Friday, 8 March 2013

கணபதியின் திருவருள் ...

பாரம்பரியமாக 32 கணபதி உருவங்கள் சொல்லவார்கள். அவை; 
பாலகணபதி, தருணகணபதி, பக்திகணபதி, வீரகணபதி, சக்திகணபதி, துவிஜகணபதி, சித்திகணபதி, உச்சிஷ்டகணபதி, விக்னகணபதி, க்ஷிப்ரகணபதி,
ஹேரம்பகணபதி, லக்ஷ்மிகணபதி, மஹாகணபதி, விஜயகணபதி, நிருத்தகணபதி, ஊர்த்துவகணபதி, ஏகாக்ஷ்ரகணபதி, வரகணபதி, திரயாக்ஷ்ரகணபதி, க்ஷிப்ரப்ரசாதகணபதி, ஹரித்திராகணபதி, ஏகதந்தகணபதி, ஸ்ருஷ்டிகணபதி, உத்தண்டகணபதி, ரணமோசனகணபதி, துண்டிகணபதி, துவிமுக கணபதி, த்ரிமுககணபதி, சிங்ககணபதி, யோககணபதி, துர்க்காகணபதி, சங்கடஹரகணபதி.



குடும்ப மேன்மையைடைய தினமும் காலையில் ஜபிக்க வேண்டிய கணபதி மந்திரம் .....

ஓம் கணபதியே வருக, ஓங்கார கணபதியே வருக,
ரீங் கணபதியே வருக, ரீங்கார கணபதியே வருக,
கங் கணபதியே வருக, எங்கள் குடும்பம் மேன்மையுற
வசிவசி வய நமசிவாய நம
கங்கனாய கனாய வருக ஸ்வாஹா.

ஹரிஓம் கணபதி அங் கணபதி சக்தி கணபதி 
ஐயும் கிலியும் சவ்வும் வாக்கு கிலியும்
பாலா பரமேஸ்வரி 
என் வாக்கிலும், மனதிலும், முகத்திலும்
வந்து நிற்க சுவாஹா.



ஸுமுகசைகதந்தச்ச கபிலோ கஜகர்ணக
லம்போதரச்ச விகடோ விக்னராஜோ விநாயக:
தூமகேதுர் கணாத்யக்ஷ பாலசந்த்ரோ கஜானன
வக்ரதுண்ட சூர்ப்பகர்ண ஹேரம்ப ஸ்கந்தபூர்வஜ.

 

மூஷிக வாஹன மோதகஹஸ்த
சாமரகர்ண விளம்பித சூத்ர
வாமனரூப மஹேஸ்வர புத்ர
விக்ன விநாயக பாத நமஸ்தே.


வக்ரதுண்ட மஹாகாய ஸூர்யகோடி ஸமப்ரப
நிர்விக்னம் குரு மே தேவ ஸர்வ கார்யேஷு ஸர்வதா.

ஓம் ஸ்ரீம் கம் ஸெளம்யாய கணபதியே
வரவரத ஸர்வஜனம்மே வசமானய ஸ்வாஹ.


ஸ்வர்ண கணேசர் தியான மந்திரம் ...

ஓம் நமோ ஹேரம்ப மதமோதித ஹஸ்தி முகாய
மம ஸ்வர்ண ப்ராப்தம் குருகுரு ஸ்வாஹா.

 

உச்சிஷ்ட கணபதி மந்திரம் ...

ஓம் நமோ பகவதே ஏகதம்ஷ்ட்ராய
ஹஸ்தி முகாய,லம்போதராய
உச்சிஷ்ட மகாத்மனே ஆம் ஹ்ரேம் ஹ்ரீம்
கம் கேகே ஸ்வாஹா.

வேப்பங்குச்சி, ஊமத்தம்பூ,நெய் இவைகளால் இவருக்கு ஹோமம் செய்ய வேண்டும்.

 

கடன் தீர கணபதி மந்திரம் ...

ஓம் கணேசருணம் சிந்தி வரேண்யம் ஹீம் பட்ஸ்வாஹா
ஹே பார்வதி புத்ரா ருணம் நாசம் கரோதுமே
ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் அபீஷ்ட சித்திம்மே தேஹி சரணாகத வத்ஸல
பக்த்யா ஸமர்ப்பயே துப்யம் ஸ்வாஹா
ஸ்ரீசக்ரேசாய ஸ்ரீமகா கணபதயே ஸ்வாஹா.

