Tuesday, 26 April 2016

ஒரு வரியில் இயற்கை மருத்துவம் பற்றி தெரிந்து கொள்வோம்!!!

01. வரட்டு இருமலுக்கு சிறந்தது திராட்சை.!
02. முதுகுத்தண்டு வலிக்கு பாப்பாளிப்பழம் சாப்பிடு!
03. இரத்த அழுத்தம் குறைய எலுமிச்சை!
04. மூளைக்கு வலியூட்ட வல்லாரை!

Saturday, 16 April 2016

உங்க வீட்டு தீயசக்தி அழியனுமா???

உங்க வீட்டு தீயசக்தி அழியனுமா ,,,???

** வீட்டில் இருக்கும் ஆவி முதலான தீய சக்திகள் வெளியேற ஒரு ஆன்மீகவழிமுறை!!!
** பிள்ளையாருக்கு போட்ட அருகம்புல் மாலையை மறுநாள் வீட்டுக்குக் கொண்டு வந்து சில நாட்கள் வைக்கவும்.
** அருகம்புல் மாலை காய்ந்தவுடன் அதைக் கட்டியிருக்கும் வாழை நாரை நீக்கிவிட்டு,அருகம்புல்லை இடித்து தூள் ஆக்கவும்.
** மேற்படி தூளை சாம்பிராணியுடன் கலந்து அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் வீட்டில் போட்டால் வீட்டில் உள்ள தீய சக்திகள் வெளியேறும்.
**இது அதிக செலவில்லாத பரிகாரம்.ஆனால்,பலனோ அபரிதமானது

சாமுத்திரிகா லக்ஷ்ணம் ( முழுமையானது )

சாமுத்திரிகா லக்ஷ்ணம் [ 32 அமைப்புகள் ]

மனிதர்களுக்கு பலவாறாக அமைப்புகள் இருந்தாலும் மொத்தம் 32 சாமுத்திரிகா லக்ஷ்ண அமைப்புகள் இன்றியமையாது ..
அவைகள்
ஐந்து இடம் நீண்டு இருக்க வேண்டும்
ஐந்து இடம் மிருதுவாக இருக்க வேண்டும்

எளிய கடன் நிவர்த்தி முறை :-

எளிய கடன் நிவர்த்தி முறை :-

கடன் பெற்றான் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என்பதை போல கடன்என்பது கொடிய விஷமே

வளமான வாழ்க்கைக்கு சித்தர்களால் சொல்லப்பட்ட மாந்திரீக தாந்திரீக ரகசிய 20 பரிகார முறைகள்.

(அவசியம் படிக்க தவறாதீர்கள் )

(1) முக்கியமான காரியங்களுக்கு வெளியில் செல்லும் பொழுது சிறிது மஞ்சள் தூள் அல்லது ஒரு மஞ்சள் கட்டை எடுத்து செல்ல, போகிற காரியம் தடையில்லாமல் முடிவடையும்.

இந்து" சமயத்தில் திருமண நிகழ்ச்சியின் போது செய்யப்படும் திருமண சடங்குகளும் அதன் விளக்கமும்...

நம்முடைய "இந்து" சமயத்தில் திருமண நிகழ்ச்சியின் போது செய்யப்படும் திருமண சடங்குகளும் அதன் விளக்கமும்:

1. நாட்கால் நடல்:
இதை பந்தகால் நடுவது என்பார்கர்கள்.
பந்தகால் நடுவதற்கு வேரில்லாமல் துளிரும் மரத்தை (பூவரசம் மரம்) வெட்டி நடவேண்டும்.

நல்வினைக்கான நன்மைகள் :-

1 அன்னதானம் செய்தல் விரும்பிய உலகத்தில் ஒரு வருடம் வீதம் சுகித்திருப்பார்.
2 கோ தானம் செய்தல் கோலோகத்தில் வாழ்வர்.

64 திருவிளையாடல்கள் பற்றி

ஒரு செயலைத் தொடங்கும் முன், அந்த செயல் பற்றிய முழு விபரங்களையும் தெரிந்து வைத்துக் கொண்டால், மிகவும் சிறப்புடையதாக இருக்கும். முன்பின் தெரியாத ஊருக்குச் செல்லும் போது,

1. இந்திரன் பழிதீர்த்தப் படலம்


ஆசிரியரை மாணவர்கள் மதித்து நடந்து கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துவதாக சிவபெருமானின் முதல் திருவிளையாடல் அமைந்தது. தேவலோகத்தின் அரசன் யார் என்றால் தேவேந்திரன் என்று பச்சைக்குழந்தை கூட பதில் சொல்லிவிடும்.

2.வெள்ளை யானை சாபம் தீர்த்த படலம்!

