Wednesday, 22 June 2016

நமது மூளை குறித்த சில ருசிகர தகவல்கள்

பல உளவியல் , மனோவியல் , தத்துவவியல் , அறிவியலாளர்களால் சொல்லப்பட்ட மனித மூளையை பராமரிக்கும் முறைகளும் , நினைவாற்றலை பல மடங்கு பெருக்கும் முறைகளும் யுக்திகளும்.
நமது மூளை குறித்த சில ருசிகர தகவல்கள்
நமது மூளைதான் மற்ற உறுப்புகளை விடவும் பசி மிகுந்தது, அதாவது 20 சதவீத சக்தி மூளை செயல்பட செலவிடப்படுகிறது.
ஆண்களின் மூளை அளவில் பெரியதாக இருந்தாலும் பெண்களின் மூளை செல்களின் எண்ணிக்கையை விட குறைவு தான்.
தொடு உணர்வு மூளையால் உணரப்படுகிறது ஆனால் மூளையை தொடுவதை அதனால் உணரமுடியாது.
இப்போதும் எனது மனதறிய என்று இதயத்தை காட்டி சொல்கிறோம் மூதறிஞர்கள் (Ancient Philosophers) பலரும் மனிதனின் நடவடிக்கை இதயத்தால் தான் கட்டுப்படுத்தப்படுகிறது என்று நம்பினார்கள்.

Monday, 13 June 2016

12 ராசிக்கு உரிய பரிகாரம் மற்றும் மந்திரங்கள்!



மேஷ ராசியில் பிறந்தவர்கள் கீழ்க்கண்ட சுலோகத்தை 27 முறை கூறி முருகனுக்கு சகஸ்ர நாம அர்ச்சனை செய்தால் துன்பங்கள் நீங்கும் !
ஷண்முகம் பார்வதீ புத்ரம்
க்ரௌஞ்ச ஸைவ விமர்த்தனம்
தேவஸேனாபதிம் தேவம் ஸ்கந்தம்
வந்தே ஸிவாத் மஜம்

Wednesday, 18 May 2016

திராட்சைப் பழம்



எல்லா வகையான திராட்சையிலும் பொதுவாக வைட்டமின் ஏ உயிர்சத்து அதிக அளவில் காணப்படும். பொதுவாக சரியாக பசி எடுக்காமல் வயிறு மந்த நிலையில் காணப்படுபவர்கள் கருப்பு திராட்சை எனப்படும் பன்னீர் திராட்சையில் அரைடம்ளர் சாறு எடுத்து அதனுடன் சர்க்கரை சிறிது சேர்த்து அருந்தி வந்தால் மந்த நிலை நீங்கி நன்றாக பசி எடுக்கும்.

ஆரஞ்சுப்பழம்

ஆரஞ்சில் வைட்டமின் ஏ அதிகமாகவும், வைட்டமின் சி-யும், பி-யும், பி-2ம் உள்ளன. மேலும் இதில் சுண்ணாம்புச்சத்தும் மிகுந்து காணப்படுகிறது. பல நாட்களாக வியாதியால் பாதித்து தேறியவர்களுக்கு இதுவொரு சிறந்த இயற்கை டானிக் ஆகும். இரவில் தூக்கமில்லாமல் கஷ்டப்படுபவர்கள் படுக்க போவதற்கு முன்பாக அரை டம்ளர் ஆரஞ்சு பழச்சாறுடன் சிறிது சுத்தமான தேனை சேர்த்து சாப்பிட இரவில் நன்றாக தூக்கம் வரும். பல் சதை வீக்கம், சொத்தை விழுந்து வலி ஏற்படுதல், பல் வலி, பல் ஈறுகளில் ரத்தக் கசிதல் இருப்பவர்கள் ஒரு வாரம் அரை டம்ளர் ஆரஞ்சு பழச்சாறை கொப்பளித்து விழுங்க உடன் நிவாரணம் பெறலாம்.

வியர்வை நாற்றத்தை ஒரே நாளில் நீக்கலாம்...



பொதுவாக வியர்வை நாற்றம் என்பது எல்லோருக்கும் இருக்கக்கூடிய பொதுவான ஒன்றாகும். ஆனால் சிலருக்கு வியர்வை நாற்றம் என்பது பக்கத்தில் இருப்பவரை கூட அருகில் செல்ல முடியாமல் செய்துவிடும். சிலர் சோப்பு, வாசனை திரவியம் போன்ற பொருட்களை உடலெங்கும் பூசி இருப்பதும் நமக்கு தெரிந்த ஒன்று தான், வியர்வை துர்நாற்றம் அடிக்கிறது என்கிறது மருந்து கேட்டால் வியர்வை வராமல் செய்துவிடும் ஆபத்தான மருந்துகளும் கிடைக்கிறது, சரி சித்த மருத்துவரிடம் சென்று மருந்து கேட்டால் அவர் 5 வகையான கூட்டு சரக்கு மருந்து இதை அரைத்து தினமும் பூச வேண்டும் என்று சொல்கின்றனர், இவற்றை எல்லாம் தாண்டி ஒரு அதிசயம் கடந்த மாதம் நண்பர் ஒருவர் மூலம் இயற்கை உணர்த்தியது.

மூலிகை சாறில் முழுமையான ஆரோக்கியம்!


நம் முன்னோர்கள் பலன் அறிந்து பயன்படுத்தி வந்த மூலிகைகள் ஏராளம். மூலிகைகளை சாறாகவும், கஷாயமாகவும் செய்து சாப்பிடுவதன் மூலம் நோய்கள் நம்மை நெருங்கவிடாமல் செய்யலாம். இதோ, சில மூலிகைகளும், அதன் பலன்களும்....

இஞ்சிப் பால்..!



கொடி போல இடை தளிர்போல நடைன்னு சொல்வாங்க. அப்படி சிக்குன்னு சுறுசுறுன்னு இருக்கனும்பாங்க. சுலபமா செஞ்சு முடிக்கக்கூடிய இஞ்சிப் பால் இருக்க பயமேன்? கவலையை விடுங்க.

வலுவூட்டும் செவ்வாழைப்பழம்.

நரம்பு தளர்ச்சி குணமடையும்

நரம்பு தளர்ச்சி ஏற்பட்டால் உடலில் பலம் குறையும். ஆண்மை குறைபாடு ஏற்படும். எனவே நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டுவரவேண்டும். தொடர்ந்து 48 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட நரம்புகள் பலம் பெறும். ஆண் தன்மை சீரடையும்.

வெள்ளை பூண்டின் அற்புதங்கள்


பூண்டு என்றதுமே நம் அனைவரின் நினைவுக்கு வருவது இதயத்திற்கு சிறந்த உணவுப் பொருள் என்பதுவே.

இதுமட்டுமின்றி ஏராளமான மருத்துவ குணங்களும் புதைந்து கிடக்கின்றன.

புற்றுநோயை தடுக்கும்

வாழைப்பழம்



மலச்சிக்கல் இருப்பவர்கள், மூலநோய் குறைபாடு இருப்பவர்கள் தினமும் வாழைப்பழம் ஒன்றை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல், மூல நோய் குறைபாட்டிலிருந்து விடுபடலாம். மேலும் தினமும்

மாதுளம் பழம்

மாதுளம் பழத்திற்கு மலத்தை இளக்கும் சக்தி உணடு. மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலிலிருந்து குணம் பெறலாம். வறட்டு இருமல் உள்ளவர்கள் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும். பித்த சம்மந்த மான அனைத்து உடல்நல குறை பாட்டிற்கும் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வரலாம். மாதுளம் பழத்தின் தோலை அம்மியில் மை போல் வைத்து அரைத்து அதில் எலுமிச்சம்பழம் அளவு எடுத்து அரை ஆழாக்கு எருமை தயிரில் கலந்து மூன்று நாள் காலையில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பிற மருந்துகள் கொடுத்தும் குணமாகாத சீதபேதி உடன் நிற்கும்.

