Monday, 10 February 2014

ஆறாம் நாள் போர்

ஆறாம் நாள் போரில் திருஷ்டத்துய்மன் மகர வியூகம் அமைத்தான். பீஷ்மர் கிரௌஞ்ச வியூகம் அமைத்தார். ஒருவருடன் ஒருவர் போர் புரிந்தனர். பீமன் அன்று சிறப்பாக போரிட்டான். பகைவர்களக் கொன்று குவித்தான். யானை படைகள் இவன் ஆற்றல் கண்டு மிரண்டது.... குதிரை படைகள் தெறித்து ஓடின.... 

பீமன் தன் கையில் இருக்கும் கதாயுதத்தை சுழற்றும் வேகமும், அதில் இருந்து எழுந்த ஓசையும் நிரூபித்தது இவன் பலராமனின் சீடன் என்பதை.... பீமனின் கதாயுதம் இவ்வொரு முறை நிலத்தில் மோதும் போதும் நலமே அதிர்ந்தது...இதை கண்ட கௌரவ படைகள் அச்சத்தின் உச்சியில் இருந்தனர். அவன் ஆற்றலும் போர் வெறியும் அன்று எல்லை அற்று இருந்தது. பீமனை பார்த்த பீஷ்மர், துரோணர், கிருபர் அனைவரும் இப்படியும் ஒருவர் போர் செய்ய முடியுமா? என்று மனதிற்குள் பீமனை பற்றி பெருமை கொண்டனர்...

துரோணர் “ இவன் என் சிஷ்யன் ” என்று கூற அதற்க்கு பீஷ்மர் “ அவன் என் பேரன் “ என்று பெருமை கொண்டார். இடையில் கிருபரோ “ உங்கள் அனைவருக்கும் நான் தான் குல குரு, ஆதலால் அந்த பெருமை என்னை சேரும் “ என்று போர்களத்தில் நகைத்து கொண்டனர்... பின்பு அவனும் தங்கள் எதிர் அணியின் ஒருவன் என்பதை உணர்ந்து மீண்டும் ஆயுதம் ஏந்தி போரினை தொடர்ந்தார்கள்...

துரியோதனன் பீமனுடன் போர் புரிய நெருங்கினான். அதைக் கண்ட பீமன் 'துரியோதனா..நீ இங்குத்தான் இருக்கிறாயா? உன்னைப் போர்க் களம் எங்கும் தேடி அலைந்தேன். இன்றுடன் உன் வாழ்வு முடிந்தது' என்று கூறி அவன் தேர்க் கொடியை அறுத்துத் தள்ளினான். இருவருக்கும் பெரும் போர் மூண்டது... கதாயுதங்களின் சத்தம் இடியன ஒலித்தது. நெருப்பு பொறிகள் பகலில் மின்னல் என தெரித்தது... 

மற்றொரு பக்கம் பீஷ்மர், பாண்டவர்களின் படை தளபதியான திருஷ்டத்துய்மன் இருவரும் நேருக்கு நேர் போரில் சந்தித்தனர். வில் வித்தையில் தான் குருவையே தோற்கடித்தவர் பீஷ்மர் என்பதால் அவரின் ஆற்றல் என்ன என்பதை திருஷ்டத்துய்மன் நன்கு அறிவான். சாமர்த்தியமாக அவரை தாக்காமல், அவருடைய அணைத்து தாக்குதலையும் தடுத்து கொண்டிருந்தான். பீஷ்மரை சோர்ந்து போக வைத்தான். 

அர்ஜுனனும் துரோணரும் நேருக்கு நேர் சந்தித்தனர். குருவிடம் பலபரீட்சை செய்யும் சிஷ்யன். போர் ஆரம்பிப்பதற்கு முன் “ அர்ஜுனா நீ என்னை வென்றால் அதனால் பெருமை எனக்கு தான். தயங்காமல் உன் அம்புகளை செலுத்து... இது உனக்கும் எனக்கும் நடக்கும் போர் அல்ல. தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் நடக்கும் போர். வீழ்வது நானாக இருப்பினும், வெல்வது தர்மமாக இருக்க வேண்டும். நான் என் ஆற்றலை குறைத்து கொள்ள மாட்டேன். என் முழு ஆற்றலுடன் தான் போர் செய்வேன். என்னை நீ இந்த போரில் வென்றால் நீ விஜயன் ஆவாய். வில்லுக்கு விஜயன் என்ற புகழ் உன்னை சேரட்டும் ” என்று ஆசி வழங்கினார்.

குருவின் ஆசியோடு அம்புகளை செலுத்தினான் அர்ஜுனன். அம்புகள் காற்றை கிழித்து கொண்டு பாய்ந்தன. அக்னி மற்றும் வாயு அஸ்திரங்களை செலுத்தினான். துரோணரும் அதற்க்கு ஈடாக போர் புரிந்தார். இருவரின் ஆயுதங்கள் தீர்ந்து போகும் நிலையில், இருவரும் சோர்ந்தனர்.... கிருஷ்ணர் அர்ஜுனரிடம்... “ இன்று தான் உன் போர், நீ துரோணரின் தலைமை சீடன் என்பதை உலகிற்கு தெரிவித்தது ” என்று கூறி ஊக்கம் அளித்தார்.

நகுலனும் சகாதேவனும் கால்ட்படைகளை சிதறடித்தனர். நகுலனின் வார்சுலர்சியும், சகாதேவனின் ஈட்டியும் போர் களத்தில் புயலை உருவாகியது என்றால் அது மிகையாகாது. அன்றிய போரில் சகாதேவன் வீசிய ஈட்டிகளின் எண்ணிக்கை 17485. 

ஆறாம் நாள் போரில் பாண்டவர்களின் கை ஓங்கி இருந்தது. அர்ஜுனன், துரோணர், பீமன், துரியோதனன், பீஷ்மர், திருஷ்டத்துய்மன், நகுலன் சகாதேவன் என அனைவரும் சோர்ந்திருந்த நிலையில்.... ஆதவன் அஸ்தமிதான்...... அன்றைய போர் முடிவிற்கு வந்தது.

No comments:

Post a Comment

...Recently Published Post...

குளிக்கும் போது...

குளிக்கும் போது வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று குளிக்கவேண்டும். (இவை இரண்டும் உத்தம திசைகள். (கர்மம் செய்தபின்னும், மயானத்திற்க...