Sunday, 14 February 2016

முட்டை நூடுல்ஸ்

Unave Uyire உணவே உயிரே's photo.


தேவையான பொருட்கள்:
நூடுல்ஸ் - 2 கப் 
காய்கறிகள் - 1 1/4 கப் (முட்டைக்கோஸ், கேரட் மற்றும் குடைமிளகாய்)
சோயா சாஸ் - 3/4 டீஸ்பூன்
சில்லி சாஸ் - 1/2 டேபிள் ஸ்பூன்
முட்டை - 2
பூண்டு - 2 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
ஆலிவ் ஆயில் - 2 டேபிள் ஸ்பூன் + 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் முக்கால் அளவு தண்ணீர் ஊற்றி, 1/2 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விட வேண்டும்.
நீரானது நன்கு கொதிக்க ஆரம்பிக்கும் போது, அதில் நூடுல்ஸை சேர்த்து ஒரு கொதி விட்டு, பின் அதனை இறக்கி, நீரை வடிகட்டி, பின் குளிர்ந்த நீரில் ஒருமுறை அலசி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், முட்டையை உடைத்து ஊற்றி, உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து நன்கு கிளறி, பின் இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்தமும், பூண்டு சேர்த்து வதக்கி, பின் காய்கறிகளை போட்டு மிதமான தீயில் காய்கறிகளில் இருந்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்க வேண்டும்.
அடுத்து, சோயா சாஸ், சில்லி சாஸ் சேர்த்து நெருப்பை அதிகரித்து, சிறிது நேரம் நன்கு கிளறி விட்டு, பின் முட்டையை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். பின்னர் நூடுல்ஸை சேர்த்து 2 நிமிடம் நன்கு கிளறி விட்டு அடுப்பில் இருந்து இறக்கினால், முட்டை நூடுல்ஸ் ரெடி!!!

No comments:

Post a Comment

...Recently Published Post...

குளிக்கும் போது...

குளிக்கும் போது வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று குளிக்கவேண்டும். (இவை இரண்டும் உத்தம திசைகள். (கர்மம் செய்தபின்னும், மயானத்திற்க...