விளாம்பழம்

விளாம்பழம் பல வியாதிகளை குணப்படுத்தும் சிறந்த பழமாகும். இதில் இரும்பு சத்தும், சுண்ணாம் புச்சத்தும், வைட்டமின் ஏ சத்தும் உள்ளது. இப்பழத்துடன் வெல்லம் சேர்த்து பிசைந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் குணமாகும். பித்தத்தால் தலை வலி, கண்பார்வை மங்கல், காலையில் மஞ்சளாக வாந்தி எடுத்தல், சதா வாயில் கசப்பு, பித்த கிறுகிறுப்பு, கை கால்களில் அதிக வேர்வை, பித்தம் காரணமாக இளநரை, நாவில் ருசி உணர்வு அற்றநிலை இவைகளை விளாம் பழம் குணப் படுத்தும். விளாம்பழத்திற்கு ரத்தத்தில் கலக்கும் நோய் அணுக்களை சாகடிக்கும் திறன் உண்டு. எனவே எந்த நோயும் தாக்காமல் பாதுகாக் கும். அஜீரண குறைபாட்டை போக்கி பசியை உண்டுபண்ணும் ஆற்றலும் விளாம்பழத்திற்கு உண்டு. முதியவர்களின் பல் உறுதி இழப்பிற்கு விளாம்பழம் நல்ல மருந்து.

சுக்கு மருத்துவக் குணங்கள்



1. சுக்குடன் சிறிது பால் சேர்த்து, மைய்யாக அரைத்து, நன்கு சூடாக்கி, இளஞ்சூடான பதத்திற்கு ஆறினதும், வலியுள்ள கை, கால் மூட்டுகளில் பூசிவர மூட்டுவலி முற்றிலும் குணமாகும்.

2. சுக்கைத் தூள் செய்து, எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தால் பித்தம் விலகும்.

வாழைப்பூ



இயற்கையின் படைப்புகளில் பூக்கள் மிகவும் அற்புதமானது. ஒவ்வொரு பூவூம் ஒவ்வொரு விதமான அழகையும் மருத்துவக் குணங்களையும் கொண்டுள்ளது.

வீட்டு வைத்தியக் குறிப்புகள்


சீரகம்:

சீரகத்தைப் பொன்வறுவலாக வறுத்து தூள் செய்து கொதிநீரில் இட்டு காய்ச்சிக் குடித்தால் உண்ட உணவை சீரணமாக்கி பசியைத் தூண்டுவதுடன் உணவுப்பாதையையும் சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது. கேரளத்து மக்கள் எல்லோரது வீட்டிலும் இந்த சீரக வெள்ளம் இருக்கும்.

தொண்டைக்கட்டிற்கு:

இயற்கையின் அழகு சாதனப்பொருட்கள்--மருத்துவ டிப்ஸ்



தினசரி புதுப்புது அழகு சாதனங்களின் விளம்பரத்தை நாம் பார்க்கிறோம். எது உங்கள் சருமத்துக்கு தீங்கு விளைவிக்காதது, எதை வாங்கினால் நீங்கள் விரும்பும் பயன் கிடைக்கும் என்ற கேள்விகளுக்கு பதில், நீங்கள் அந்தப் பொருட்களை வாங்கி பயன் படுத்திய பிறகுதான் கிடைக்கும்!. ஆனால் எந்த விதமான பக்க விளைவுகளும் இல்லாமல் நம் அழகுக்கு அழகு சேர்க்க, இயற்கை பல அழகு சாதனங்களை நமக்கு வழங்கியுள்ளது. இவற்றை தேடி நாம் வெகு தூரம் செல்ல வேண்டாம். உங்கள் சமையல் அறையிலேயே கிடைக்கும் பொருட்கள்தான் இவை. 

முட்டைக் கோஸ் மருத்துவக் குணங்கள்



உருண்டு திரண்ட முட்டைக்கோஸ், சத்துக்கள் நிறைந்தது. சீனர்களின் சுறு சுறுப்புக்கு அவர்கள் தங்கள் உணவில் முட்டைக்கோஸை முக்கிய உணவுப் பொருளாக சேர்ப்பது ஒரு காரணம் எனலாம். உலகம் முழுவதும் விளையும் காய்கறிகளில் ஒன்றான முட்டைக்கோஸ் தன்னிடத்தில் அடக்கியுள்ள சத்துக்களை அறிந்து கொள்வோம்...

பயனுள்ள இயற்கை மருத்துவக் குறிப்புகள்



* நெல்லிக்காய், நெல்லிக்காய் ஊறுகாய், நெல்லி வத்தல் சாப்பிட்டு வர இளம் நரை மறையும்.

சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் - ஒரு மாதத்தில்


சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்:
குழந்தைகளுக்கு அதிக சத்துகளை அளிக்கும் பேரிக்காய்..!
பேரிக்காயை காய் என்று அழைத்தாலும் அது பழம் தான். இதனை நாட்டு ஆப்பிள் என்று அழைப்பார்கள்.வெளித்தோற்றத்திற்கு பச்சை காய் போல் தோன்றும். ஆனால் இது பழம் தான். சில காய்கள் பழுப்பு நிறத்தில் காணப்படும். இவை மலைப் பகுதிகளில் விளையக்கூடியது.

வெங்காயத்தை அப்படியே சாப்பிடுங்க



வெங்காயத்தின் தன்மை மற்றும் பயன்கள் குறித்த ஆய்வு ஒன்றை பார்சிலோனா பல்கலைக் கழக விஞ்ஞானிகள் சமீபத்தில் நடத்தினர். இந்த ஆய்வில் பச்சையாக உட்கொள்ளப்படும் வெங்காயம் மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை விரைவாக அதிக அளவில் தூண்டுகிறது என்ற உண்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மாதுளம்பூவின் பயன்கள்


மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும்.மாதுளம் பூச்சாறு, அருகம்புல் சாறு சமமாகச் சேர்த்து வேளைக்கு 30 மில்லி வீதம் தினசரி மூன்று வேளையாக மூன்று தினங்களுக்குக் கொடுத்தால் பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கு நிவர்த்தியாகும்.

மருந்தாகும் உணவு வகைகள்



* சமையலுக்குக் கைக்குத்தல் அரிசியைப் பயன்படுத்துவது மிக மிக நல்லது. கைக்குத்தல் அரிசியில் நார்ச் சத்துக்கள் நிறைந்துள்ளன.

* சைக்கிள் கேப்பில் எல்லாம் ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக தானியங்கள், முளைகட்டிய பயறு போன்றவற்றைச் சாப்பிடலாம். 

மருந்தாகும் உணவு வகைகள்



* நீங்கள், தினமும் ஐந்து விதமான பழங்களையும், சில காய்கறிகளையும் உணவாக எடுத்துக் கொள்பவரா..? ஆம் என்றால்… ஆரோக்கியமும் அழகும் எப்போதும் உங்க பக்கம்தான்!

பாசிப்பயறின் மருத்துவக் குணங்கள்


பாசிப்பயறு சத்தான பயறு வகைகளில் ஒன்றாகும். பண்டைய காலம் முதலே இந்தியாவில் விளைவிக்கப்பட்டு வந்த இந்த வகை பயறுகள், பின் தெற்கு சீனா, இந்தோ சீனா, மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் விளைவிக்கப்பட்டது. இதில் அதிக அளவு கால்சியமும், பாஸ்பரசும் அடங்கியுள்ளது. புரதம், கார்போஹைடிரேட், சிறிதளவு இரும்புச்சத்தும் அடங்கியுள்ளது. நார்ச்சத்தும், தாதுப்பொருட்களும் இதில் அடங்கியுள்ளன.

பயமுறுத்துகிறதா பருமன்?

கொழுப்புகள் கல்லீரலில் உற்பத்தி செய்யப்படுகின்றன. அளவுக்கு அதிகமான கொழுப்பு உடலில் சேர்வதால் உடல்பருமன் ஏற்படுகிறது. 

மரவள்ளிக் கிழங்கு (Tapioca Cassava)

மரவள்ளி (உள்நாட்டுப் பெயர்கள்: குச்சிக் கிழங்கு, குச்சிவள்ளிக் கிழங்கு) என்பது இயுபோபியேசியே தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வகைச் செடி. தென் அமெரிக்காவையும் மேற்கு ஆப்பிரிக்காவையும் தாயகமாகக் கொண்ட இச்செடி இன்று ஆப்பிரிக்காவில் அதிகம் பயிர் செய்யப்படுகிறது. மேற்கு ஆப்பிரிக்க நாடான நைசீரியாவே இன்று உலகின் மிகப்பெரிய மரவள்ளி உற்பத்தி செய்யும் நாடாக உள்ளது. வெப்பவலய, துணைவெப்பவலயப் பகுதிகளில் ஆண்டுப் பயிராகப் பயிரிடப்படும் மரவள்ளியிலிருந்து உணவுக்குப் பயன்படக்கூடிய கிழங்கு பெறப்படுகின்றது. இது மாவுப்பொருளைத் தரும் ஒரு முக்கிய உணவுப் பண்டமாகும். மனிதர்களின் உணவுக்கான கார்போவைதரேட்டுக்களைத் தருவதில் உலகின் மூன்றாவது பெரிய மூலம் மரவள்ளியாகும்.

