Friday, 24 May 2013
Tuesday, 21 May 2013
சித்த மருத்துவ குறிப்புகள்
* தலைவலி குணமாக: விரவி மஞ்சளை விளக்கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை மூக்கின் வழியாக உரிஞ்ச தலைவலி, நெஞ்சுவலி முதலியன அகலும்.
Saturday, 18 May 2013
பப்பாளி பழத்தின் மருத்துவக் குணங்கள்:-
1. பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும்.
2. பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும். தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும்.
3. பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும்.
4. நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும்.
5. பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்குப்பூச்சிகள் அழிந்து விடும்.
6. பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண், புண்கள் மேல் பூச புண்கள் ஆறும்.
27. அங்கம் வெட்டின படலம்!
குலோத்துங்கனின் ஆட்சிக்காலத்தில் மதுரையில் வாள் பயிற்சிப் பள்ளி ஒன்று இருந்தது. முதியவர் ஒருவர் தனது மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வந்தார். அவரது மனைவியின் பெயர் மாணிக்கமாலை.
28. நாகமெய்த படலம்!
அனந்தகுண பாண்டியனுனின் ஆட்சியால் அமைதியாக இருந்த மதுரை நகரில் மீண்டும் சமணர்களின் ஆதிக்கம் வேரூன்ற துவங்கியது. அவர்கள் சைவ மன்னனான அனந்தகுண பாண்டியனை ஒழித்துக்கட்ட திட்டமிட்டனர்.
29.மாயப் பசுவை வதைத்த படலம்!
அனந்தகுண பாண்டியன் நாகத்தைக் கொன்று பெற்ற வெற்றி, அவனது பேருக்கும் புகழுக்கும் மேலுமொரு மகுடம் சூட்டுவதாக அமைந்தது. இதன்பிற்கும் சமணர்கள் திருந்தவில்லை.
30.மெய் காட்டிட்ட படலம்!
பூஷணின் ஆட்சிக்காலத்தில், சேதிராயன் என்ற குறுநில மன்னன், பல பெரிய நாடுகளிலும் புகுந்து தன் ஆதிக்கத்தை நிலைநிறுத்தி, தன்னை பேரரசனாக மாற்றிக் கொள்ள திட்டமிட்டான். 15 பெரிய நாடுகள் மீது அவனுக்கு கண் இருந்தது. அதில் பாண்டிய நாடும் அடக்கம்.
31.உலவாக்கிழி அருளிய படலம்!
மன்னன் குலபூஷண பாண்டியன் பெரிய வள்ளல். சிவ புண்ணியங்களை தவறாது செய்து வந்ததால் பேரும் புகழும் பெற்றான். இதனால் அவனுக்கு அகந்தை ஏற்பட்டது. அகந்தை கொண்ட மன்னன் குலபூஷணனுக்கு மருந்து தர முடிவு செய்தார் சுந்தரேஸ்வரர். மன்னன் தவறு செய்தால் மக்களுக்கு பாவம். மக்கள் தவறு செய்தால் மன்னனுக்கு பாவம் ஏற்படும் என்பது நியதி.
32. வளையல் விற்ற படலம்!
முற்காலத்தில் மதுரையிலேயே தாருகாவனம் என்ற பகுதி இருந்ததாகக் கருதப்படுகிறது. அங்கு பல ரிஷிகள் தங்கள் பத்தினியருடன் வசித்து வந்தனர். அந்தப் பெண்களுக்கு தாங்களே உலகில் பேரழகு கொண்டவர்கள் என்றும், தங்களது கற்பே உயர்ந்ததென்றும் கர்வம் இருந்து வந்தது.
33.அட்டமா சித்தி உபதேசித்த படலம்!
ஒரு சமயம் கார்த்திகைப் பெண்களின் ஆணவத்தையும் அடக்க திருவிளையாடல் புரிந்தார் சோமசுந்தரர். கைலாயத்தில் ஒருமுறை அவர் உமாதேவியுடன் உரையாடிக் கொண்டிருந்தனர்.
34.விடையிலச்சினையிட்ட படலம்!
மதுரை மன்னன் குலபூஷணனின் காலத்தில் மேலும் ஒரு திருவிளையாடலை நிகழ்த்தினார் சொக்கநாதர்.பூஷணன் மதுரையில் மன்னனாக இருந்த வேளையில், காடுவெட்டி சோழன் என்பவன் சோழநாட்டின் மன்னனாக இருந்தான். அப்போது சோழநாடு காஞ்சிபுரம் வரை விரிவடைந்து இருந்தது. தலைநகரமும் காஞ்சியாகவே இருந்தது.
35.தண்ணீர் பந்தல் வைத்த படலம்!
