Friday 3 April 2015

திருமணத்தடையை நீக்கும் திருப்புகழ் பாடல்


கீழ்க்காணும் திருப்புகழ் பாடலை தினமும் மூன்று தடவை வீதம்,48 நாட்கள் தொடர்ந்து வீட்டுப் பூஜையறையில் பாடிட திருமணத் தடை நீங்கும்.யார் பாடுகிறார்களோ,அவர்களுக்கு இந்த 48 நாட்களில் இடையில் பாடமுடியாத சூழல் வந்தால்,அவருக்குப் பதிலாக குடும்ப உறுப்பினர் வேறொருவர் அந்த நாட்களில் பாடலாம்.மனதுக்குள்ளும் பாடலாம்.


நீலங் கொள் மேகத்தின் மயில்மீதே
நீவந்த வாழ்வைக்கண் டதனாலே
மால்கொண்ட பேதைக்குள் மணநாறும்
மார்தங்கு தாரைத்தந் தருள்வாயே
வேல்கொண்டு வேலைப்பண் டெறிவோனே
வீரங்கொள் சூரர்க்குங் சூலகாலா
நாலந்த வேதத்தின் பொருளோனே
நான் என்று மார்தட்டும் பெருமாளே;

விறல்மாரன் ஐந்து மலர்வொளி சிந்த
மிகவானில் இந்து வெயில்காய
மிதவாடை வந்து தழல்போல ஒன்ற
வினைமாதர் தம்தம் வசைகூறக்
குறவாணர் குன்றில் உறைபேதை கொண்ட
கொடிதான துன்ப மயில்தீர
குளிர்மாலை யின்கண் அணிமாலை தந்து
குறைதீர வந்து குறுகாயோ
மறிமான் உகந்த இறையோன் மகிழ்ந்து
வழிபாடு தந்த மதியாளா
மலைமாவு சிந்த அலைவேலை அஞ்ச
வடிவேல் எறிந்த அதிதீரா
அறிவால் அறிந்துன் இருதாள் இறைஞ்சும்
அடியார் இடைஞ்சல் களைவோனே
அழகான செம்பொன் மயில்மேல் அமர்ந்து
அலைவாய் உகந்த பெருமாளே!

No comments:

Post a Comment

...Recently Published Post...

குளிக்கும் போது...

குளிக்கும் போது வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று குளிக்கவேண்டும். (இவை இரண்டும் உத்தம திசைகள். (கர்மம் செய்தபின்னும், மயானத்திற்க...