திராட்சை

நினைக்கும்போதே இனிக்கும் பழங்களில் ஒன்று. இவற்றில் கறுப்புத் திராட்சை, பச்சைத் திராட்சை, பன்னீர்த் திராட்சை, காஷ்மீர்த் திராட்சை, ஆங்கூர் திராட்சை, காபூல் திராட்சை, விதையில்லா திராட்சை என பல வகையுண்டு. இனிப்பு மற்றும் சுவைமிகுந்தது திராட்சை. கருப்பு, வயலட், பச்சை கலர்களில் கிடைக்கிறது. இதன் இனிப்பு உடனடியாக இரத்தத்தில் கலக்கும் சிறப்பை பெற்றது. நோயாளிகளு
க்கு ஆரஞ்சுக்கு அடுத்தபடியாக திராட்சை அருமையான உணவு.

ஓரிதழ் தாமரை

மூலிகைகளின் சொர்க்க பூமியான நம் பாரதத்தில் அவதரித்த சித்தர்கள், ஞானிகள், ரிஷிகள், தங்களின் தவப்பயனால் இயற்கையின் கொடையான இந்த மூலிகைகள் மனித இனத்தை எப்படி பாதுகாக்கிறது என்பதை கண்டறிந்து சொன்னார்கள்.

இளநரையா? டை அடிக்க வெக்கமா? இதோ மூலிகை தைலம்

இன்றைய காலகட்டத்தில் சிறு வயது முதலே ஆண் பெண் இருபாலருக்கும் தலைமுடி நரைத்து விடுகிறது. ஆனால் நம் முன்னோர்கள் 60 வயது வரை தலைமுடி நரைக்காமலும் முடி உதிராமலும் அடர்ந்த கேசத்துடன் வாழ்ந்தார்கள். அதற்குக் காரணம் அவர்களின் உணவுமுறையும், பழக்க வழக்கங்களுமே.

இயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்:-

1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்!

2. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது.

வாழைத்தண்டு


அதிக நீர்ச்சத்து, நார்ச்சத்து கொண்டது. சர்க்கரைச்
சத்தும் உள்ளது. கொழுப்பைக் குறைக்கும். வயிற்றுப்
புண்களைச் குணப்படுத்தும். சிறுநீர் எரிச்சலைப் போக்கும்.
ஊளைச் சதையைக் கரைத்து, உடல் பருமனைக் குறைக்கும்

ஆரோக்கியமான சருமத்தை பெறுவதற்கான சில இயற்கை வைத்தியங்கள்!!!


ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் சருமத்தை வைத்துக் கொள்ள வேண்டும் என்று அனைத்து பெண்களுக்கும் ஆசை உண்டு. மிக முக்கியமாக கல்லூரிக்கு செல்லும் பெண்கள் இதை மிக அவசியமாக கருதுகின்றனர். ஏனெனில் அவர்கள் மற்றவர்களை விட அழகாகவும் தனித்துவமாகவும் தெரிய வேண்டுமென்று விரும்புகின்றனர். இயற்கையான சரும பராமரிப்பு என்பது பெண்களிடையே பெரும் முக்கியத்துவத்தை பெற்றுள்ளது. இவற்றை இயற்கையான முறையில் பெற விரும்பும் பெண்கள், இயற்கை மூலிகைகளை பயன்படுத்துவதில் பெரும் ஆர்வம் காட்டுகின்றனர்.

உடல் பருமனைக் குறைக்க சில வழிகள்

* இஞ்சியைத் தோல் சீவி அரைத்து, ஒரு கரண்டி சாறு எடுத்து, அதனுடன் சம அளவு தேன் சேர்த்து ஒரு டம்ளர் இளம் சூடான நீரில் கலந்து, கால...ையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இஞ்சியில் உள்ள ஜின்ஜெரால் (Gingerol), ஜின்ஜிபெரின் (Zingiberine) மற்றும் தேன் ஆகியவை செரிமானத்தைத் தூண்டுவதுடன் தேவையற்ற கொழுப்பையும் எரிக்கும்.

முடி உதிர்வதைத் தடுக்க ஓர் எளிய வழி!

மதிய வாக்கில், கொத்து வேப்பிலையை பறித்து, சுத்தம் செய்து, இரண்டு லிட்டர் தண்ணீரில் போட்டு,
தட்டு போட்டு மூடி கொதிக்க வைக்க வேண்டும்.
மூடியை எக்காரணம் கொண்டும் திறக்கக் கூடாது.
பின் அதை அப்படியே இறக்கி வைக்க வேண்டும்.
மறுநாள் காலையில் வேப்பிலைகளை எடுத்து விட்டு,
அந்தத் தண்ணீரில் கூந்தலை அலச வேண்டும்.
வாரம் ஒரு முறை இப்படி செய்தாலே போதும்.
அவ்வளவுதான், முடி உதிர்வது போயே போச்சு!

குடிநீரில் எலுமிச்சை சாறு சிறுநீரக கல்லை தடுக்கும்


குடிநீரில் எலுமிச்சை சாறு கலந்து அருந்தினால், சிறுநீரக கல்லை தடுக்கலாம் என்று கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது. உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சிமிஷன் மருத்துவமனையில் சிறுநீரக நோய் விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் நோயாளிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. 

இதில் டாக்டர் சம்பத்குமார் பேசியதாவது: 

இயற்கை மருத்துவக் குறிப்புகள்

சளிக் காய்ச்சல்
புதினா கீரையை நீரில் போட்டு கொதிக்க வைத்து டீ டிகாஷன் போல் செய்து சாப்பிட்டால் சளியால் வரும் காய்ச்சல் குணமாகும்.

இருமல், தொண்டை கரகரப்பு
பாலில் பூண்டைப் போட்டு காய்ச்சிக் குடித்தால் இருமல், ஜலதோஷம், தொண்டைக் கரகரப்பு போகும்.

வெந்தயக்கீரை

சாதாரணமாகச் சமையலில் பயன்படுத்தப்படும் வெந்தயத்தின் தழைதான் வெந்தயக்கீரை . இது சத்து நிறைந்த கீரை. வெந்தயம் விதைகளின் மூலம் பயிரடப்படுகிறது.

அருகம்புல்

எல்லா நோய்களுக்கும் ஏற்ற சிறந்த மருந்து. காலையில் 9.00 மணிக்கு பசி ஆரம்பித்தவுடன் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். பசிப்பதற்கு முந்தியே சாப்பிடுவது தவறு. அருகம்புல் சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து ஒரு பழம் சாப்பிட்டால் போதும். அடுத்து மதியச் சாப்பாடுதான். இந்த மாதிரி செய்தால் எல்லா நோய்களும் குணமடையும். உடல் எடை குறைய, கொலாஸ்டிரல் குறைய, நரம்புத்தளர்ச்சி நீங்க, இரத்தப்புற்று குணமடைய அருகம்புல் ஒரு உலகப் புகழ்வாய்ந்த டானிக். இரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகா¢க்கச் செய்வதில் சிறந்தது அருகம் புல்தான். தோல் வியாதிகள் அனைத்தும் அருகம்புல்லில் நீங்கும். இரத்தத்தில் உள்ள விஷத்தன்மைகளை வெளியேற்றுவதில் திறமையானது. விநாயகர் கோயில்களில் அருகம்புல் கிடைக்கும்.

புதினா கீரையின் மருத்துவக் குணங்கள்



கறிவேப்பிலை மற்றும் கொத்துமல்லியைப் போலவே புதினாவும் உணவுக்கு மணமூட்டுவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது.

