Sunday, 14 February 2016

வான்கோழி குழம்பு


வான்கோழி பிரியாணி, வான் கோழி வறுவல் என்று வான்கோழியை பலவாறு சுவைத்திருப்பீர்கள். ஆனால் வான்கோழி குழம்பு செய்து சுவைத்ததுண்டா? வான்கோழி குழம்பு மிகவும் சுவையாக இருக்கும். அதிலும் அதை சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால், இன்னும் அருமையாக இருக்கும்.
சரி, இப்போது அந்த வான்கோழி குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வான்கோழி - 1/2 கிலோ
உப்பு - தேவையான அளவு
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
தண்ணீர் - 1 கப்
மசாலாவிற்கு:
எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 2 (நறுக்கியது)
தக்காளி - 3 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மல்லித் தூள் - 2 1/2 டேபிள் ஸ்பூன்
சோம்பு பொடி - 2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிது

செய்முறை:
முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் வான்கோழி, உப்பு, மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 3 விசில் விட்டு, தீயைக் குறைத்து, 15 நிமிடம் வேக வைக்க வேண்டும். பின் அடுப்பை அணைத்து, விசில் போனதும் குக்கரைத் திறந்து தனியாக வைத்துக் கொள்ளவும். பின்னர் வெங்காயம் மற்றும் தக்காளியை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அரைத்த வெங்காயம் மற்றும் தக்காளி விழுதை சேர்த்து, 15 நிமிடம் எண்ணெய் தனியாக பிரியும் வரை வதக்க வேண்டும். பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 1 நிமிடம் கிளறி, உப்பு மற்றும் அனைத்து மசாலா பொடியையும் தூவி கிளற வேண்டும். பின்பு அதில் வேக வைத்துள்ள வான்கோழியை நீருடன் ஊற்றி கிளறி, 10 நிமிடம் மூடி வைத்து கொதிக்க விட்டு இறக்கி கொத்தமல்லியைத் தூவினால், வான்கோழி குழம்பு ரெடி!!!

No comments:

Post a Comment

...Recently Published Post...

குளிக்கும் போது...

குளிக்கும் போது வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று குளிக்கவேண்டும். (இவை இரண்டும் உத்தம திசைகள். (கர்மம் செய்தபின்னும், மயானத்திற்க...