இந்திரனின் வாகனமான ஐராவதம் அவனுக்காக காத்து நின்றது. கருடனால் பாம்பை பிடிக்க முடியும்... ஆனால், அது பரமசிவன் கழுத்தில் இருந்தால் கருடனால் நெருங்க முடியுமா!

3.திருநகரங்கண்ட படலம்!

மதுரை மாநகரம் இயற்கையாக எழுந்ததல்ல. அது உருவாக்கப்பட்ட ஒரு நகரம். அதை உருவாக்கி அருளியவரும் ஆலவாய் அழகனான சொக்கநாதனே! ஒரு காலத்தில், பாண்டியநாடு கடம்பவனங்கள் நிறைந்த வனமாக இருந்தது. அந்த வனத்துக்குள் ஏராளமான அருவிகள் இருந்தன.

4.தடாதகைபிராட்டியாரின் திருஅவதாரப் படலம்!

குலசேகர பாண்டியன் மதுரை நகரை நிர்மாணித்ததன் பலனாக அழகான மகனையும் பெற்றான். அவனுக்கு மலையத்துவஜன் என்று பெயரிட்டான் குலசேகர பாண்டியன். அந்த மன்னனின் மகளாக தன் மனைவி பார்வதிதேவியையே அவதரிக்கச் செய்தார் சிவபெருமான்.

5. தடாதகையாரின் திருமணப் படலம்!

உலகத்துக்கே ஒரு தாயை ஈன்றெடுத்துக் கொடுத்த காஞ்சனமாலையும், உலகத்தாயான தடாதகைபிராட்டியும் தங்கள் குல தலைமையை இழந்து அடைந்த கவலைக்கு அளவே இல்லை. அவருக்குரிய ஈமச்சடங்குகளை தடாதகையே முன்னின்று செய்தாள். தந்தையில்லாத வீடு... மகளுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டால் வீட்டுக்கு மருமகன் வந்துவிடுவார்.

6. வெள்ளியம்பல திருக்கூத்தாடிய படலம்!

எம்பிரானுக்கும், தடாதகை பிராட்டியாருக்கும் திருமணம் இனிதே நிறைவுபெற்ற பின் திருமண விருந்து துவங்கியது. திருமணத்துக்கு வந்தவர்களையெல்லாம் விருந்துண்ண சுந்தரேசர் அழைத்தார்.

7.குண்டோதரனுக்கு அன்னமிட்ட படலம்!

அனைத்து மக்களும் சாப்பிட்டாயிற்று. லட்சக்கணக்கில் திருமணத்துக்கு வந்திருந்த மக்களும் சாப்பிட்டாலும், சமைத்ததில் பெரும் பங்கு மிஞ்சிவிட்டது. எவ்வளவு பரிமாறினாலும், உணவின் அளவு அப்படியே இருப்பது போல் தெரிகிறதே! இது ஏதோ மாயவித்தை போல் தெரிகிறதே!

8.அன்னக் குழியும் வையையும் அழைத்த படலம்!

நாதா! இதென்ன அதிசயம்! பல லட்சக்கணக்கானோருக்கான உணவை இவன் ஒருவன் சாப்பிட்டு விட்டானே! இன்னும் இவனை விட்டால் சமையல்காரர்களையும், பாத்திரங்களையும் கூட தின்று விடுவான் போலிருக்கிறதே!

9.ஏழுகடல் அழைத்த படலம்!

கவுதமர் என்னும் மகரிஷி, அரசி காஞ்சனமாலையைச் சந்தித்தார். ஸ்ரீராமபிரானால் கல்லாய் இருந்து சுயரூபம் பெற்றாளே அகலிகை, அவளது கணவரே இந்த கவுதமர். தேவேந்திரன் தப்பு செய்தாலும் அவனையே சபிக்கும் ஆற்றலுள்ளவர், மிகப் பெரிய தபஸ்வி.

10.மலையத்துவஜனை அழைத்த படலம்!

காஞ்சனமாலைக்கு வருத்தம். ஏழுகடல் வந்தாயிற்று, புனித நீரும் ஆடலாம். ஆனால், சாஸ்திரம் என்ன சொல்கிறது தெரியுமா? தீர்த்தமாடினாலும் சரி, கோயிலுக்கு போனாலும் சரி...திருமணத்துக்குப் பிறகு தம்பதி சமேதராகச் சென்றால் தான் சிறந்த பலன் உண்டு.

11.உக்கிரபாண்டியன் திருஅவதாரப் படலம்!

ஈசன் அதற்கு ஏதும் பதில் சொல்லாவிட்டாலும், தடாதகை பிராட்டியாருக்கு அருள் செய்ய மனதில் எண்ணிவிட்டார். தன் மகன் முருகப்பெருமானை அழைத்தார். ஏறுமயிலேறி விளையாடியபடியே ஆறுமுகன் அவர் முன் வந்துநின்றான். தந்தையே! என்னைத் தாங்கள் அழைத்த காரணம் என்ன? என்றான். முருகனைத் தன் மடியில் அமர்த்திக்கொண்டார் ஈசன்.

