Sunday, 7 February 2016

தெரிந்ததும் தெரியாததும் ...3

1.பெண்கள் கடவுளையோ அல்லது பெரியவர்களையோ
வணங்கும் பொழுது
பூமியில் விழுந்து வணங்கவேண்டும் ,விழுந்து வணங்கும்போது கூந்தல் தரையில் விழக்கூடாது. காலின் மேலும் விழக்கூடாது இதனால் தெய்வ அருளும், பெரியவர்களின் ஆசியும் பூரணமாகக் கிடைக்காதபடி தேவதைகள் தடுக்கும் அகவே கொண்டை போட்டுக் கொண்டோ - அள்ளி முடிந்து கொண்டோ விழுந்து வணங்க வேண்டும். இதனால் நீண்டநாள் ஆரோக்யமாக வாழலாம் என கூறுகிறது தர்ம சாஸ்திரம்..

2.பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும் . பஞ்சாங்க முறை என்பது தலை, கையிரண்டு முழந்தாளிரண்டு என்னும் ஐந்தும் நிலத்தில் பொருந்தும்படி வணங்குவதாகும்,பஞ்சாங்க நமஸ்காரத்தை மூன்று,ஐந்து அல்லது ஏழு முறை என ஒற்றைப்படையில் செய்வது மிகுந்த நன்மையாகும். இது சிறந்த பெண்களுக்கான உடல் பயிற்சியாகும்.
3. அமாவாசை, தவசம் ஆகிய நாட்களில் வாசலில் கோலம் போடக்கூடாது.
4.அமாவாசை, பௌவுர்ணமி, மாதப்பிறப்பு, ஜன்ம நட்சத்திரம் ஆகிய தினங்களில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க கூடாது.
5.சாமி படங்களுக்கு வாசனை இல்லாத பூக்களைக் ( மலர்களை) சூடக்கூடாது.
6.சங்கு ,மணியின் நாதம் ,பெண்ணின் மார்பகம் பூமியில் படகூடாது (பயனற்று போகும் )
7.மண்ணால் செய்யப்பட்ட விளக்கில் தீபம் ஏற்ற – பீடை விலகும்
வெள்ளி விளக்கில் தீபம் ஏற்ற – திருமகள் அருள் கிடைக்கும்
பஞ்ச லோக விளக்கில் தீபம் ஏற்ற– தேவதை வசியம் உண்டாகும்
வெண்கல விளக்கில் தீபம் ஏற்ற- ஆரோக்கியம் உண்டாகும்
இரும்பு விளக்கில் தீபம் ஏற்ற – சனி கிரக தோஷம் விலகும்
8.குத்துவிளக்கை ஞாயிறு, திங்கள், வியாழன், சனிக்கிழமைகளில் துலக்குவது நல்லது. இதற்கு காரணம் உண்டு. திருவிளக்கில் திங்கள் நள்ளிரவு முதல் புதன் நள்ளிரவு வரையில் தனயட்சணி (குபேரனின் பிரதிநிதியான பதுமநிதியின் துணைவி) குடியிருக்கிறாள். செவ்வாய், புதன் கிழமைகளில் விளக்கை கழுவினால் இவள் வெளியேறிவிடுவாள் என்பது நூல்களில் சொல்லபடுகிறது ...
9.தந்தையும் மகனும் ஒரே நாளில் முகம் மழித்தல் அல்லது முடி இரக்கவோ அல்லது வெட்டவோ கூடாது(இது பற்றி சூடா கர்ம யோகத்தில் கோவிலில் அல்லது கர்மகாரியும் செய்யும் இடத்தில் மட்டும் விலக்கு உண்டு என்று சொல்ல படுகிறது )
10.வீட்டில் மல்லிகை செடி வில்வம் துளசி வளர்க்க பெரும் செல்வம் ஏற்படும்,
மல்லிகை பூவை பணம் வைக்கும் இடத்தில் வைத்தால் பல கெட்ட விரயம் தவிர்க்க படும் ....

No comments:

Post a Comment

...Recently Published Post...

குளிக்கும் போது...

குளிக்கும் போது வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று குளிக்கவேண்டும். (இவை இரண்டும் உத்தம திசைகள். (கர்மம் செய்தபின்னும், மயானத்திற்க...