முடி உதிர்வைத் தடுக்க எளிய வழிமுறைகள்


* முட்டை வெள்ளைக் கருவை நன்கு அடித்து தலையில் தேய்த்து, ஊறவைத்து மாதம் இரண்டு முறை குளித்து வந்தால் பளபளக்கும் உங்கள் கூந்தல்.

நீரிழிவைக் கட்டுப்படுத்தும் மூலிகைகள்



இந்தியாவில் பெரும்பாலான மக்களை வாட்டி வதைக்கும் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் இயற்கை மூலிகைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்களேன்.

முட்டை சாப்பிட்டால் மார்பகப்புற்றுநோய் வராதாம்: ஆய்வில் தகவல்....



தினசரி ஒரு முட்டை சாப்பிடுபவர்களுக்கு மார்பகப்புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைவதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

தாளிக்கீரை



இது நறுந்தாளி என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் தானாக விளைந்து வீணாக போகிறது. கிராமப்புறங்களில் பரிச்சயமுள்ளவர்கள் இந்த கீரையை பார்த்திருக்கலாம்.

திடீர் மழையைச் சமாளிக்க


* மழை நேர வைரஸ் காய்ச்சலுக்கு, உடனடியாக கொடுக்க, நிலவேம்பு கஷாயம் பெஸ்ட். நம் வீட்டிலேயே நிலவேம்பு பொடியை வாங்கி வைத்துக் கொண்டால் நல்லது. இந்த நிலவேம்பு பொடியுடன் தண்ணீர் சேர்த்து காய்ச்சி, பனங்கற்கண்டு சேர்த்து, கொதிக்க வைத்து, வடிகட்டி, வைரஸ் காய்ச்சல் உள்ளவர்களுக்கு கொடுக்கலாம். உடனடியாக காய்ச்சல் பறந்தோடி விடும்.

பெண்கள் இதய நோயை தக்காளி கட்டுப்படுத்தும்



அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகம் நடத்திய இது தொடர்பான ஆய்வை ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. அதில், கூறியுள்ளதாவது:

புத்துணர்ச்சி தரும் உலர் திராட்சை



திராட்சையில் நிறைய வகைகள் உள்ளது. அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய திராட்சை உலர் திராட்சை தான். இந்த பழங்கள் உலர வைத்து எடுப்பதால் உலர் திராட்சை பழம் என்கிறோம்

பப்பாளி பழத்தின் மருத்துவக் குணங்கள்:-


1. பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும்.

2. பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும். தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும்.

கஸ்தூரி மஞ்சள் மருத்துவக் குணங்கள்



கஸ்தூரி மஞ்சள் சாதாரண மஞ்சளை விடச் சற்று மணம் அதிகமுள்ளது. தோல் நோய்களைப் போக்கும் தன்மையைப் பெற்றது.

பாட்டி வைத்தியம்..!




1. புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும்.

2. குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிய நாளில் மட்டும் கீரை சாப்பாட்டுக்கு கொடுக்கக் கூடாது.

அல்சர் இருந்தால் எப்படி குணப்படுத்துவது?



அல்சர் என்பது உடலில் பல்வேறு பகுதிகளில் ஏற்படும் புண்களைக் குறிக்கும். புண்கள் ஏற்பட்டு, அப்புண்ணில் வலி ஏற்பட்டு, அந்த இடம் பாதிப்படைந்து, வைரஸ், பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளால், அவற்றில் இரண்டாம் தொற்று ஏற்பட்டு, உடல் சோர்வடைந்து, சிகிச்சையில் பெரும் தாமதத்தை ஏற்படுத்துவதே அல்சரின் அறிகுறிகளாகும்.

கால் ஆணி.


பாதங்களைத் தாக்குவதில் பித்தவெடிப்பிற்கு அடுத்தபடியாக இருப் பது கால் ஆணி. இது பாதத்தைத் தரையில் வைக்க முடியாத அள விற்கு பிரச்சனையை ஏற்படுத்து ம். கால் ஆணி என்பது அதிகமான உடல் அழுத்தம் காரணமாக உரு வாகிறது.

கற்றாழை

ஏற்கனவே கற்றாழை பயன்படுத்தி இருந்தால் அதன் பயன்பாடு, ஆரோக்கிய நலன்கள் ஆகியவைப் பற்றித் தெரிந்திருக்கும். முகத்தை அழகுபடுத்த காயங்கள், சூடுகளில் ஏற்படும் கட்டி மறைய என பலவற்றிற்கு கற்றாழை பயன்படுகிறது. ஆனால் கற்றாழையை உட்கொள்வதால் ஏற்படும் உடல் நல நன்மைகளைத் தெரிந்து கொள்வோமா?

Saturday, 14 May 2016

Important links


🔘 GOVERNMENT INTRODUCED ONLINE SERVICES 🔘

*Obtain:
🔴1. Birth Certificate
http://www.india.gov.in/howdo/howdoi.php?service=1

🔴2. Caste Certificate
http://www.india.gov.in/howdo/howdoi.php?service=4

🔴3. Tribe Certificate
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=8

Friday, 13 May 2016

மத்தி மீன் (சாளை மீன் )


சர்க்கரை நோய் உள்ளவர்கள், மத்தி மீன் (சாளை மீன் )சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு திறன் அதிகரித்து ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தலாம். மத்தி மீன்களில் கால்சியம் அதிகம் இருப்பதால்

Tuesday, 26 April 2016

ஒரு வரியில் இயற்கை மருத்துவம் பற்றி தெரிந்து கொள்வோம்!!!

01. வரட்டு இருமலுக்கு சிறந்தது திராட்சை.!
02. முதுகுத்தண்டு வலிக்கு பாப்பாளிப்பழம் சாப்பிடு!
03. இரத்த அழுத்தம் குறைய எலுமிச்சை!
04. மூளைக்கு வலியூட்ட வல்லாரை!

Saturday, 16 April 2016

உங்க வீட்டு தீயசக்தி அழியனுமா???

உங்க வீட்டு தீயசக்தி அழியனுமா ,,,???

** வீட்டில் இருக்கும் ஆவி முதலான தீய சக்திகள் வெளியேற ஒரு ஆன்மீகவழிமுறை!!!
** பிள்ளையாருக்கு போட்ட அருகம்புல் மாலையை மறுநாள் வீட்டுக்குக் கொண்டு வந்து சில நாட்கள் வைக்கவும்.
** அருகம்புல் மாலை காய்ந்தவுடன் அதைக் கட்டியிருக்கும் வாழை நாரை நீக்கிவிட்டு,அருகம்புல்லை இடித்து தூள் ஆக்கவும்.
** மேற்படி தூளை சாம்பிராணியுடன் கலந்து அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் வீட்டில் போட்டால் வீட்டில் உள்ள தீய சக்திகள் வெளியேறும்.
**இது அதிக செலவில்லாத பரிகாரம்.ஆனால்,பலனோ அபரிதமானது

சாமுத்திரிகா லக்ஷ்ணம் ( முழுமையானது )

சாமுத்திரிகா லக்ஷ்ணம் [ 32 அமைப்புகள் ]

மனிதர்களுக்கு பலவாறாக அமைப்புகள் இருந்தாலும் மொத்தம் 32 சாமுத்திரிகா லக்ஷ்ண அமைப்புகள் இன்றியமையாது ..
அவைகள்
ஐந்து இடம் நீண்டு இருக்க வேண்டும்
ஐந்து இடம் மிருதுவாக இருக்க வேண்டும்

எளிய கடன் நிவர்த்தி முறை :-

எளிய கடன் நிவர்த்தி முறை :-

கடன் பெற்றான் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என்பதை போல கடன்என்பது கொடிய விஷமே

வளமான வாழ்க்கைக்கு சித்தர்களால் சொல்லப்பட்ட மாந்திரீக தாந்திரீக ரகசிய 20 பரிகார முறைகள்.

(அவசியம் படிக்க தவறாதீர்கள் )

(1) முக்கியமான காரியங்களுக்கு வெளியில் செல்லும் பொழுது சிறிது மஞ்சள் தூள் அல்லது ஒரு மஞ்சள் கட்டை எடுத்து செல்ல, போகிற காரியம் தடையில்லாமல் முடிவடையும்.

இந்து" சமயத்தில் திருமண நிகழ்ச்சியின் போது செய்யப்படும் திருமண சடங்குகளும் அதன் விளக்கமும்...