காஞ்சிபுரம் திரும்பிய காடுவெட்டி சோழனுக்கு தான் கண்ட சோமசுந்தரரின் திவ்யதரிசனத்தை மறக்க முடியவில்லை. எப்போதும் அவரையே நினைத்துக் கொண்டிருந்தான். அடிக்கடி மதுரை வந்து அவரைத் தரிசிக்க பேராவல் கொண்டான். தனது எண்ணம் நிறைவேற வேண்டுமானால்,
36.இரசவாதம் செய்த படலம்!
மதுரை அருகில் திருப்பூவனம் என்ற ஊர் இருந்தது. (இப்போதைய பெயர் திருப்புவனம்) இங்குள்ள பூவனநாதர் கோயிலில் கணிகையர் எனப்படும் ஆடல்குலப் பெண்கள் சிவபெருமானை மகிழ்விக்கும் வகையில் நாட்டியாஞ்சலி நடத்தி வந்தனர். இவர்களில் ஒருத்தி பொன்னனையாள்.
37. சோழனை மடுவில் வீழ்த்திய படலம்!
பாண்டியநாட்டை சுந்தரேச பாதசேகர பாண்டியன் ஆண்டு வந்தான். அவனுக்கு போர்களில் நாட்டமில்லை. படைபலத்தைக் குறைத்து, அதில் மிச்சமாகும் பெரும் தொகையைக் கொண்டு சிவகைங்கர்யம் செய்ய ஆசை கொண்டான். படைபலத்தைப் பாதிக்கும் மேலாக குறைத்து விட்டான்.
38.உலவாக்கோட்டை அருளிய படலம்!
மதுரையில் சோமசுந்தரப் பெருமான் நிகழ்த்திய லீலைகள் கொஞ்ச நஞ்சமல்ல. அவற்றைக் கேட்டாலே உள்ளம் சிலிர்க்கும். அடியார்க்கு நல்லான் என்பவர் தன் மனைவி தர்மசீலையுடன் இங்கு வசித்து வந்தார்.
39.வரகுணனுக்கு சிவலோகம் காட்டிய படலம்!
வரகுணபாண்டியன் ஒருமுறை வேட்டைக்கு கிளம்பினான். மிருகங்களை வேட்டையாடி விட்டு, காட்டு வழியே குதிரைகளில் தனது படைகளுடன் வேகமாக வந்து கொண்டிருந்தான். அப்போது இருள் சூழ்ந்துவிட்டது. வரும் வழியில் அந்தணர் ஒருவர் படுத்திருந்தார்.
40. மாமனாக வந்து வழக்குரைத்த படலம்!
சுந்தரேச பாதசேகரனின் ஆட்சிக்காலத்தில் தனபதி என்ற வணிகர் தன் மனைவி சுசீலையுடன் மதுரை நகரில் வசித்து வந்தார். பெரும் செல்வந்தரான இவருக்கு குழந்தை பாக்கியம் இல்லை.
41. விறகு விற்ற படலம்!
வரகுணபாண்டியனின் ஆட்சிக்காலத்தில், வடநாட்டைச் சேர்ந்த ஹேமநாதன் என்ற யாழ் இசைக்கலைஞர் மதுரை வந்தார். அவரை வரவேற்ற வரகுணன், அவர் பல நாடுகளிலுள்ள யாழிசை விற்பன்னர்களை எல்லாம் வென்றவர் என்பதை அறிந்தார். தனது அரண்மனையில் தங்கிச்செல்ல கேட்டுக்கொண்டார். பாண்டியனின் உபசரிப்பால் மகிழ்ச்சியடைந்த ஹேமநாதனும் அதற்கு சம்மதித்தார்.ஹேமநாதன் இசையில் யாருக்கும் சளைத்தவர் அல்ல என்றாலும், அந்த திறமையே அவருக்கு அகந்தையையும் வளர்த்து விட்டிருந்தது.
42.திருமுகம் கொடுத்த படலம்!
காலப்போக்கில், ஹேமநாதன் மூலம் கிடைத்த பணம், மன்னர் பரிசாக அளித்தது எல்லாம் காலியாகி விட்டது. பாணபத்திரரின் குடும்பத்தில் வறுமை நிலை ஏற்பட்டது. தனக்கேற்பட்ட கதியை பெருமானிடம் சொல்லி அழுதார் அவர். அப்போது அசரீரி ஒலித்தது.
43.பலகையிட்ட படலம்!
