Sunday, 7 February 2016

கண்படுதல் என்னும் திருஷ்டிக்கு....

கண்படுதலுக்கு வீட்டில் உள்ள பெரியோர்கள் காய்ந்த மிளகாய் உப்பு மற்றும் அதனுடன் முன்று வீதிகள் சேரும் இடத்தில இருந்து (வீட்டின் அருகில் ) ஒரு சிட்டிகை மண் எடுத்து இதில் சேர்த்து வீட்டில் உள்ள எல்லா நபரையின் கிழக்கு பார்த்து அமரவைத்து தலையை 3 முற்று முறை (இடது 3 வலது 3) என்று சுற்றி அதன் மேல் அவர்கள் எச்சில் துப்பி 

பிறகு அவர்களை நகர சொல்லிவிட்டு அந்த கலவையை தீ முட்டி எரித்து விடுவார்கள் ...இப்படி செய்வது அருமையான பலன் ...
இதை அஷ்டமி ,அம்மாவசை , ஞாயறு அன்று செய்வது சிறப்பு ...
நமக்கு அம்மா அல்லது பாட்டி செய்யலாம் ,நம் எல்லோருக்கும் நம் வீட்டிற்க்கு சம்பம்தம் உடைய வெளி நபர் செய்யலாம் ...(பெண்கள் செய்வது சிறப்பு )
அவர்கள் செய்யும் பொழுது நீங்க அமர்ந்து குல சாமிகளை நினைத்து வழிபட்டு இருக்க வேண்டும் ..
உங்களுக்கு நீங்களே செய்வது என்பது ஒரு எலும்பிச்சம் பலத்தை எடுத்து சரிபாதியாக அறுத்து நடுவில் குங்குமம் தடவி வலது கைகளில் ஒன்று இடது கைகளில் ஒன்று வைத்து கொண்டு குல சாமிகளை வணங்கி விட்டு உங்கள் தலையை வலது கைகளால் 3 சுற்று இடது கைகளால் 3 சுற்று செய்து தலை முதல் பாதம் வரை இரடையும் மேல் இருந்து காண்பித்து
பிறகு இடது கைகளில் உள்ளதை வலது பக்கமாகவும் ,வலது கைகளில் உள்ளதை இடது பக்கமாகவும் தெருவில் பிழிந்து எரிந்து விடவேண்டும் ....
மேலும்
வெண் கடுகு தூபமாக போடுவது ,
குங்குளியும் ,வலம்புரி காய் ,இடம் புரி காய் ,நாய் மிளகு ,அல்லது கடுகு ,
இவைகுடேன் ஓமம் கலந்து அஷ்டமி ,செவ்வாய் ,அம்மாவசை நாட்களில்
தூபம் போடுவது திருஷ்டி விலகும் ....

No comments:

Post a Comment

...Recently Published Post...

குளிக்கும் போது...

குளிக்கும் போது வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று குளிக்கவேண்டும். (இவை இரண்டும் உத்தம திசைகள். (கர்மம் செய்தபின்னும், மயானத்திற்க...