நம்முடைய "இந்து" சமயத்தில் திருமண நிகழ்ச்சியின் போது செய்யப்படும் திருமண சடங்குகளும் அதன் விளக்கமும்:

1. நாட்கால் நடல்:
இதை பந்தகால் நடுவது என்பார்கர்கள்.
பந்தகால் நடுவதற்கு வேரில்லாமல் துளிரும் மரத்தை (பூவரசம் மரம்) வெட்டி நடவேண்டும்.

நல்வினைக்கான நன்மைகள் :-

1 அன்னதானம் செய்தல் விரும்பிய உலகத்தில் ஒரு வருடம் வீதம் சுகித்திருப்பார்.
2 கோ தானம் செய்தல் கோலோகத்தில் வாழ்வர்.

64 திருவிளையாடல்கள் பற்றி

ஒரு செயலைத் தொடங்கும் முன், அந்த செயல் பற்றிய முழு விபரங்களையும் தெரிந்து வைத்துக் கொண்டால், மிகவும் சிறப்புடையதாக இருக்கும். முன்பின் தெரியாத ஊருக்குச் செல்லும் போது,

1. இந்திரன் பழிதீர்த்தப் படலம்


ஆசிரியரை மாணவர்கள் மதித்து நடந்து கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துவதாக சிவபெருமானின் முதல் திருவிளையாடல் அமைந்தது. தேவலோகத்தின் அரசன் யார் என்றால் தேவேந்திரன் என்று பச்சைக்குழந்தை கூட பதில் சொல்லிவிடும்.

2.வெள்ளை யானை சாபம் தீர்த்த படலம்!

இந்திரனின் வாகனமான ஐராவதம் அவனுக்காக காத்து நின்றது. கருடனால் பாம்பை பிடிக்க முடியும்... ஆனால், அது பரமசிவன் கழுத்தில் இருந்தால் கருடனால் நெருங்க முடியுமா!

3.திருநகரங்கண்ட படலம்!

மதுரை மாநகரம் இயற்கையாக எழுந்ததல்ல. அது உருவாக்கப்பட்ட ஒரு நகரம். அதை உருவாக்கி அருளியவரும் ஆலவாய் அழகனான சொக்கநாதனே! ஒரு காலத்தில், பாண்டியநாடு கடம்பவனங்கள் நிறைந்த வனமாக இருந்தது. அந்த வனத்துக்குள் ஏராளமான அருவிகள் இருந்தன.

4.தடாதகைபிராட்டியாரின் திருஅவதாரப் படலம்!

குலசேகர பாண்டியன் மதுரை நகரை நிர்மாணித்ததன் பலனாக அழகான மகனையும் பெற்றான். அவனுக்கு மலையத்துவஜன் என்று பெயரிட்டான் குலசேகர பாண்டியன். அந்த மன்னனின் மகளாக தன் மனைவி பார்வதிதேவியையே அவதரிக்கச் செய்தார் சிவபெருமான்.

5. தடாதகையாரின் திருமணப் படலம்!

உலகத்துக்கே ஒரு தாயை ஈன்றெடுத்துக் கொடுத்த காஞ்சனமாலையும், உலகத்தாயான தடாதகைபிராட்டியும் தங்கள் குல தலைமையை இழந்து அடைந்த கவலைக்கு அளவே இல்லை. அவருக்குரிய ஈமச்சடங்குகளை தடாதகையே முன்னின்று செய்தாள். தந்தையில்லாத வீடு... மகளுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டால் வீட்டுக்கு மருமகன் வந்துவிடுவார்.

6. வெள்ளியம்பல திருக்கூத்தாடிய படலம்!

எம்பிரானுக்கும், தடாதகை பிராட்டியாருக்கும் திருமணம் இனிதே நிறைவுபெற்ற பின் திருமண விருந்து துவங்கியது. திருமணத்துக்கு வந்தவர்களையெல்லாம் விருந்துண்ண சுந்தரேசர் அழைத்தார்.

7.குண்டோதரனுக்கு அன்னமிட்ட படலம்!

அனைத்து மக்களும் சாப்பிட்டாயிற்று. லட்சக்கணக்கில் திருமணத்துக்கு வந்திருந்த மக்களும் சாப்பிட்டாலும், சமைத்ததில் பெரும் பங்கு மிஞ்சிவிட்டது. எவ்வளவு பரிமாறினாலும், உணவின் அளவு அப்படியே இருப்பது போல் தெரிகிறதே! இது ஏதோ மாயவித்தை போல் தெரிகிறதே!

8.அன்னக் குழியும் வையையும் அழைத்த படலம்!

நாதா! இதென்ன அதிசயம்! பல லட்சக்கணக்கானோருக்கான உணவை இவன் ஒருவன் சாப்பிட்டு விட்டானே! இன்னும் இவனை விட்டால் சமையல்காரர்களையும், பாத்திரங்களையும் கூட தின்று விடுவான் போலிருக்கிறதே!

9.ஏழுகடல் அழைத்த படலம்!

கவுதமர் என்னும் மகரிஷி, அரசி காஞ்சனமாலையைச் சந்தித்தார். ஸ்ரீராமபிரானால் கல்லாய் இருந்து சுயரூபம் பெற்றாளே அகலிகை, அவளது கணவரே இந்த கவுதமர். தேவேந்திரன் தப்பு செய்தாலும் அவனையே சபிக்கும் ஆற்றலுள்ளவர், மிகப் பெரிய தபஸ்வி.

10.மலையத்துவஜனை அழைத்த படலம்!

காஞ்சனமாலைக்கு வருத்தம். ஏழுகடல் வந்தாயிற்று, புனித நீரும் ஆடலாம். ஆனால், சாஸ்திரம் என்ன சொல்கிறது தெரியுமா? தீர்த்தமாடினாலும் சரி, கோயிலுக்கு போனாலும் சரி...திருமணத்துக்குப் பிறகு தம்பதி சமேதராகச் சென்றால் தான் சிறந்த பலன் உண்டு.

11.உக்கிரபாண்டியன் திருஅவதாரப் படலம்!

ஈசன் அதற்கு ஏதும் பதில் சொல்லாவிட்டாலும், தடாதகை பிராட்டியாருக்கு அருள் செய்ய மனதில் எண்ணிவிட்டார். தன் மகன் முருகப்பெருமானை அழைத்தார். ஏறுமயிலேறி விளையாடியபடியே ஆறுமுகன் அவர் முன் வந்துநின்றான். தந்தையே! என்னைத் தாங்கள் அழைத்த காரணம் என்ன? என்றான். முருகனைத் தன் மடியில் அமர்த்திக்கொண்டார் ஈசன்.

12. உக்கிரபாண்டியனுக்கு வேல்வளை செண்டு கொடுத்த படலம்!

உக்ரவர்மனுக்கு பெண் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள் என்ற செய்தி, பல தேசங்களுக்கும் பரவவே, ராஜாக்கள் தங்கள் பெண்களை அவனுக்கு மணம் முடித்து வைக்கக் கருதி, தங்கள் பெண்களின் ஓவியங்களையும், ஜாதகத்தையும் அனுப்பி வைத்தனர்.

13.கடல் சுவற வேல் விடுத்த படலம்!

உக்கிரபாண்டியன் பொறுப்பேற்று சில மாதங்கள் கடந்தன. தந்தையைப் போலவே, உக்கிரபாண்டியனும் நல்லாட்சி நடத்தி வந்தான். அவனது மனைவி காந்திமதியும் கணவனின் மனம்கோணாமல் நடந்து, புகுந்த வீட்டுக்கும், பிறந்த வீட்டுக்கும் பெருமை தேடித்தந்தாள். உக்கிரபாண்டியன் 96 யாகங்களைச் செய்து முடித்து, மதுரை நகர் செழிப்புடன் இருக்க வழிவகை செய்தான்.

14.இந்திரன் முடிமேல் வளை எறிந்த படலம்!

பாண்டியநாட்டிலும், சேர, சோழ நாடுகளிலும் திடீரென மழை பொய்த்தது. தமிழக நாடுகள் அனைத்திலும் பஞ்சம் தலைவிரித்தாடியது. மக்கள் பட்ட துன்பத்திற்கு அளவில்லை.

15.மேருவை செண்டால் அடித்த படலம்!

