நம்மை கொசுக்கள் கடிப்பதற்கு நம் மேலுள்ள கோபமோ, அன்போ காரணமல்ல. நாம் வெளிவிடும் கார்பண்டை ஆக்ஸைடு எனும் வாயுவால் கவரப்பட்டு தான் அவைகள் நம்மை நோக்கி வருகின்றன.
மனிதர்களை கடிப்பதற்கு கொசுவிடம் பற்கள் கிடையாது. உண்மையில் கொசு கடிப்பதில்லை. அதன் தலைப்பகுதியில் ஊசி போன்ற கூர்மையான குழல் பகுதி உள்ளது. அந்த ஊசி மூலம் மனிதர்களின் உடலில் ரத்தத்தை உறிஞ்சுகிறது. ரத்தத்தை உறிஞ்சும் போது அது உறைந்து விடக்கூடாது என்பதற்காக தனது எச்சில் போன்ற திரவத்தை வெளிப்படுத்துகிறது. இதில் உள்ள ரசாயனம் தோலில் பட்டதும் எரிச்சலையும், அரிப்பையும் ஏற்படுத்துகிறது.
ரத்தம் உறிஞ்சும் அளவு ஒவ்வொரு கொசுவுக்கு கொசு மாறுபடும். இருப்பினும் ஒரு கொசு தனது உடல் எடையில் 11/2 மடங்கு அளவு ரத்தத்தை உறிஞ்சும்.
பெண் கொசுக்கள் தான் மனிதர்களின் ரத்தத்தை குடித்து உயிர்கொல்லி நோய்களை பரப்புகின்றன.
கொசு பரப்பும் நோய்கள்:
மலேரியா (Malaria)
சிக்குன்குனியா (chicken kuniya)
மூளைக்காச்சல் (encephalitis)
டெங்குக் காச்சல் (Dengue fever)
ஆனைக்கால் நோய் (Filaria)
கொசுக்களை விரட்ட...
தேங்காய் நார் : காய்ந்த தேங்காய் நார்களை எரித்தால், அதில் இருந்து வரும் புகை கொசுக்களை எளிதில் விரட்டிவிடும். மாலை நேரத்தில் நார்களை நெருப்பில் காட்டி, அனைத்து ரூம்களுக்கும் அந்த புகையை காண்பித்து, சிறிது நேரம் கழித்து பாருங்கள், ஒரு கொசு கூட வீட்டில் இருக்காது. இந்த புகையால் உடலுக்கு பாதிப்பு வராதா? என்று கேட்கலாம். இயற்கை நார்களில் இருந்து ஏற்படுத்தும் புகையால் எந்த பாதிப்பும் ஏற்படாது.
கற்பூரம் : கொசுக்கள் அழிவதற்கு முக்கியமான பொருள், சல்பர். இந்த சல்பர் எங்கு இருந்தாலும், கொசுக்கள் வெளியில் தான் இருக்கும். கற்பூரம் இந்த சல்பரினால் ஆனது. ஆனால், ஒரு பிரச்சனை என்னவென்றால், கற்பூரத்தை காற்றில் வைத்தால், அது உடனே கரைந்துவிடும்.
ஆகவே இந்த கற்பூரத்தை ஒரு தட்டில் வைத்து, எரித்து வீட்டைச் சுற்றி காண்பித்தால், கொசுக்கள் அந்த வாசனைக்கு வராது. இல்லையென்றால், ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு, அதில் கற்பூரத்தைப் போட்டு வைத்தால், அதில் இருந்து வரும் வாசனைக்கு கொசுக்கள் வீட்டை எட்டிக் கூட பார்க்காது.
கெரோசின் மற்றும் கற்பூரம் : இந்த இரண்டுமே மிகவும் சிறந்த, கொசுக்களை அழிக்க வல்ல பொருட்கள் ஆகும். அதற்கு கொசுக்களை அழிக்க கடைகளில் விற்கும் மிசின்களில் உள்ள காலி டப்பாவில், கெரோசினை விட்டு, அதில் சிறிது கற்பூரத்தை விட்டு, மின்சார பிளக்கில் மாட்டி விட வேண்டும். இதனால் கொசுக்கள் வீட்டில் வராமல் இருப்பதோடு, உடல் ஆரோக்கியத்திற்கு எந்த கெடுதலும் ஏற்படாமல் இருக்கும்.
வீட்டுத் தோட்டங்களில் சிலந்திகளை வளர்த்தால் டெங்கு காய்ச்சலை உருவாக்கும் நூற்றுக்கணக்கான கொசுக்களை இயற்கையாக அழிக்க முடியும்.
ஒரு தவளையை வாங்கி வளருங்கள். தவளைகளின் முக்கிய உணவு. கொசுமுட்டைகள் தான்.
வேப்ப இலைகளை புகை போட்டால் கொசுக்கள் ஓட்டம் பிடிக்கும். அத்துடன் உங்கள் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருங்கள். அது தான் உங்களுக்கு நல்லது...!

No comments:
Post a Comment