12. உக்கிரபாண்டியனுக்கு வேல்வளை செண்டு கொடுத்த படலம்!

உக்ரவர்மனுக்கு பெண் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள் என்ற செய்தி, பல தேசங்களுக்கும் பரவவே, ராஜாக்கள் தங்கள் பெண்களை அவனுக்கு மணம் முடித்து வைக்கக் கருதி, தங்கள் பெண்களின் ஓவியங்களையும், ஜாதகத்தையும் அனுப்பி வைத்தனர்.

13.கடல் சுவற வேல் விடுத்த படலம்!

உக்கிரபாண்டியன் பொறுப்பேற்று சில மாதங்கள் கடந்தன. தந்தையைப் போலவே, உக்கிரபாண்டியனும் நல்லாட்சி நடத்தி வந்தான். அவனது மனைவி காந்திமதியும் கணவனின் மனம்கோணாமல் நடந்து, புகுந்த வீட்டுக்கும், பிறந்த வீட்டுக்கும் பெருமை தேடித்தந்தாள். உக்கிரபாண்டியன் 96 யாகங்களைச் செய்து முடித்து, மதுரை நகர் செழிப்புடன் இருக்க வழிவகை செய்தான்.

14.இந்திரன் முடிமேல் வளை எறிந்த படலம்!

பாண்டியநாட்டிலும், சேர, சோழ நாடுகளிலும் திடீரென மழை பொய்த்தது. தமிழக நாடுகள் அனைத்திலும் பஞ்சம் தலைவிரித்தாடியது. மக்கள் பட்ட துன்பத்திற்கு அளவில்லை.

15.மேருவை செண்டால் அடித்த படலம்!

மதுரை மீண்டும் செழிக்க, கவலை நீங்கிய உக்கிரபாண்டியன் மனைவி காந்திமதியுடன் இன்புற்று வாழ்ந்தான். காந்திமதி கர்ப்பமானாள். அவர்களுக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு வீரபாண்டியன் என அவன் பெயர் சூட்டினான். குழந்தை வீரபாண்டியனுக்கு மூன்று வயதாகும் போதே அவனுக்கு எல்லா தெய்வ ஸ்லோகங்களும் அத்துப்படியாகி விட்டது.

16.வேதத்திற்கு பொருளருளிச் செய்த படலம்!

ஐம்பெரும் பூதங்களும் ஒரு காலத்தில தத்தம் நிலையில் இருந்து மாறுபட்டன. பதினான்கு உலகங்களும் அவற்றில் அடங்கிய அனைத்தும் தோன்றியவாறே அடங்கி ஒடுங்கின. ஊழிக்காலம் வரவே மறைகளும் ஒடுங்கின.

17.மாணிக்கம் விற்ற படலம்!

மன்னன் வீரபாண்டியனுக்கு பல போகங்கள் விளைகின்ற நிலங்கள் ஏராளம் இருந்தன. அரண்மனையின் அந்தப்புரத்தில் ஆசைநாயகிகள் இருந்தனர். அவர்களுக்கு பேரழகு நிறைந்த புதல்வர்கள் பலர் பிறந்தனர்.

18.கடலை வற்றச் செய்த படலம்!

பாண்டியனின் ஆட்சி தழைத்தோங்கிய நேரத்தில் ஆண்டுதோறும் மதுரையில் சித்ரா பவுர்ணமியன்று இரவில் சொக்கலிங்கப் பெருமானுக்கு நெய், பச்சைக்கற்பூரம், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யும் முறையை உருவாக்கினான் அபிஷேகப் பாண்டியன். அதுவரை, தேவலோக தலைவனான இந்திரனே பவுர்ணமி அபிஷேகத்தை பூலோக மக்கள் அறியாத வண்ணம் நடத்திக் கொண்டிருந்தான்.

19.நான் மாடக்கூடலான படலம்!

வருணனுக்கோ தன் சக்தி எடுபடாமல் போனது குறித்து வருத்தமும், கோபமும் ஏற்பட்டது. எப்படியும் தன் சக்தியை வெளிப்படுத்த வேண்டுமே என்ற எண்ணத்தில், கடல் நீரை உறிஞ்சிச் சென்ற மேகங்களைத் தடுத்து, மேகங்களே! நீங்கள் உறிஞ்சிய நீரை மழையாகக் கொட்டுங்கள்.

20.எல்லாம் வல்ல சித்தரான படலம்!

