Monday 10 February 2014

ஏழாம் நாள் போர்

ஆறாம் நாள் போரில் சோர்வடைந்த துரியோதனன் அடுத்த நாள் காலை பீஷ்மரிடம் முறையிட்டான். ”எனது அச்சமும்..சோர்வும் என்னை விட்டு அகவில்லை. உங்கள் உதவி இல்லையேல் நான் எப்படி வெற்றி பெறுவேன்? ” எனக் கெஞ்சிக் கேட்டான். பீஷ்மர் “என்னால் முடிந்த அளவிற்கு போர் செய்து கொண்டு தான் இருகிறேன்” என்று கூறினார். .



துரோணருக்கும் விராடன் மைந்தன் உத்ரனுக்கும் போரில் சந்தித்தனர். துரோணருக்கு உத்திரன் ஒரு சிரிய எதிர்பாகவே அமைந்தான். துரோணரின் ஆற்றலை சந்திக்கும் அளவிற்கு அவன் சமமானவன் அல்ல என்றாலும் தன்னால் இயன்ற அளவிற்கு சவாலாக விளங்கினான். துரோணரின் 90 அம்புகளை தான் கேடயத்தால் மட்டுமே தடுத்து துரோணரை வியப்பில் ஆழ்த்தினான். 

அர்ஜுனன் மற்றும் பீமன் அவனை காப்பாற்ற எடுத்த முயற்சிகள் பலன் இல்லாமல் போனது. பீமனை துரியோதனனும், அர்ஜுனனை பீஷ்மர் மற்றும் கிருபர் தடுத்தனர். பாண்டவர்கள் விராடனுக்கு தங்களின் நன்றியை தெரிவிக்க கிடைத்த வாய்ப்பை நழுவ விட்டனர். நடந்த போரில் அம் மைந்தன் மாண்டான். இவை அனைத்தையும் பார்த்து கொண்டிருந்த பகவான் கிருஷ்ணரோ, இவை எல்லாம் நடுக்கும் என்று எனக்கு தெரிந்தது தானே என்றவாறு மெல்லிய புனகையோடு, இறந்த உத்தரனுக்கு மோட்சம் அளித்தார். என்ன அவர் திருவிளையாடல்... 

ஒரு புறம் நகுலனும், சகாதேவனும் சேர்ந்து சல்லியனை எதிர்த்து போரிட்டனர். மருமகன்கள் இருவரும் தங்கள் மனைவியின் தந்தையை எதிர்த்து போர் செய்தனர். சல்லியன் வில் வித்தையிலும் போர்முறைகளிலும் தேர்ந்தவன். தேரோட்டத்தில் வல்லவன். சல்லியனை சாய்க்க நகுல சாகாதேவ சகோதரர்கள் கடுமையாக போராடினர். சல்லியனும் துரிதமாக தான் ஆயுதங்களை பயன் படுத்தினான். சகாதேவன் தன் ஈட்டியால் சல்லியனின் தேரை தாக்கினான். அவன் ஈட்டி பாய்ந்து வருவதை கண்டு சல்லியனின் குதிரைகள் மிரண்டு தடுமாறி ஓட, அவைகளை அடக்கினார் சல்லியன். நகுலனோ தன் வார்திறமையால் சலியனின் வில்லை வென்றான். சகாதேவனை சல்லியனின் அம்புகள் தாக்காதவாறு, தன் வார்சுலற்சியால் அவற்றை தடுத்தான். சல்லியன் தன் இரு மருமகன்களின் போர் திறமையை கண்டு வியந்தான். இறுதியில் மூவரும் சோர்ந்தனர்... சல்லியன் மயங்கினான்... நிராயுதபாணியாக தான் தேரில் சாய்ந்தான். தர்மத்தின் படி சல்லியனை அன்று உயிர் வாழ விட்டனர் நகுல சகாதேவ சகோதரர்கள்....

மற்றொரு புறம் தன் பழைய கணக்கை தீர்த்துக்கொள்ள சிகண்டிகை பீஷ்மருக்கு போர்சவால் விட்டான்/விட்டாள். பீஷ்மர் சிகண்டிகை ஒரு அரவாணி என்பதை அறிந்திருந்ததால் அச்சவாலை புறக்கணித்தார். சிகண்டிகை மனதிற்குள் சிரித்து கொண்டாள். “உன் மரணம் என்னால் தான் நிகழும் என்ற விதி இருப்பதை மறந்துவிட்டாயா கங்கை புத்ரா? உன் நாள் இன்று அல்ல, ஆனால் அது வெகு தொலைவிலும் இல்லை. முடிந்தால் உன்னை காப்பற்றிக்கொள். இப்போது சென்று ஓய்வு எடு” என்று கூறினாள். இதை கேட்ட கௌரவ படை நிலைகுலைந்தது. துரியோதனன் தடுமாறினான். 

இவ்வளவு கடுமையான நேரத்திலும் கிருஷ்ணர் மட்டுமே புன்னகைத்தார்... இதையும் நான் அறிவேன் என்ற அர்த்தத்தில்... 

கடுமையாய் இருந்த ஏழாம் நாள் போர்..... சூரியன் மறைய முடிவுக்கு வந்தது....... அன்று இரவு கிருஷ்ணருடைய வேணுகானம் புண்பட்ட வீரர்களுக்கு இதமாக இருந்தது.....

No comments:

Post a Comment

...Recently Published Post...

குளிக்கும் போது...

குளிக்கும் போது வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று குளிக்கவேண்டும். (இவை இரண்டும் உத்தம திசைகள். (கர்மம் செய்தபின்னும், மயானத்திற்க...