், பழக்க வழக்கங்களுமே.

இயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்:-

1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்!

2. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது.

வாழைத்தண்டு


அதிக நீர்ச்சத்து, நார்ச்சத்து கொண்டது. சர்க்கரைச்
சத்தும் உள்ளது. கொழுப்பைக் குறைக்கும். வயிற்றுப்
புண்களைச் குணப்படுத்தும். சிறுநீர் எரிச்சலைப் போக்கும்.
ஊளைச் சதையைக் கரைத்து, உடல் பருமனைக் குறைக்கும்

ஆரோக்கியமான சருமத்தை பெறுவதற்கான சில இயற்கை வைத்தியங்கள்!!!


ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் சருமத்தை வைத்துக் கொள்ள வேண்டும் என்று அனைத்து பெண்களுக்கும் ஆசை உண்டு. மிக முக்கியமாக கல்லூரிக்கு செல்லும் பெண்கள் இதை மிக அவசியமாக கருதுகின்றனர். ஏனெனில் அவர்கள் மற்றவர்களை விட அழகாகவும் தனித்துவமாகவும் தெரிய வேண்டுமென்று விரும்புகின்றனர். இயற்கையான சரும பராமரிப்பு என்பது பெண்களிடையே பெரும் முக்கியத்துவத்தை பெற்றுள்ளது. இவற்றை இயற்கையான முறையில் பெற விரும்பும் பெண்கள், இயற்கை மூலிகைகளை பயன்படுத்துவதில் பெரும் ஆர்வம் காட்டுகின்றனர்.

உடல் பருமனைக் குறைக்க சில வழிகள்

* இஞ்சியைத் தோல் சீவி அரைத்து, ஒரு கரண்டி சாறு எடுத்து, அதனுடன் சம அளவு தேன் சேர்த்து ஒரு டம்ளர் இளம் சூடான நீரில் கலந்து, கால...ையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இஞ்சியில் உள்ள ஜின்ஜெரால் (Gingerol), ஜின்ஜிபெரின் (Zingiberine) மற்றும் தேன் ஆகியவை செரிமானத்தைத் தூண்டுவதுடன் தேவையற்ற கொழுப்பையும் எரிக்கும்.

முடி உதிர்வதைத் தடுக்க ஓர் எளிய வழி!

மதிய வாக்கில், கொத்து வேப்பிலையை பறித்து, சுத்தம் செய்து, இரண்டு லிட்டர் தண்ணீரில் போட்டு,
தட்டு போட்டு மூடி கொதிக்க வைக்க வேண்டும்.
மூடியை எக்காரணம் கொண்டும் திறக்கக் கூடாது.
பின் அதை அப்படியே இறக்கி வைக்க வேண்டும்.
மறுநாள் காலையில் வேப்பிலைகளை எடுத்து விட்டு,
அந்தத் தண்ணீரில் கூந்தலை அலச வேண்டும்.
வாரம் ஒரு முறை இப்படி செய்தாலே போதும்.
அவ்வளவுதான், முடி உதிர்வது போயே போச்சு!

குடிநீரில் எலுமிச்சை சாறு சிறுநீரக கல்லை தடுக்கும்


குடிநீரில் எலுமிச்சை சாறு கலந்து அருந்தினால், சிறுநீரக கல்லை தடுக்கலாம் என்று கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது. உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சிமிஷன் மருத்துவமனையில் சிறுநீரக நோய் விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் நோயாளிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. 

இதில் டாக்டர் சம்பத்குமார் பேசியதாவது: 

இயற்கை மருத்துவக் குறிப்புகள்

சளிக் காய்ச்சல்
புதினா கீரையை நீரில் போட்டு கொதிக்க வைத்து டீ டிகாஷன் போல் செய்து சாப்பிட்டால் சளியால் வரும் காய்ச்சல் குணமாகும்.

இருமல், தொண்டை கரகரப்பு
பாலில் பூண்டைப் போட்டு காய்ச்சிக் குடித்தால் இருமல், ஜலதோஷம், தொண்டைக் கரகரப்பு போகும்.

வெந்தயக்கீரை

சாதாரணமாகச் சமையலில் பயன்படுத்தப்படும் வெந்தயத்தின் தழைதான் வெந்தயக்கீரை . இது சத்து நிறைந்த கீரை. வெந்தயம் விதைகளின் மூலம் பயிரடப்படுகிறது.

அருகம்புல்

எல்லா நோய்களுக்கும் ஏற்ற சிறந்த மருந்து. காலையில் 9.00 மணிக்கு பசி ஆரம்பித்தவுடன் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். பசிப்பதற்கு முந்தியே சாப்பிடுவது தவறு. அருகம்புல் சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து ஒரு பழம் சாப்பிட்டால் போதும். அடுத்து மதியச் சாப்பாடுதான். இந்த மாதிரி செய்தால் எல்லா நோய்களும் குணமடையும். உடல் எடை குறைய, கொலாஸ்டிரல் குறைய, நரம்புத்தளர்ச்சி நீங்க, இரத்தப்புற்று குணமடைய அருகம்புல் ஒரு உலகப் புகழ்வாய்ந்த டானிக். இரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகா¢க்கச் செய்வதில் சிறந்தது அருகம் புல்தான். தோல் வியாதிகள் அனைத்தும் அருகம்புல்லில் நீங்கும். இரத்தத்தில் உள்ள விஷத்தன்மைகளை வெளியேற்றுவதில் திறமையானது. விநாயகர் கோயில்களில் அருகம்புல் கிடைக்கும்.

புதினா கீரையின் மருத்துவக் குணங்கள்



கறிவேப்பிலை மற்றும் கொத்துமல்லியைப் போலவே புதினாவும் உணவுக்கு மணமூட்டுவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது.