அபிஷேகப் பாண்டியனின் ஆயுளை முடித்து தன் திருவடியில் சேர்த்துக் கொள்ள சிவபெருமான் விருப்பம் கொண்டார். தன்னை ஒரு சித்தர் போல உருமாற்றிக் கொண்டு கோயிலுக்குள் அமர்ந்திருந்தார். தங்கள் ஊருக்கு புதிதாக வந்துள்ள சித்தரைக் கண்ட மக்கள் அவரது தெய்வீக தோற்றம் கண்டு பணிந்து வணங்கினர்.

21.கல் யானைக்கு கரும்பு தந்த படலம்!

அமைச்சர்களே! முனிவர்களும் சித்தர்களும் ஆண்டவனையே தங்கள் பணியைச் செய்யும்படி கட்டளையிடும் சக்தி பெற்றவர்கள். சாதாரண மன்னனான என்னை அவர் இருக்கும் இடத்திற்கு வரச்சொன்னதில் என்ன ஆச்சரியம் இருக்கப்போகிறது? அவரை நானே சென்று பார்க்காமல், இங்கே வரவழைக்கச் சொன்னது என் தவறு தான். இதோ புறப்படுகிறேன், என்றவன், மீனாட்சியம்மன் கோயிலுக்கு மந்திரி பிரதானிகளுடன் விரைந்தான்.

22.யானை எய்த படலம்!

விக்ரமப்பாண்டியனின் ஆட்சியில் தர்மம் தழைத்தது. மக்கள் இல்லை என்ற சொல்லையே அறியாமல் வாழ்ந்தனர். சைவத்தை வளர்த்த மன்னன் பிற மதங்களின் வளர்ச்சியை தடை செய்து விட்டான்.

23.விருத்த குமார பாலரான படலம்!

விக்கிரம பாண்டியனுடைய ஆட்சிகாலத்தில் மதுரை மாநகரில் விருபாக்ஷர் என்னும் அந்தணர் வாழ்ந்து வந்தார். அவரது மனைவியின் பெயர் சுபவிரதை. தம்பதியர் ஒற்றுமையுடன் திகழ்ந்தனர். ஆனால், இறைவன் அவர்களுக்கு புத்திர பாக்கியத்தைக் கொடுக்கவில்லை. அவர்கள் அன்னை மீனாட்சியையும், சோமசுந்தரரையும் தினமும் தரிசித்து தங்களுக்கு குழந்தை வரம் அருளும்படி கண்ணீர் உகுத்துக் கேட்டுக் கொண்டனர்.

24. கால் மாறி ஆடிய படலம்!

இந்த சமயத்தில் மதுரையில் விக்கிரமபாண்டியனின் ஆட்சி முடிவுக்கு வந்தது. அவன் மறைந்து விட்டதால், அவனது மகன் ராஜசேகரன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றான். அவனும் தன் முன்னோர் களைப் போல சிவபக்தியில் ஆழ்ந்து கிடந்தான். அவனுக்கு ஆயகலைகள் அறுபத்து நான்கையும் படிப்பதற்கு ஆசை.

25.பழியஞ்சின படலம்!

ராஜசேகரபாண்டியன் மறைவுக்குப் பின் அவரது மகன் குலோத்துங்க பாண்டியன் ஆட்சிப் பொறுப்பேற்று செவ்வனே ஆட்சி நடத்தி வந்தான். அவனது மகன் அனந்தகுண பாண்டியன் அடுத்து பதவியேற்றான். இவனது ஆட்சிக்காலத்தில், மதுரையம்பதிக்கு திருப்புத்தூர் என்னும் ஊரைச் சேர்ந்த அந்தணர் ஒருவர் தன் மனைவி, குழந்தையுடன் வந்து கொண்டிருந்தார்.

26. மா பாதகம் தீர்த்த படலம்!

மன்னன் குலோத்துங்கனின் ஆட்சியில் இன்னொரு அதிசய சம்பவமும் நிகழ்ந்தது. அவனது தேசத்தில் பல கொடியவர்களும் வாழத்தான் செய்தனர். அவர்களில் ஒரு அந்தண இளைஞனும் அடக்கம். அவன் சாதாரண கொடியவன் அல்ல! அவனது தந்தை ஆசார அனுஷ்டானங்களை தவறாமல் கடைபிடிப்பவர். ஆனாலும், முன்வினைப் பயனால், ஒரு கேடு கெட்ட பிள்ளை பிறந்தான். அவனுக்கு எந்த நேரமும் நாட்டியத்தாரகைகளின் வீடே கதியென இருந்தது.

...Recently Published Post...

குளிக்கும் போது...

குளிக்கும் போது வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று குளிக்கவேண்டும். (இவை இரண்டும் உத்தம திசைகள். (கர்மம் செய்தபின்னும், மயானத்திற்க...