Sunday, 7 February 2016

தெரிந்ததும் தெரியாததும் ....5


1.வெற்றிலை போடும்போது முதலில் பாக்கை வாயில் போடக்கூடாது.
2.நெய்,தேன், இரண்டையும் ஒரே நேரத்தில் சாப்பிடக்கூடாது.
3.மடியில் தட்டை வைத்துக்கொண்டு, சாப்பிடுதல் கூடாது.

4.நெய்யை இடது கையால், பரிமாரக்கூடாது.
5.சாப்பிட்டவுடன், தயிர் குடிக்ககூடாது. மோர் குடிக்கலாம்
சாப்பிட்டவுடன், குளிக்கக்கூடாது.
6.எப்போது பார்த்தாலும் எதாவது சாப்பிட்டுக்கொண்டே இருக்ககூடாது,
கால் அலம்பாமல் சாப்பிடக்கூடாது.
7.கையை தரையிலோ, டேபிளிலோ ஊனிக்கொண்டு சாப்பிடக்கூடாது.

8.மனைவி கர்பமாக இருக்கும்போது....
A .நகம் வெட்டுதல் ,முகம் மழித்தல்,முடி வெட்டுதல் கூடாது.
B .பிணத்தின் பின்னால் நடந்து போகக்கூடாது,பிணத்தை தூக்கிக்கொண்டு நடக்ககூடாது.
C .வெகுதொலைவில் உள்ள ஊர்களுக்கு போகக்கூடாது,மலைக் கோயில்களுக்கு போகக்கூடாது .
D. தானம் வாங்கக்கூடாது,திதி சாப்பாடு சாப்பிடக்கூடாது.
E .புதிய வீட்டுக்கு குடி போகவோ, அல்லது புதிய வீடு கட்ட ஆரம்பிக்கவோ கூடாது.
F.கோயில் கட்டக்கூடாது,கடலில் குளிக்கக்கூடாது..
8.செவ்வாய் கிழமையும், வெள்ளிகிழமையும், மனைவியுடன் சண்டை போடக்கூடாது. பணம் காசு குறைவு ஏற்படும். அதுபோல் மனைவிமார்களும் கணவனுடன் சண்டை போடக்கூடாது.
9.மாலை ஐந்து மணிக்கு மேல் தயிர் ,
நெல்லிக்காய் ,அகத்திக்கீரை சாப்பிடக்கூடாது.
10.வியாழன், வெள்ளி, சனி, முடி வெட்டுதல் நகம் வெட்டுதல் கூடாது.
11.தீபமேற்ற பயன்படுத்தும் எண்ணெயின் பலனைப் பொறுத்தும் பலன் தெய்வம்கள்...
A.விநாயகர் - தேங்காய் எண்ணெய்
B.மகாலட்சுமி - பசுநெய்
C.குலதெய்வம் - வேம்பு, இலுப்பை, பசுநெய் கலந்த எண்ணெய்
D.பைரவர் - நல்லெண்ணெய் (மிளகு துணியில் கட்டியது )
E.அம்மன் - விளக்கெண்ணெய், வேம்பு, தேங்காய், இலுப்பை, பசுநெய் சேர்ந்த 5 கூட்டு எண்ணெய்
F.பெருமாள், சிவன், முருகன், பிற தெய்வங்கள் – நல்லெண்ணெய் (நல்ல பசு நெய்யும் கலக்கலாம் --கோவில் வாசலில் உள்ள கடைகளில் விற்பதை பயன்படுத்துவதை தவிர்க்கவும் ).
12.ஆண்கள் அவர்களுடைய வருமானத்தையும் பெண்கள் அவர்களின் வயதையும் பிறரிடம் சொல்ல கூடாது --கேட்கவும் கூடாது ...

No comments:

Post a Comment

...Recently Published Post...

குளிக்கும் போது...

குளிக்கும் போது வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று குளிக்கவேண்டும். (இவை இரண்டும் உத்தம திசைகள். (கர்மம் செய்தபின்னும், மயானத்திற்க...