Friday, 3 April 2015

கடன் தீர பரிகாரம்


கடன் தீர சாஸ்திரத்தில் சில பரிகாரங்கள் சொல்லப்பட்டுள்ளது. அஸ்வினி அல்லது அனுஷம் நட்சத்திரம் உள்ள நாளில் அசல் தொகையில் ஒரு பகுதியை கொடுத்தால் கடன் சுமை படிப்படியாக குறையும்.
செவ்வாய்க்கிழமை செவ்வாய் ஓரையில் கடனை திருப்பித் தரலாம். ஞாயிற்றுக்கிழமையுடன் கூடிய சதுர்த்தி திதியிலும், சனிக்கிழமையுடன் கூடிய சதுர்த்தி திதியிலும், செவ்வாய்க்கிழமையுடன் கூடிய நவமி திதியிலும் குளிகை நேரத்தில் அசல் தொகையில் ஒரு பகுதியை கொடுத்தால் கடன் அடைபடும். தினசரி பக்தியுடனும் நம்பிக்கையுடனும் கந்த சஷ்டி கவசம் படித்து வந்தால் பணப்பிரச்னைகள் காற்றில் பறக்கும். சஷ்டி திதியன்று முருகன் ஸ்தலங்களில் தொடர்ந்து கவசம் படிக்க கடன், வியாதி, சத்ரு பயம் விலகி ஓடும். தினசரி சரவணபவ என்று 108 முறை எழுதி வரலாம்.
ஓம்ஸ்ரீம் கம்ஸௌம்யாய கணபதியே வரவரத சர்வ ஜனம்மே வசமானய் ஸ்வாஹா.. ஹிருதயாதி ந்யாஸ நிக்விமோக...
இந்த மந்திரத்தை தினசரி 108 முறையோ அல்லது அதற்கு மேலோ நம்பிக்கை, சிரத்தையுடன் மனதுக்குள் ஜெபித்து வந்தால் ருணதோஷம் நீங்கும்.

No comments:

Post a Comment

...Recently Published Post...

குளிக்கும் போது...

குளிக்கும் போது வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று குளிக்கவேண்டும். (இவை இரண்டும் உத்தம திசைகள். (கர்மம் செய்தபின்னும், மயானத்திற்க...