Sunday 10 March 2013

நலம் தரும் பதிகங்கள்!



மூவர் முதலிகள் அருளிய தேவாரப்பதிகங்கள், அற்புதங்கள் பல புரிந்தவை. இறந்தோரை உயிர்ப்பித்தன. ஆண்பாலைப் பெண்பால் ஆக்கின! தீ, நீர் என்பவற்றின் இயற்கையை எதிர்த்து வெற்றி கண்டன. இப்படிப் பல!
இத்தகைய பதிகங்கள் நமக்கு எத்தனையோ அல்லல்களை நீக்க வழிகாட்டுகின்றன. அவற்றில் முக்கியமான சிலவற்றை இங்கே காணலாம். கூடவே தரப்பட்டுள்ள இழைகளில், மொத்தப் பதிகத்தையும் பெற்றுப் படியுங்கள், அல்லது கணினியில் சேமித்துக்கொள்ளுங்கள்.நாளாந்த வாழ்வில் அவற்றைப் பாடி இறையருள் பெற்றுய்யுங்கள். திருச்சிற்றம்பலம்.

1. தடைப்பட்டிருக்கும் திருமணம் நடைபெற ஓதவேண்டிய பதிகம்:
திருமருகல் ‘சடையாய் எனுமால் சரண்நீ எனுமால்’ - (ஞானசம்பந்தர்)
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=2&Song_idField=2018

2. திருமணம், பிறந்தநாள் போன்ற சுபநிகழ்ச்சிகளுக்கான மங்களப் பதிகம்:
ஞானசம்பந்தப் பெருமான் பெற்றோரை வணங்கிப் பாடிய திருக்கழுமலப் பதிகம்.
‘மண்ணில் நல்லவண்ணம் வாழலாம்’
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=3&Song_idField=3024

3. கோள்களின் பாதிப்பகல:
சம்பந்தர் பாடிய கோளறு பதிகம்.
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=2&Song_idField=2085

4. வறுமை நீங்க, செல்வம் கொழிக்க:
சம்பந்தர் பொன்வேண்டிப் பாடிய திருவாவடுதுறைப் பதிகம்
“இடரினும் தளரினும்”
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=3&Song_idField=3004

5. இனந்தெரியாத நோய்கள் நீங்க:
கொல்லிமழவனின் மகவின் முயலகன் என்னும் பிணி போக்க வேண்டி சம்பந்தர் பாடியருளிய திருப்பாச்சிலாசிரமப்
பதிகம்.
‘துணிவளர் திங்கள்’
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=1&Song_idField=1044

6. விடம் தீர்க்கும் பதிகம்:
அரவம் தீண்டி மாண்ட அப்பூதி அடிகளாரின் மகனை மீண்டும்
உயிர்ப்பித்தருள வேண்டி அப்பர் பெருமான் பாடிய பதிகம்.
“ஒன்றுகொலாம்”
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=4&Song_idField=4018

7. பார்வைக் குறை நீக்க வேண்டிப் பாடும் பதிகம்:
சுந்தரமூர்த்தி சுவாமிகளின் கச்சியேகம்ப பதிகம்
‘ஆலந்தான் உகந்து அமுது செய்தானை’
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=7&Song_idField=7061

8. குரல்வளம்பெற, பேச்சுக்குறைபாடுகள் நீங்க:
மாணிக்கவாசகர் தில்லையில் நல்கிய திருச்சாழல்
‘பூசுவதும் வெண்ணீறு’
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=8&Song_idField=8112

9. குழந்தைகளின் பாதுகாப்புக்கு:
சுந்தரமூர்த்தியார் முதலை விழுங்கிய மதலையினை மீண்டும் உயிர்ப்பித்து மீட்ட திருப்புக்கொளியூர்ப் பதிகம்.
“எற்றான் மறக்கேன்”
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=7&Song_idField=7092

10. தீராத வலிகளையும் போக்க:
அப்பர்பெருமானின் திருவதிகைப் பதிகம்
‘கூற்றாயினவாறு விலக்ககலீர்’
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=4&Song_idField=4001

11. நோய்களும் துன்பங்களும் நீங்க:
கொடிமாடச் செங்குன்றூரில் தங்கியிருந்த சம்பந்தர் அங்கு அடியார்களை வாட்டிய குளிர்காய்ச்சலைப் போக்கியருள பாடிய திருநீலகண்டப்பதிகம்.
‘அவ்வினைக்கு இவ்வினையாம்’
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=1&Song_idField=1116

12. தன்னம்பிக்கை வளர: அப்பர் பெருமானின் ‘நாமார்க்கும் குடியல்லோம்’
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=6&Song_idField=6098
மற்றும் ஆனை மிதிக்க வருகையில் பாடிய ‘சுண்ணவெண் சந்தன’ என்ற பதிகமும்.
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=4&Song_idField=4002

13. இறையருளைப் பூரணமாகப் பெற:
அப்பரடிகளின் வடமொழி திருவுருத்திரத்தின் (ஸ்ரீருத்ரம்) தமிழ்ப்பெயர்ப்பான திருத்தாண்டகம்.
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=6&Song_idField=6055
.
14. மரணபயம் நீங்க:
“தமிழ் மகா மிருத்துஞ்செய மந்திரம்” எனப்போற்றப்படும் அப்பர் பெருமானின் காலபாசத் திருக்குறுந்தொகை.
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=5&Song_idField=5092

15. பற்றிலான் தாள் பற்றிப் பற்றறுக்க:
மூவர்முதலிகளின் இறுதிப்பதிகங்களான
“காதலாகிக் கனிந்து”,(சம்பந்தர்)
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=3&Song_idField=3049“எண்ணுகேன் என்சொல்லி” (அப்பர்)
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=6&Song_idField=6099
“தானெனை முன்படைத்தான்” (சுந்தரர்)

No comments:

Post a Comment

...Recently Published Post...

குளிக்கும் போது...

குளிக்கும் போது வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று குளிக்கவேண்டும். (இவை இரண்டும் உத்தம திசைகள். (கர்மம் செய்தபின்னும், மயானத்திற்க...