Friday 7 February 2014

நான்காம் நாள் போர்….

நான்காம் நாள் பீஷ்மர் வியாளம் என்ற வியூகத்தை அமைத்தார். ஐந்து பனைகளை அடையாளமாக உடைய கொடியுடன் போர் புரிந்தார். அனுமானைச் சின்னமாகக் கொண்ட கொடியுடன் ..அவ்வனுமானின் பேராற்றலுடன் போரிட்டான் அர்ஜுனன். அபிமன்யு போர் முனைக்கு வந்தான்.
அவனைப் பூரிசிரவசு, அஸ்வத்தாமா, சல்லியன் ஆகியோர் எதிர்த்துப் போர் புரிந்தனர்.ஒரு புறம் பீமன் துரியோதனின் தம்பியர் எண்மரைக் (எட்டு பேரை) கொன்றான். தன் கதையால் யானைகளை வீழ்த்தினான். பீமனின் மைந்தன் கடோத்கஜன் வெற்றி மேல் வெற்றி பெற்றான். துரியோதனின் வீரர்கள் சோர்ந்து போயினர்.பலர் மாண்டனர்.

தம் மக்கள் மாண்டது குறித்து திருதிராட்டினன் மனம் கலங்கியது.

நான்காம் நாள் போர் நின்றது. பீஷ்மரைக் காணச் சென்ற துரியோதனன் ”நீங்களும், துரோணரும், கிருபரும் இருந்தும் என் தம்பியர் மாண்டனரே! பல வீரர்கள் உயிர் இழந்தனரே!!! பாண்டவர்கள் வெற்றியின் ரகசியம் என்ன?” என்றான்.

“இது குறித்து பலமுறை உன்னிடம் சொல்லி இருக்கிறேன்.பாண்டவர்களுடன் சமாதானமாகப் போவதே நன்று என வற்புறுத்தி இருக்கிறேன். எங்கு கண்ணன் உள்ளாரோ அங்கு தர்மம் இருக்கிறது. எங்கு தர்மம் இருக்கிறதோ அங்கு வெற்றி இருக்கிறது. இப்போதும் காலம் கடந்து விடவில்லை. போரைக் கைவிட்டு அவர்களுடன் இணை. இல்லையேல் மீளாத்துயரில் ஆழ்வாய்” என்றார் பீஷ்மர்.

துரியோதனன் இணங்கினான் இல்லை.

No comments:

Post a Comment

...Recently Published Post...

குளிக்கும் போது...

குளிக்கும் போது வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று குளிக்கவேண்டும். (இவை இரண்டும் உத்தம திசைகள். (கர்மம் செய்தபின்னும், மயானத்திற்க...