முடி உதிர்வைத் தடுக்க எளிய வழிமுறைகள்


* முட்டை வெள்ளைக் கருவை நன்கு அடித்து தலையில் தேய்த்து, ஊறவைத்து மாதம் இரண்டு முறை குளித்து வந்தால் பளபளக்கும் உங்கள் கூந்தல்.

நீரிழிவைக் கட்டுப்படுத்தும் மூலிகைகள்



இந்தியாவில் பெரும்பாலான மக்களை வாட்டி வதைக்கும் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் இயற்கை மூலிகைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்களேன்.

முட்டை சாப்பிட்டால் மார்பகப்புற்றுநோய் வராதாம்: ஆய்வில் தகவல்....



தினசரி ஒரு முட்டை சாப்பிடுபவர்களுக்கு மார்பகப்புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைவதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

தாளிக்கீரை



இது நறுந்தாளி என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் தானாக விளைந்து வீணாக போகிறது. கிராமப்புறங்களில் பரிச்சயமுள்ளவர்கள் இந்த கீரையை பார்த்திருக்கலாம்.

திடீர் மழையைச் சமாளிக்க


* மழை நேர வைரஸ் காய்ச்சலுக்கு, உடனடியாக கொடுக்க, நிலவேம்பு கஷாயம் பெஸ்ட். நம் வீட்டிலேயே நிலவேம்பு பொடியை வாங்கி வைத்துக் கொண்டால் நல்லது. இந்த நிலவேம்பு பொடியுடன் தண்ணீர் சேர்த்து காய்ச்சி, பனங்கற்கண்டு சேர்த்து, கொதிக்க வைத்து, வடிகட்டி, வைரஸ் காய்ச்சல் உள்ளவர்களுக்கு கொடுக்கலாம். உடனடியாக காய்ச்சல் பறந்தோடி விடும்.

பெண்கள் இதய நோயை தக்காளி கட்டுப்படுத்தும்



அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகம் நடத்திய இது தொடர்பான ஆய்வை ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. அதில், கூறியுள்ளதாவது:

புத்துணர்ச்சி தரும் உலர் திராட்சை



திராட்சையில் நிறைய வகைகள் உள்ளது. அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய திராட்சை உலர் திராட்சை தான். இந்த பழங்கள் உலர வைத்து எடுப்பதால் உலர் திராட்சை பழம் என்கிறோம்

பப்பாளி பழத்தின் மருத்துவக் குணங்கள்:-


1. பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும்.

2. பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும். தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும்.

கஸ்தூரி மஞ்சள் மருத்துவக் குணங்கள்



கஸ்தூரி மஞ்சள் சாதாரண மஞ்சளை விடச் சற்று மணம் அதிகமுள்ளது. தோல் நோய்களைப் போக்கும் தன்மையைப் பெற்றது.

பாட்டி வைத்தியம்..!




1. புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும்.

2. குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிய நாளில் மட்டும் கீரை சாப்பாட்டுக்கு கொடுக்கக் கூடாது.

அல்சர் இருந்தால் எப்படி குணப்படுத்துவது?



அல்சர் என்பது உடலில் பல்வேறு பகுதிகளில் ஏற்படும் புண்களைக் குறிக்கும். புண்கள் ஏற்பட்டு, அப்புண்ணில் வலி ஏற்பட்டு, அந்த இடம் பாதிப்படைந்து, வைரஸ், பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளால், அவற்றில் இரண்டாம் தொற்று ஏற்பட்டு, உடல் சோர்வடைந்து, சிகிச்சையில் பெரும் தாமதத்தை ஏற்படுத்துவதே அல்சரின் அறிகுறிகளாகும்.

கால் ஆணி.


பாதங்களைத் தாக்குவதில் பித்தவெடிப்பிற்கு அடுத்தபடியாக இருப் பது கால் ஆணி. இது பாதத்தைத் தரையில் வைக்க முடியாத அள விற்கு பிரச்சனையை ஏற்படுத்து ம். கால் ஆணி என்பது அதிகமான உடல் அழுத்தம் காரணமாக உரு வாகிறது.

கற்றாழை

ஏற்கனவே கற்றாழை பயன்படுத்தி இருந்தால் அதன் பயன்பாடு, ஆரோக்கிய நலன்கள் ஆகியவைப் பற்றித் தெரிந்திருக்கும். முகத்தை அழகுபடுத்த காயங்கள், சூடுகளில் ஏற்படும் கட்டி மறைய என பலவற்றிற்கு கற்றாழை பயன்படுகிறது. ஆனால் கற்றாழையை உட்கொள்வதால் ஏற்படும் உடல் நல நன்மைகளைத் தெரிந்து கொள்வோமா?

Saturday, 14 May 2016

Important links


🔘 GOVERNMENT INTRODUCED ONLINE SERVICES 🔘

*Obtain:
🔴1. Birth Certificate
http://www.india.gov.in/howdo/howdoi.php?service=1

🔴2. Caste Certificate
http://www.india.gov.in/howdo/howdoi.php?service=4

🔴3. Tribe Certificate
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=8

Friday, 13 May 2016

மத்தி மீன் (சாளை மீன் )


சர்க்கரை நோய் உள்ளவர்கள், மத்தி மீன் (சாளை மீன் )சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு திறன் அதிகரித்து ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தலாம். மத்தி மீன்களில் கால்சியம் அதிகம் இருப்பதால்

...Recently Published Post...

குளிக்கும் போது...

குளிக்கும் போது வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று குளிக்கவேண்டும். (இவை இரண்டும் உத்தம திசைகள். (கர்மம் செய்தபின்னும், மயானத்திற்க...