Monday 10 February 2014

எட்டாம் நாள் போர்

நேற்றைய போரில் நடந்த இழப்புகளை சரி செய்ய வேண்டும். பாண்டவர்களின் படைகளை சிதறடிக்க வேண்டும் என்று கௌரவ பாசறையில் முடிவு செய்ய பட்டிருந்தது. துரியோதனன் படை தளபதிகளுடன் கோபம் கொண்டான். கௌரவ படைகள் சீற்றடுடன் காணப்பட்டது. ஆனால் பாண்டவ படைகளோ நேற்று கிடைத்த வெற்றியினாலும், இரவு கண்ணன் விருந்தாக கொடுத்த வேணு கானதினாலும், உற்சாகத்துடன் போர் செய்தனர்.

கௌரவர்களின் சார்பில் பிதாமகரான கங்கை புத்ரர் பீஷ்மர் மகர வியூகம் அமைத்தார். அது கடல் போல் பெரியதாககாட்சி அளித்தது. பீஷ்மருக்கு போட்டியாக தன் படையின் சிறந்த வீரர்களின் தொகுப்பை கொண்டு சிருங்கடக வியூகத்தை திருஷ்டத்துய்மன் வகுத்தான். இது வலுவானது. பகைவரின் வியூகம் எதுவானாலும் அதைச் சிதறச் செய்யும் ஆற்றல் உடையது. அர்ஜுனனும் திருஷ்டத்டுயமனும் வியூகத்தின் தலை பகுதியில் நின்று தாக்குதலின் முள்ளிய பகுதியை காத்தனர். தருமர், சிகண்டி, அரவான் இடது புறத்திலும், பீமன் மற்றும் கடோத்கஜன் வலது புறத்திலும், இருந்தனர். நகுல சகாதேவ சோதரர்கள், அபிமன்னு மற்றும் துருபதன் வியூகத்தின் பின் புற சுவராக இருந்தனர்.

இன்றும் பீமனின் ஆற்றல் முழுமையாக வெளிப்பட்டு கொண்டிருந்தது. பீமன் ஒருவனே இந்த குருக்ஷேத்திர போரை முடித்து விடுவான் என தோன்றியது. நான்கு திசைகளிலும் சுழன்றான். அவன் திரும்பும் திசை எங்கும் கௌரவர்கள் மாண்டனர். துரியோதனன் பீமனி கொள்ள தான் தம்பிகள் 24 பேரை மூன்றாக பிரித்து அனுப்பினான். அவர்களில் முதல் எட்டு பேரை பீமன் கொன்றான். அவர்களை சாதாரணமாக கொல்லவில்லை. எட்டு பேரின் கை கால்களை உடம்பில் இருந்து பிய்த்து எடுத்து, தலையை கதாயுதம் கொண்டு நசுக்கியும் கொடூரமாக கொன்றான். போர் செய்ய பழக்கிவிடப்பட்ட மூர்கத்தனமான மிருகத்தை போல் நடந்து கொண்டான். பின்பு பீமன் யனைப் படையை அழித்தான். கௌரவர்கள் அவனை கண்டு அஞ்சினர். இதை கண்டு துரியோதனனும், தன் சாரதி மூலம் கேட்டு அறிந்த திருதிராட்டிரனும் வருந்தினர். கௌரவர்கள் படை தோல்வி மேல் தோல்வி கண்டது.

கடோத்கஜன் கௌரவ வீரர்கள் பலரைக் கொன்றான். துரியோதனனை எதிர்த்து கடும் போர் செய்து, அவன் தேரை அழித்தான். அவன் மார்பில் அம்புகளைச் செலுத்தினான். ரத்தம் பீரிட்டது. ஆயினும் துரியோதனன் கலங்காது நின்றான். கடோத்கஜன் போர் வலிமைக் கண்டு துரோணர் முதலானோர் கடோத்கஜனைத் தாக்கினர். பீமன் தன் மகனுக்கு உதவிட விரைந்தான். துரோணரை தாக்கி அவரின் தேரை முறித்தான். கதோட்கஜனை காப்பாற்றும் முயற்சியில் பீமன் மேலும் துரியோதனனின் தம்பியர் எட்டு பேரை கொன்றான். இன்று மட்டும் இதுவரை..பீமன் துரியோதனன் தம்பியர் பதினாறு பேரைக் கொன்றிருந்தான்.

கௌரவ படையின் விகர்ணன், துச்சலையின் தேர்கள் மற்றும் குதிரைகள் தருமர் மற்றும் சிகண்டிகையால் தூள் தூள் ஆக்கப்பட்டது. அவர்களும் பின்வாங்கினார்கள். மற்றொரு புறம் நகுல சகாதேவ சகோதரர்களும், அபிமன்யுவும் சிந்து நாட்டரசன் ஜயத்திரதன், சகுனி, சகுனியின் மகன் உல்லூகன், சல்லியன், பர்பரிகன், பூரிசிரவஸ் ஆகியோரை கலந்கடிதனர். அபிமன்யுவின் ஆற்றல் வெளிப்பட தொடங்கியது இந்த நாளில் தான். பாண்டவர்களின் படையில் அபிமன்னு என்னும் மிகபெரிய ஆற்றல் மெதுவாகவும் அதே சமயம் வலிமையாகவும் உருவாகிகொண்டிருப்பது அன்று கௌரவர்களுக்கு தெரிய வந்தது... 

அர்ஜுனன் பீஷ்மரை தினரடித்தான். அம்புகள் சரமாரியாக பாய்ந்தது. இந்திரன் தன் வேலைகளை நிறுத்திவிட்டு அன்று அர்ஜுனன் போர் செய்வதை கண்டு தன்னை மறந்தான் என்று கூறுகிறது மகாபாரதம். யானைகள் சரிந்தன, குதிரைகள் மடிந்தன, காலாட்படைகள் அழிந்தன. திரும்பிய திசை எங்கும் பாண்டவர்களின் வெற்றி ஆராவாரம். துரியோதனன் செய்வது அறியாமல் திகைத்தான். தர்மம் தலை தூக்க தொடங்கியது....
ஆதவன் மறைய.... இரவு சூழ.... அன்றைய போர் நின்றது....

No comments:

Post a Comment

...Recently Published Post...

குளிக்கும் போது...

குளிக்கும் போது வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று குளிக்கவேண்டும். (இவை இரண்டும் உத்தம திசைகள். (கர்மம் செய்தபின்னும், மயானத்திற்க...