மதுரை மீண்டும் செழிக்க, கவலை நீங்கிய உக்கிரபாண்டியன் மனைவி காந்திமதியுடன் இன்புற்று வாழ்ந்தான். காந்திமதி கர்ப்பமானாள். அவர்களுக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு வீரபாண்டியன் என அவன் பெயர் சூட்டினான். குழந்தை வீரபாண்டியனுக்கு மூன்று வயதாகும் போதே அவனுக்கு எல்லா தெய்வ ஸ்லோகங்களும் அத்துப்படியாகி விட்டது.

16.வேதத்திற்கு பொருளருளிச் செய்த படலம்!

ஐம்பெரும் பூதங்களும் ஒரு காலத்தில தத்தம் நிலையில் இருந்து மாறுபட்டன. பதினான்கு உலகங்களும் அவற்றில் அடங்கிய அனைத்தும் தோன்றியவாறே அடங்கி ஒடுங்கின. ஊழிக்காலம் வரவே மறைகளும் ஒடுங்கின.

17.மாணிக்கம் விற்ற படலம்!

மன்னன் வீரபாண்டியனுக்கு பல போகங்கள் விளைகின்ற நிலங்கள் ஏராளம் இருந்தன. அரண்மனையின் அந்தப்புரத்தில் ஆசைநாயகிகள் இருந்தனர். அவர்களுக்கு பேரழகு நிறைந்த புதல்வர்கள் பலர் பிறந்தனர்.

18.கடலை வற்றச் செய்த படலம்!

பாண்டியனின் ஆட்சி தழைத்தோங்கிய நேரத்தில் ஆண்டுதோறும் மதுரையில் சித்ரா பவுர்ணமியன்று இரவில் சொக்கலிங்கப் பெருமானுக்கு நெய், பச்சைக்கற்பூரம், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யும் முறையை உருவாக்கினான் அபிஷேகப் பாண்டியன். அதுவரை, தேவலோக தலைவனான இந்திரனே பவுர்ணமி அபிஷேகத்தை பூலோக மக்கள் அறியாத வண்ணம் நடத்திக் கொண்டிருந்தான்.

19.நான் மாடக்கூடலான படலம்!

வருணனுக்கோ தன் சக்தி எடுபடாமல் போனது குறித்து வருத்தமும், கோபமும் ஏற்பட்டது. எப்படியும் தன் சக்தியை வெளிப்படுத்த வேண்டுமே என்ற எண்ணத்தில், கடல் நீரை உறிஞ்சிச் சென்ற மேகங்களைத் தடுத்து, மேகங்களே! நீங்கள் உறிஞ்சிய நீரை மழையாகக் கொட்டுங்கள்.

20.எல்லாம் வல்ல சித்தரான படலம்!

அபிஷேகப் பாண்டியனின் ஆயுளை முடித்து தன் திருவடியில் சேர்த்துக் கொள்ள சிவபெருமான் விருப்பம் கொண்டார். தன்னை ஒரு சித்தர் போல உருமாற்றிக் கொண்டு கோயிலுக்குள் அமர்ந்திருந்தார். தங்கள் ஊருக்கு புதிதாக வந்துள்ள சித்தரைக் கண்ட மக்கள் அவரது தெய்வீக தோற்றம் கண்டு பணிந்து வணங்கினர்.

21.கல் யானைக்கு கரும்பு தந்த படலம்!

அமைச்சர்களே! முனிவர்களும் சித்தர்களும் ஆண்டவனையே தங்கள் பணியைச் செய்யும்படி கட்டளையிடும் சக்தி பெற்றவர்கள். சாதாரண மன்னனான என்னை அவர் இருக்கும் இடத்திற்கு வரச்சொன்னதில் என்ன ஆச்சரியம் இருக்கப்போகிறது? அவரை நானே சென்று பார்க்காமல், இங்கே வரவழைக்கச் சொன்னது என் தவறு தான். இதோ புறப்படுகிறேன், என்றவன், மீனாட்சியம்மன் கோயிலுக்கு மந்திரி பிரதானிகளுடன் விரைந்தான்.

22.யானை எய்த படலம்!

விக்ரமப்பாண்டியனின் ஆட்சியில் தர்மம் தழைத்தது. மக்கள் இல்லை என்ற சொல்லையே அறியாமல் வாழ்ந்தனர். சைவத்தை வளர்த்த மன்னன் பிற மதங்களின் வளர்ச்சியை தடை செய்து விட்டான்.

23.விருத்த குமார பாலரான படலம்!

விக்கிரம பாண்டியனுடைய ஆட்சிகாலத்தில் மதுரை மாநகரில் விருபாக்ஷர் என்னும் அந்தணர் வாழ்ந்து வந்தார். அவரது மனைவியின் பெயர் சுபவிரதை. தம்பதியர் ஒற்றுமையுடன் திகழ்ந்தனர். ஆனால், இறைவன் அவர்களுக்கு புத்திர பாக்கியத்தைக் கொடுக்கவில்லை. அவர்கள் அன்னை மீனாட்சியையும், சோமசுந்தரரையும் தினமும் தரிசித்து தங்களுக்கு குழந்தை வரம் அருளும்படி கண்ணீர் உகுத்துக் கேட்டுக் கொண்டனர்.

24. கால் மாறி ஆடிய படலம்!

இந்த சமயத்தில் மதுரையில் விக்கிரமபாண்டியனின் ஆட்சி முடிவுக்கு வந்தது. அவன் மறைந்து விட்டதால், அவனது மகன் ராஜசேகரன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றான். அவனும் தன் முன்னோர் களைப் போல சிவபக்தியில் ஆழ்ந்து கிடந்தான். அவனுக்கு ஆயகலைகள் அறுபத்து நான்கையும் படிப்பதற்கு ஆசை.

25.பழியஞ்சின படலம்!

ராஜசேகரபாண்டியன் மறைவுக்குப் பின் அவரது மகன் குலோத்துங்க பாண்டியன் ஆட்சிப் பொறுப்பேற்று செவ்வனே ஆட்சி நடத்தி வந்தான். அவனது மகன் அனந்தகுண பாண்டியன் அடுத்து பதவியேற்றான். இவனது ஆட்சிக்காலத்தில், மதுரையம்பதிக்கு திருப்புத்தூர் என்னும் ஊரைச் சேர்ந்த அந்தணர் ஒருவர் தன் மனைவி, குழந்தையுடன் வந்து கொண்டிருந்தார்.

26. மா பாதகம் தீர்த்த படலம்!

மன்னன் குலோத்துங்கனின் ஆட்சியில் இன்னொரு அதிசய சம்பவமும் நிகழ்ந்தது. அவனது தேசத்தில் பல கொடியவர்களும் வாழத்தான் செய்தனர். அவர்களில் ஒரு அந்தண இளைஞனும் அடக்கம். அவன் சாதாரண கொடியவன் அல்ல! அவனது தந்தை ஆசார அனுஷ்டானங்களை தவறாமல் கடைபிடிப்பவர். ஆனாலும், முன்வினைப் பயனால், ஒரு கேடு கெட்ட பிள்ளை பிறந்தான். அவனுக்கு எந்த நேரமும் நாட்டியத்தாரகைகளின் வீடே கதியென இருந்தது.

Saturday, 26 March 2016

மூச்சுக்காற்றே‬ ‪#‎மூலதனம்‬ ...

காலையில் முழித்த முகம் சரியில்லை! எடுத்த காரியம் எதுவும் நடக்கவில்லை! என்று அலுத்துக் கொள்வோர்களும், இன்றைக்குக் கழுதை முகத்தில் முழித்திருப்பான் போலிருக்கிறது! அதிர்ஷ்டக்காரன், அவனுக்கு அடித்தது, யோகம் என்று வியந்து போவோரும் இருக்கின்றார்கள். ஆனால், காலையில் தூங்கி எழும்போதே அன்றைய தினம் எப்படி இருக்கும்! எப்படி இருந்தால் தனக்கு நன்மை உண்டாகும் என்பதை அறிந்து செயல்படுபவர்கள் குறைவு. 

