யாமிருக்க பயமேன் |
ஸ்ரீ சத்குரு சாந்தானந்த சுவாமிகள் அருளிய ஸ்கந்த குரு கவசத்தில் முருகனின் மூல மந்திரம் உள்ளது. அந்த மந்திரத்தை தியானித்து உருஏற்ற முருகனின் அருள் கிடைத்து மும்மலங்கள் ஆகிய ஆணவம், கன்மம்,
மாயை நம்மைவிட்டு அகன்று முக்தி நமக்கு சித்தியாகுமாம், முக்தியை தேடி எங்கும் அலைய வேண்டாம் என்று சொல்கிறது கந்த குரு கவசம்.
மூல மந்திரம்:
ஓம் ஸெளம் சரவணபவ ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம்
க்லௌம் ஸௌம் நமஹ
ஸ்கந்த குரு கவசத்தில் இந்த மந்திரத்தை விளக்கும் பாடல் பகுதி
பாபத்தைப் பொசுக்கிப் பாரெல்லாம் சிறப்புறவே
ஓம் ஸெளம் சரவணபவ ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் என்றும்
க்லௌம் ஸௌம் நமஹ என்று சேர்த்திடடா நாள்தோறும்
ஓமிருந்து நமஹவரை ஒன்றாகச் சேர்த்திடடா
ஒன்றாகக் கூட்டியுமே உள்ளத்திலே இருத்தி
ஒருமனத் தோடு நீ உருவையும் ஏத்திடடா
முருகனின் மூலமிது முழுமனத்தோடேத்திட்டால்
மும்மல மகன்றுவிடும் முக்தியுந்தன் கையிலுண்டாம்
முக்தியை வேண்டியுமே எத்திக்கும் செல்ல வேண்டாம்
முருகன் இருப்பிடமே முக்தித்தல மாகுமப்பா
ஹ்ருதயத்தில் முருகனை இருத்திவிடு இக்கணமே
இக்கணமே மூலமந்த்ரம் ஏத்திவிடு ஏத்திவிடு
மூலமதை ஏத்துவோர்க்கு காலபய மில்லையடா
காலனை நீஜயிக்க ஸ்கந்தனைப் பற்றிடடா
சொன்னபடிச் செய்தால் ஸூப்ரஹமண்ய குருநாதன்
தண்ணொளிப் பெருஞ்சுடராய் உன்னுள்ளே தானிருப்பான்
ஜெகமாயை ஜயித்திடவே செப்பினேன் மூலமுமே
No comments:
Post a Comment