கருங்காலி குச்சியால் கணபதி ஹோமம் செய்ய எவ்வளவு பெரியளவில் கடன் இருந்தாலும் அது மிக விரைவாக தீர்ந்துவிடும்.

 

மஹாஹஸ்தி விநாயகர் ...

ஓம் ஆதூன இந்த்ர க்ஷீமந்தம் சித்ரம் க்ராபம் ஸ்ங்க்ருபாய
மஹாஹஸ்தி தக்ஷ்ணேன

பெரிய்ய்ய துதிக்கையை உடைய இவர் பெரும் தனத்தை (அதாவது கோடிக்கணக்கில் ரூபாய்களாக) அள்ளி வீசுபவராக இருக்கிறார்.
அப்படி நமக்க இவரது அருள் கிடைக்க பின்வரும் மந்திரத்தை லட்ச உருவேற்றினால் போதும்.நமது பாவங்களும் தீரும்.செல்வமும் ஞானமும் நமக்குக் கிடைத்துவிடும்.



வாஞ்சா கல்பலதா கணபதி ...

நமது சகல விருப்பங்களையும் அள்ளி வழங்குவதால் இவருக்கு வாஞ்சை கணபதி என்ற பெயர் ஏற்பட்டது.
பின்வரும் மந்திரம் 100 கோடி சூரியனுக்குச் சமமானதாகும். தகுந்த குரு உபதேசம் மூலமாக இந்த மந்திரத்தை தினமும் ஜபித்துவரவும். நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும்.

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லெளம் கம்
ஐம் கஏஈ லஹ்ரீம்
தத்ஸவிதர் வரேண்யம் கணபதயே
க்லீம் ஹஸகஸல ஹ்ரீம் பர்க்கோ தேவஸ்யதீமஹீ
வரவரத சவு ஸஹல ஹ்ரீம்
த்யோயோநப்ர சோதயாத்
ஸர்வ ஜனம்மே வசமானய ஸ்வாஹா.



செல்வ வளம் பெருக உதவும் லக்ஷ்மி கணபதி மந்திரம் ...

பின்வரும் மந்திரத்தை தினமும் அரை மணி நேரம் வீதம் மூன்றுமாதங்கள் வரையிலும் ஜபித்து வந்தால் பொருளாதார ரீதியான கஷ்டங்கள் அடியோடு நீங்கி,செல்வ வளம் பெருகும்.

சதுர்புஜம் பாசதரம் கணேசம்
ததாங்குச தந்தயுக்தம் த்ரிநேத்ரம்
லம்போதரம் சர்பயக்ஞோபவீதம் கஜகர்ணம்
ரமயாசிஷ்ட பார்ஸ்வ பத்மமாலா
அலங்க்ருத விபும் சாந்தம் சுரகணசேவிதம்
லக்ஷ்மி கணபதிம் பாதபத்மம் பஜேஹம்


1. மேடம், கடகம், துலாம், மகரம் ஆகிய சரலக்னங்களில் ஒரு லக்னம் உதிக்க சித்திரை, உத்திராடம், ரேவதி நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் வளர்பிறையில் வரும் சனிக்கிழமைகளில் சூரிய உதயத்திற்கு பின்னர் வரும் 1மணி 30 நிமிடத்திற்குள் அண்ணளவாக காலை 6.00 மணி முதல் 7.30 இற்குள் தேங்காய் பலி கொடுத்து (தேங்காய் உடைத்து), அருகம்புல்லினால் வினாயகரை அர்ச்சனை செய்து சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தேனும் பாலும், உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மோதகமும், ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பாசிப்பயறும் நைவேத்தியம் செய்து வெற்றிலை, பழம், பாக்கு வைத்து வழிபடவேண்டும். மேற்கூறிய லக்னங்கள் உதிக்க மற்றய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் வளர்பிறை செவ்வாய், சனிக் கிழமைகளில் தேங்காய் பலி கொடுத்து, செவ்வரலி புட்பத்தினால் வினாயகரை அர்ச்சனை செய்து, பசும்பால், அப்பம், வடை, அவல், பொரிகடலை நைவேத்தியம் செய்து வெற்றிலை, பழம், பாக்கு வைத்து வழிபடவேண்டும். இதனால் எடுத்த காரியங்களில் இடர் நீங்கி காரிய சித்தி உண்டாகும். சகல சௌபாக்கியங்களும் கிட்டும்.