Sunday, 14 February 2016

மலபார் சிக்கன் ரோஸ்ட்



Unave Uyire உணவே உயிரே's photo.
கேரளா ஸ்டைல் உணவுகளின் சுவையே தனி தான். அதிலும் மலபார் சிக்கன் ரோஸ்ட் மிகவும் அருமையாக இருக்கும். விடுமுறை நாட்களில் வீட்டில் பொறுமையாக செய்து சாப்பிடுவதற்கு ஏற்ற ரெசிபியும் கூட. பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். சரி, இப்போது அந்த மலபார் சிக்கன் ரோஸ்ட் எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

சிக்கன் மலாய் டிக்கா




இதுவரை சிக்கன் மலாய் டிக்காவை ஹோட்டல்களில் தான் சுவைத்திருப்பீர்கள். ஆனால் அந்த டிக்காவை வீட்டிலேயே எளிமையாக செய்யலாம். குறிப்பாக இதனை வீட்டில் செய்தால் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். சிக்கன் மலாய் டிக்காவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

பீர்க்கங்காய் முட்டை பொரியல்

Unave Uyire உணவே உயிரே's photo.


இதுவரை முட்டை பொரியலில் வெறும் வெங்காயம், தக்காளியை மட்டும் சேர்த்து தான் பொரியல் செய்திருப்பீர்கள். ஆனால் அதோடு ஏதேனும் காய்கறிகளை சேர்த்து பொரியல் செய்ததுண்டா? ஆம், முட்டை பொரியலில் பீர்க்கங்காயை சேர்த்து செய்தால், மிகவும் சுவையாக இருக்கும். மேலும்

மொறுமொறுப்பான... மட்டன் சாப்ஸ

Unave Uyire உணவே உயிரே's photo.


தேவையான பொருட்கள்:
எலும்பில்லாத மட்டன் - 7 பெரிய துண்டுகள் 
காஷ்மீரி மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்
கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
மைதா - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கரம் மசாலா - 2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

மட்டன் சுக்கா

Unave Uyire உணவே உயிரே's photo.


மட்டன் உடலுக்கு குளிர்ச்சி தரும். எனவே வாரம் ஒருமுறை தவறாமல் மட்டனை உணவில் சேர்க்க வேண்டியது அவசியம். அதிலும் விடுமுறை நாட்களில் மட்டனை விதவிதமாக சமைத்து பொறுமையாக உட்கார்ந்து சாப்பிட்டால் எவ்வளவு சூப்பராக இருக்கும். அதிலும் மட்டன் சுக்கா செய்து ரசம் சாதத்துடன் சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும்.

இட்லி சாட்


மாலையில் பள்ளி முடிந்து பசியுடன் வரும் குழந்தையின் பசியை வித்தியாசமான ஸ்நாக்ஸ் மூலம் போக்க நினைத்தால், இட்லி சாட் செய்து கொடுங்கள்.
இது வித்தியாசமான சுவையில் இருப்பதோடு, குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையிலும் இருக்கும். மேலும் இது ஆரோக்கியமானதும் கூட. சரி, இப்போது அந்த இட்லி சாட் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்து என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்: 
மினி இட்லி - 16 

வான்கோழி குழம்பு


வான்கோழி பிரியாணி, வான் கோழி வறுவல் என்று வான்கோழியை பலவாறு சுவைத்திருப்பீர்கள். ஆனால் வான்கோழி குழம்பு செய்து சுவைத்ததுண்டா? வான்கோழி குழம்பு மிகவும் சுவையாக இருக்கும். அதிலும் அதை சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால், இன்னும் அருமையாக இருக்கும்.
சரி, இப்போது அந்த வான்கோழி குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வான்கோழி - 1/2 கிலோ
உப்பு - தேவையான அளவு
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
தண்ணீர் - 1 கப்
மசாலாவிற்கு:
எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 2 (நறுக்கியது)
தக்காளி - 3 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மல்லித் தூள் - 2 1/2 டேபிள் ஸ்பூன்
சோம்பு பொடி - 2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிது

குட்டநாடன் மீன் குழம்பு

Unave Uyire உணவே உயிரே's photo.


ஆந்திராவைப் போலவே கேரள உணவுகளும் மிகவும் காரமாக இருக்கும். அதிலும் கேரளாவில் மீன் குழம்பு தான் மிகவும் பிரபலமானது. அதிலும் குட்டநாடன் மீன் குழம்பு மிகவும் காரமாகவும், சுவையாகவும் இருக்கும். இதற்கு அதில் சேர்க்கப்படும் குடம்புளி தான் காரணம். சரி, இப்போது அந்த குட்டநாடன் மீன் குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து விடுமுறை நாட்களில் செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

காரமான மட்டன் மசாலா

Unave Uyire உணவே உயிரே's photo.


மழைப் பெய்யும் போது நன்கு காரமாக சாப்பிடத் தோன்றும். அதிலும் அசைவ உணவு என்றால் சொல்லவே வேண்டாம் அற்புதமாக இருக்கும். உங்களுக்கு மட்டன் பிடிக்குமானால், அதனை மதிய வேளையில் மசாலா போன்று செய்து சுவையுங்கள். அதிலும் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது போன்று செய்து சுவைத்தால், இன்னும் அருமையாக இருக்கும். ஏனெனில் இந்த ரெசிபியில் மட்டனை நன்கு ஊற வைத்து பின் மசாலா போன்று செய்வதால்,

திண்டுக்கல் தலப்பாக்கட்டு சிக்கன் பிரியாணி




தேவையான பொருட்கள்:
நெய் - 2 டேபிள் ஸ்பூன் 
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
பாசுமதி அரிசி - 2 கப்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 3
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 3 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி - 1/2 கப்
புதினா - 1/2 கப்
கெட்டியான தேங்காய் பால் - 1 கப்
தண்ணீர் - 2 கப்
உப்பு - தேவையான அளவு
ஊற வைப்பதற்கு:
சிக்கன் - 1/2 கிலோ
கெட்டியான புளிக்காத தயிர் - 1 கப்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
பிரியாணி மசாலா பொடிக்கு:
சோம்பு - 1 1/2 டேபிள் ஸ்பூன்
பட்டை - 2 துண்டு
ஏலக்காய் - 4
அன்னாசிப்பூ - 1
கிராம்பு - 4

கருவாட்டு குழம்பு


தேவையான பொருட்கள்:
கருவாடு - 200 கிராம் 
கத்திரிக்காய் - 1/4 கிலோ (நறுக்கியது)
உருளைக்கிழங்கு - 2 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
புளி - 1 எலுமிச்சை அளவு (நீரில் ஊற வைத்து சாறு எடுத்தது) கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
அரைப்பதற்கு...
சின்ன வெங்காயம் - 1 கையளவு
மல்லி தூள் - 50 கிராம்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
வரமிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
பூண்டு - 4 பற்கள்
துருவிய தேங்காய் - 1/4 கப்

முட்டை நூடுல்ஸ்

Unave Uyire உணவே உயிரே's photo.


தேவையான பொருட்கள்:
நூடுல்ஸ் - 2 கப் 
காய்கறிகள் - 1 1/4 கப் (முட்டைக்கோஸ், கேரட் மற்றும் குடைமிளகாய்)
சோயா சாஸ் - 3/4 டீஸ்பூன்
சில்லி சாஸ் - 1/2 டேபிள் ஸ்பூன்
முட்டை - 2
பூண்டு - 2 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
ஆலிவ் ஆயில் - 2 டேபிள் ஸ்பூன் + 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

ப்ரைடு சிக்கன்


Unave Uyire உணவே உயிரே's photo.
தேவையான பொருட்கள்:
மல்லி - 1 டேபிள் ஸ்பூன்
மிளகு - 10 
சீரகம் - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்ழுன்
பட்டை - 1 இன்ச்
கிராம்பு - 5
சிக்கன் - 1/2 கிலோ
வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
பூண்டு - 5 பற்கள் (நறுக்கியது)
வினிகர் - 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

கோவா க்ரீன் சிக்கன் குழம்பு

Unave Uyire உணவே உயிரே's photo.


கோவாவில் மிகவும் பிரபலமானது தான் க்ரீன் சிக்கன் குழம்பு. இந்த குழம்பு புலாவ், தேங்காய் சாதம் போன்றவற்றுடன் சாப்பிட ஏற்றவாறு இருக்கும். மேலும் இந்த குழம்பை வீட்டிலேயே எளிமையாக செய்யலாம். சரி, இப்போது அந்த கோவா க்ரீன் சிக்கன் குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

செட்டிநாடு ஸ்பைசி நண்டு கிரேவி

Unave Uyire உணவே உயிரே's photo.


