Thursday, 14 March 2013

அறிஞர்களின் அமுதமொழிகள்

* பொய் சொல்வது கேவலம் அல்ல. அது மனித இயல்புதான். ஆனால், அந்தப் பொய்யை நம்புவதுதான் கேவலம் – தோரோ.


* அறிவாளி தன் தவறை உணர்ந்து மனதை மாற்றிக் கொள்வான். முட்டாள் அதனை எப்போதுமே செய்ய மாட்டான் – நிக்கோபானி.
...
* ஒரு மனிதன் நிமிர்ந்து நிற்க வேண்டும். மற்றவர்கள் அவனை நிமிர்த்தும்படி இருக்கக் கூடாது – சிம்மன்ஸ்.

* மரியாதைக்கு விலை இல்லை. ஆனால் அது எல்லாவற்றையும் விலைக்கு வாங்கி விடுகிறது – வில்லியம்டே.

* இதயம் ரோஜா மலராக இருக்கும் போது நினைவும் நறுமணமாகத்தான் இருக்கும் – மெஹர்பாபா.

* இருட்டை சபித்துக் கொண்டிருப்பதை விட்டுவிட்டு ஒரு சிறு மெழுகுவர்த்தியை ஏற்றுங்கள் – கான்பூசியஸ்.

* பல விஷயங்களை ஒரே சமயத்தில் தொடங்குபவன் எதையும் முடிக்க மாட்டான் – தாமஸ் கார்னல்.

* ஒருவனை மனிதனாக ஆக்குபவவை பதவிகளும், வசதிகளும் அல்ல. அவனுக்கு ஏற்படும் இடைïறுகளும், துன்பங்களுமே ஆகும் – மாத்ïஸ்.

No comments:

Post a Comment

...Recently Published Post...

குளிக்கும் போது...

குளிக்கும் போது வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று குளிக்கவேண்டும். (இவை இரண்டும் உத்தம திசைகள். (கர்மம் செய்தபின்னும், மயானத்திற்க...