 

2. ரிசபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகிய ஸ்திர லக்னங்களில் ஒரு லக்னம் உதிக்க எந்த நட்சத்திரத்தில் பிறந்திருந்தாலும் வளர்பிறை செவ்வாய், சனிக்கிழமைகளில் விடியற்காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் அதாவது காலை 4.00 மணிமுதல் 6.00 மணி வரையான காலத்தில் தேங்காய் பலி கொடுத்து(தேங்காய் உடைத்து), வெள்ளெருக்கு மலர் அல்லது வெள்ளரலி மலர் அல்லது வெண்தாமரை மலரினால் அர்ச்சனை செய்து, பசும் பால், அவல், கொண்டக்கடலை சுண்டல், பாசிப்பயறு நைவேத்தியம் செய்து வெற்றிலை, பழம், பாக்கு வைத்து வழிபடவேண்டும். இதனால் எடுத்த காரியங்களில் இடர் நீங்கி காரிய சித்தி உண்டாகும். சகல சௌபாக்கியங்களும் கிட்டும்.

 

3. மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய உபய லக்னங்களில் ஒரு லக்னம் உதிக்க எந்த நட்சத்திரத்தில் பிறந்திருந்தாலும் வளர்பிறை செவ்வாய், சனிக்கிழமைகளில் சந்தியா காலத்தில் அதாவது காலை 5.15மணி முதல் 6.45மணி வரையிலான காலத்தில் தேங்காய் பலி கொடுத்து(தேங்காய் உடைத்து), மல்லகைப் பூ அல்லது முல்லைப் பூ அல்லது செந்தாமரை மலரினால் அர்ச்சனை செய்து பசும் பால், பால்ப்பாயாசம், பானகம் நைவேத்தியம் செய்து வெற்றிலை, பழம், பாக்கு வைத்து வழிபடவேண்டும். இதனால் எடுத்த காரியங்களில் இடர் நீங்கி காரிய சித்தி உண்டாகும். சகல சௌபாக்கியங்களும் கிட்டும்.



எல்லா விக்னங்களையும் போக்கிஸகல விதமான பயங்களையும் நீக்கிஐஸ்வர்யங்களையும்மோக்ஷத்தையும்அளிக்கவல்லது.

ஓம் அஸ்ய ஸ்ரீ கணபதி த்வாதச நாம ஸ்தோத்ர மஹா மந்த்ரஸ்ய வ்யாஸ ரிஷிஅனுஷ்டுப்ச்சந்தஸ்ரீ மஹா கணபதி:தேவதா மம மானஸ அபீஷ்ட ஸித்யர்த்தே ஜபே விநியோக:

ஓம் நமோ கணபதயே மந்த்ர ஏஷ உதாஹ்ருத:
ஓம் ஸ்ரீ கணபதிவிக்நராஜோ லம்பதுண்டோ கஜாநந:
த்வைமாதுரச்ச ஹேரம்போ ஏகதந்தோ கணாதிப:
விநாயகச் சாருகர்ணபசுபாலோ பவாத்மஜ:
த்வாதசைதானி நாமநி ப்ராதருத்தாய படேத்
விச்வம் தஸ்ய பவேத் வச்யம்   விக்நம் பவேத் க்வசித்
மஹாப்ரேதாசமம் யாந்தி பீட்யதே வ்யாதிப்ரி  
ஸர்வ பாபாத் விநிர்முக்தோஹி அக்ஷயம் ஸ்வர்க்கம் அச்நுதே
ஸ்ரீ பாத்ம புராணம்




சந்தான செளபாக்யத்துடன் அனைத்துக் கலைஞானமும் பெற்று ஆரோக்யமாய் அரும்பெரும் வாழ்வு வாழ வெற்றிகளை அளிக்கும் வித்தகக் கடவுள் கணபதியின் திருவருள் துணை நிற்கும்.

No comments:

Post a Comment

...Recently Published Post...

குளிக்கும் போது...

குளிக்கும் போது வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று குளிக்கவேண்டும். (இவை இரண்டும் உத்தம திசைகள். (கர்மம் செய்தபின்னும், மயானத்திற்க...