நண்டில் புரோட்டீன் அதிகம் உள்ளது. அதே சமயம் இது உடல் சூட்டை அதிகரிக்கும் என்பதால் மழைக்காலத்தில் இதனை சாப்பிடுவது உடலுக்கு இதமாக இருக்கும். மேலும் நண்டு உடல் வலிமையை அதிகரிக்கும். இதில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்களும் அடங்கியுள்ளது. இந்த நண்டை மசாலா, கிரேவி, குழம்பு என்று செய்து செய்து சுவைக்கலாம்.

நெத்திலி மீன் தொக்கு

Unave Uyire உணவே உயிரே's photo.

பலருக்கும் மீனை எப்படி சமைத்து சாப்பிடுவதென்று தெரியாது. அப்படியே தெரிந்தாலும் சுவையாக சமைக்க தெரியாது. அதிலும் குட்டியாக இருக்கும் நெத்திலி மீனை பலரும் குழம்பு தான் செய்து சுவைத்திருப்பார்கள். ஆனால் அதனை தொக்கு செய்தால், இன்னும் சுவையாக இருக்கும் என்பது தெரியாது. உங்களுக்கு நெத்திலி மீன் தொக்கு எப்படி செய்வதென்று தெரியாவிட்டால் தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் இங்கு நெத்திலி மீன் தொக்கின் செய்முறை தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து இந்த விடுமுறையன்று செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Sunday, 7 February 2016

தெரிந்ததும் தெரியாததும் ...3

1.பெண்கள் கடவுளையோ அல்லது பெரியவர்களையோ
வணங்கும் பொழுது
பூமியில் விழுந்து வணங்கவேண்டும் ,விழுந்து வணங்கும்போது கூந்தல் தரையில் விழக்கூடாது. காலின் மேலும் விழக்கூடாது இதனால் தெய்வ அருளும், பெரியவர்களின் ஆசியும் பூரணமாகக் கிடைக்காதபடி தேவதைகள் தடுக்கும் அகவே கொண்டை போட்டுக் கொண்டோ - அள்ளி முடிந்து கொண்டோ விழுந்து வணங்க வேண்டும். இதனால் நீண்டநாள் ஆரோக்யமாக வாழலாம் என கூறுகிறது தர்ம சாஸ்திரம்..

தெரிந்ததும் தெரியாததும் --4( சில வித்தியாசமான தகவல்கள் )


1.விநாயகருக்கு சாற்றிய அருகம் புல் மாலையை உதிர்த்து அதை நன்றாக காய விட்டு வியாழன் ,பௌர்ணமி அம்மாவசை அன்று தூபம் போடா தீய சக்திகள் இருந்தால் விலகி ஓடும் (விநாயகரின் மறுநாள் கலைகபடும் மாலை)...இதை வியாபார இடத்திலும் செய்யலாம் ..
2.தொட்ட சிணுங்கி ,முடக்கத்தான் ,துளசி ,வில்வம்,கத்தாழை போன்ற செடிகள் வீட்டில் வளர்த்தால் கண் படுத்தல்

தெரிந்ததும் தெரியாததும் ....5


1.வெற்றிலை போடும்போது முதலில் பாக்கை வாயில் போடக்கூடாது.
2.நெய்,தேன், இரண்டையும் ஒரே நேரத்தில் சாப்பிடக்கூடாது.
3.மடியில் தட்டை வைத்துக்கொண்டு, சாப்பிடுதல் கூடாது.

தெரிந்ததும் தெரியாததும் ...6


1.கோயில்கள்,நதிக்கரைகள்,பசுமடம்,மகான்களின் சமாதி
இந்த இடத்தில், தீபம் ஏற்றி வழிபட்டால்,நமது தரித்திரம் விலகும்.புத்தியிலும்,மனத்திலும் உள்ள குழப்பங்கள் நீங்கும்.
2.திங்கள், புதன், வியாழன் திருமண

தெரிந்ததும் தெரியாததும் --7


லக்ஷ்மி அருள் தழைக்க ....
1.காலை எழுந்தவுடன் தனது உள்ளங்கைகள், பசு, கோவில் கோபுரம், இறைவனின் திருவுருவப் படம் இவற்றை பார்க்கவேண்டும்
2.தினசரி விளக்கேற்றுவது

தெரிந்ததும் தெரியாததும் --8 (சில விசித்திர பரிகாரம்கள் )


1.விநாயகருக்கு சுண்டைக்காய் மலர் வைத்து வழிபட உடலில் உள்ள தீய சக்திகள் விலகி ஓடும் .
2.வெளியில் செல்லும் பொழுது எதிரில் பிணம் தென்பட்டாலோ அல்லது பிணம் எரிவதை தற்செயலாக பார்க்க நேரிட்டாலோ சில நாணயங்களை பூமியில் போட்டு விட்டு அவ்விடத்தை விட்டு செல்ல, அந்த ஆத்மவினால் ஏற்படும் எதிர் மறை விளைவுகள் ஏற்படாமல் இருக்கும்.

தெரிந்ததும் தெரியாததும் --9

1.இருட்டில் சாப்பிடக் கூடாது. சாப்பிடும்போது விளக்கு அணைந்து விட்டால், சூரியனை தியானம் செய்து, மீண்டும் விளக்கேற்றி, அதன் பின்பே சாப்பிட வேண்டும்.(இன்று மின்சாரம் உள்ளதால் இப்படி தடையாகும் நேரத்தில் ஒருமுறை சூரிய சிந்தனை செய்வது நன்மை )
2. மனைவி, கணவனுக்கு வெற்றிலை மடித்துக் கொடுக்கலாமே தவிர, கணவன்- மனைவிக்கும், 
மகன்- தாய்க்கும்,
பெண்- தந்தைக்கும் வெற்றிலை மடித்துத் தரக் கூடாது.

கண்படுதல் என்னும் திருஷ்டிக்கு....

கண்படுதலுக்கு வீட்டில் உள்ள பெரியோர்கள் காய்ந்த மிளகாய் உப்பு மற்றும் அதனுடன் முன்று வீதிகள் சேரும் இடத்தில இருந்து (வீட்டின் அருகில் ) ஒரு சிட்டிகை மண் எடுத்து இதில் சேர்த்து வீட்டில் உள்ள எல்லா நபரையின் கிழக்கு பார்த்து அமரவைத்து தலையை 3 முற்று முறை (இடது 3 வலது 3) என்று சுற்றி அதன் மேல் அவர்கள் எச்சில் துப்பி 

தெரிந்ததும் தெரியாததும் -21..

நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சில தகவல்கள்...
1.பிரசவம் ,பிறப்பு, இறப்பு மாத தீட்டு இவைகளுக்கு வெந்நீரில் குளிக்க கூடாது (உடல்நலம் சரி இல்லாதவர்கள் மட்டும் குளிக்கலாம் ).
2.நீங்கள் இடது புறமாக ஒருக்களித்து படுக்கலாம். வலது புறம் கூடாது.இடது கையை கீழே வைத்து படுக்கும் போது ஆயுசு கூடுகிறது என்று சொல்ல படுகிறது .
உங்கள்வீட்டில் கிழக்கு பக்கம் தலை வைத்து படுக்க வேண்டும் , மாமனார் வீட்டில் தெற்கு பக்கம் தலை படுக்க வேண்டும், வெளியூர் சென்றால், மேற்கு பக்கம் தலை படுக்க வேண்டும். ஒரு போதும் வடக்கில் தலை வைத்துப் படுக்க கூடாது.
3.இஞ்சி,எள்ளுசாதம்,தயிர் இவைகளை இரவு சாப்பிடுதல் ஆகாது.
4.நாம் சாப்பிடும்போது,இடது கையால் தண்ணீர் குடிக்கிறோம் பொழுது
நம் வலது கை தட்டையோ அல்லது இலையையோ, தொட்டுக்கொண்டு இருக்கவேண்டும்.

...Recently Published Post...

குளிக்கும் போது...

குளிக்கும் போது வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று குளிக்கவேண்டும். (இவை இரண்டும் உத்தம திசைகள். (கர்மம் செய்தபின்னும், மயானத்திற்க...