Thursday 6 February 2014

இரண்டாம் நாள் போர்

முதலாம் நாள் போரில் உத்தரனும்..சுவேதனும் கொல்லப்பட்டதால்..அதை மனதில் கொண்டு இரண்டாம் நாள் போர் படைகள் திருத்தி அமைக்கப் பட்டன. கிரௌஞ்சப் பறவை வடிவில் படைகளை அமைப்பதால்..அதற்கு கிரௌஞ்ச வியூகம் என்று பெயர். துருபத மன்னன் அதற்குத் தலையாக நின்றான். தருமர் பின் புறத்தில் நின்றார். திருஷ்டத்துய்மனும்,பீமனும் சிறகுகளாக இருந்தனர்.

அந்த வியூகத்தை..எளிதில் உடைத்து உள்ளே சென்று போரிட்டார் பீஷ்மர். கண்ணபிரான் தேரை ஓட்ட, அர்ச்சுனன் பாட்டனாரைப் பயங்கரமாக தாக்கினான். பீஷ்மர் ..அர்ச்சுனன் மீது எழுபத்தேழு அம்புகளை செலுத்தினார். மற்றொரு புறம் துரோணரும்,திருஷ்டத்துய்மனும் கடும் போர் புரிந்தனர். திருஷ்டத்த்ய்மனுக்கு..உதவியாக பீமன் வந்தான், அவனைத் தடுத்து நிறுத்த துரியோதனன் கலிங்கப் படையை ஏவினான். ஆனால் பீமன் ..அப்படையைக் கதிகலங்க வைத்தான். அப்படைக்கு உதவ பீஷ்மர் வந்தார். அவரை அபிமன்யூவும் சாத்யகியும் சேர்ந்து தாக்கினார். அவர்களது தாக்குதலால் பீஷ்மரின் தேர்க் குதிரைகள் நிலை குலைந்து தாறுமாறாக ஓடின. இதனால்..அர்ச்சுனனை..எதிர்ப்பார் இல்லை. அவன்..விருப்பம் போல கௌரவ வீரர்களைக் கொன்று குவித்தான். அவன் யாராலும் வெல்ல முடியாதவனாகக் காட்சியளித்தான். அப்போது சூரியன் மறைய..அன்றைய போர் முடிவுற்றது........

No comments:

Post a Comment

...Recently Published Post...

குளிக்கும் போது...

குளிக்கும் போது வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று குளிக்கவேண்டும். (இவை இரண்டும் உத்தம திசைகள். (கர்மம் செய்தபின்னும், மயானத்திற்க...