Friday, 7 February 2014

ஐந்தாம் நாள் போர்

பீஷ்மர் மகர வியூகம் வகுத்தார்.வடிவத்தில் இது முதலைப்போல் இருக்கும். திருஷ்டத்துய்மன் சியேன வியூகம் அமைத்தான். இது பருந்து போன்றது. பல ஆயிரம் பேர் மாண்டனர். துரியோதனன் துரோணரைப் பார்த்து
”குருவே நீர் பாண்டவர்களைக் கொல்லும் செயலில் ஈடுபடுங்கள். உம்மையும், பீஷ்மரையுமே நான் நம்பியுள்ளேன்” என்றான்.

அதற்கு துரோணர் 'பாண்டவரிடம் பகை வேண்டாம்..என ஏற்கனவே பலமுறை சொல்லியும் நீ கேட்கவில்லை.ஆயினும் என்னால் இயன்ற அளவு போரிடுவேன்' என்றார்.

சாத்யகியும்,பீமனும் துரோணருடன் சண்டையிட..அர்ச்சுனன் அஸ்வத்தாமாவுடன் போரிட்டான். அபிமன்யூ துரியோதனனின் மகன் லட்சுமணனுடன் போரிட்டான். கிருபர் தன் தேரை பாதுகாப்பாக வேறிடம் கொண்டு சென்றார்.... பாண்டவ மற்றும் கௌரவர்களின் சகோதர இழப்பின்றி முடிந்த ஒரே நாள் இது தான்...

சூரியன் மறைய அன்றைய போர் முடிந்தது....

No comments:

Post a Comment

...Recently Published Post...

குளிக்கும் போது...

குளிக்கும் போது வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று குளிக்கவேண்டும். (இவை இரண்டும் உத்தம திசைகள். (கர்மம் செய்தபின்னும், மயானத்திற்க...