சோமசுந்தரக் கடவுளை மூன்று வேளையும் வணங்கி இசை பாடி வந்த பாணபத்திரர் இப்போது அர்த்த சாமத்திலும் இறைவனைப் பாட ஆரம்பித்து விட்டார். தன்னை இசையால் வசப்படுத்திய பாணபத்திரரிடம் மற்றொரு திருவிளையாடலையும் புரிந்தார் ஈசன். ஒருநாள்,
44.இசை வாது வென்ற படலம்
வரகுணப்பாண்டியனின் புதல்வன் ராஜராஜ பாண்டியன் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தான். இந்த சமயத்தில் பாணபத்திரரும் இறைவனடி சேர்ந்து விட்டார். அவரது மனைவியும் யாழிசையில் வல்லவள். அவள் கணவன் விட்ட பணியைத் தொடர்ந்தாள். சோமசுந்தரரின் சன்னதிக்கு வந்து மயக்கும் பாடல்களால் பெருமானையும், பக்தர்களையும் பரவசப் படுத்துவாள்.
45.பன்றிக் குட்டிக்கு முலை கொடுத்த படலம்!
மதுரை அருகில் குருவிருந்த துறை என்ற தலம் (தற்போது குருவித்துறை) உள்ளது. இவ்வூரில் சுகலன் என்பவன் தன் மனைவி சுகலையுடன் வாழ்ந்து வந்தார். இவர்கள் பெரும் பணக்காரர்கள். பணச் செல்வம் மட்டுமின்றி, பிள்ளைச் செல்வத்தையும் கடவுள் வாரி வழங்கியிருந்தார்.
46. பன்றிக்குட்டிகளை மந்திரியாக்கிய படலம்!
சோமசுந்தரக் கடவுளின் அருளால் சாபம் நீங்கப் பெற்ற சகலனின் பிள்ளைகள் சிவபூஜை செய்து வந்தனர். இவர்கள் சகல கலைகளிலும் வல்லவர்கள் ஆனார்கள். ஒரு சமயம் அன்னை மீனாட்சி, சுந்தரேஸ்வரரிடம் பேசிக் கொண்டிருந்த போது,
47.கரிக்குருவிக்கு உபதேசம் செய்த படலம்!
ராஜராஜனின் மகன் சுகுணபாண்டியன், தன் தந்தையின் மறைவுக்குப் பிறகு பதவியேற்றான். அவனது ஆட்சிக்காலத்தில் கரிக்குருவி ஒன்று மதுரை அருகில் இருந்த ஒரு நகரில் வசித்தது. முற்பிறப்பில், இந்தக் குருவி வலிமை மிக்க ஆண்மகனாக விளங்கியது. ஆனால்,
48.நாரைக்கு முக்தி கொடுத்த படலம்!
பாண்டியநாட்டின் தென்பகுதியில் இருந்த பெரிய தடாகம் ஒன்றில் வாழ்ந்த மீன்களை உண்டு நாரை ஒன்று வசித்து வந்தது. ஒரு சமயம் மழை பெய்யாமல் போனதால் குளம் வற்றிப் போனது.
49. திருவால வாயான படலம்!
பாண்டிய நாட்டில் பல அரசர்கள் ஆட்சி நடத்தினர். கீர்த்திபாண்டியன்என்பவன் காலத்தில் உலகம் அழியும் நிலை வந்தது. ஏழு கடல்களும் பொங்கின. எங்கும் வெள்ளம். உலகம் முழுக்க தண்ணீரால் நிறைந்தாலும்,
50. சுந்தர பேரம்பு எய்த படலம்!
சோழமன்னன் விக்கிரமன் பாண்டியன் மீது பகை கொண்டான். ஆலவாய் நகரைப் பிடிக்க திட்டமிட்டான். விக்கிரமனுக்குத் துணையாக வடதேசத்தில் இருந்த சில மன்னர்களும் இணைந்துகொண்டனர். அவர்கள் ஆலவாய் நகருக்குள் புகுந்து பெரும் அட்டகாசம் செய்தனர். மக்களை அடித்து விரட்டினர்.
சங்கப் பலகை கொடுத்த படலம்!
வங்கியசேகரனின் ஆட்சி பாண்டியநாட்டில் நடந்தபோது, வடக்கே உள்ள காசியில் பிரம்மா பத்து அசுவமேத யாகங்களை செய்தார். யாகம் முடிந்த மறுதினம் அவர் தனது துணைவியரான சரஸ்வதி, சாவித்ரி, காயத்ரி ஆகியோருடன் கங்கையில் நீராடச் சென்றார். செல்லும் வழியில் ஒரு கந்தர்வக்கன்னி யாழ் மீட்டிக்கொண்டிருந்தாள். அந்த இனிய இசையைக் கேட்ட சரஸ்வதி,
52.தருமிக்குப் பொற்கிழி அளித்த படலம்!
மதுரையில் தமிழ் வளர்ந்த நேரத்தில் வங்கியசேகர பாண்டியனின் மகன் வங்கிய சூடாமணி பாண்டியன் ஆட்சிப் பொறுப்பேற்றான். இந்த மன்னன் தான் மீனாட்சியம்மன் கோயிலில் நந்தவனம் அமைத்தவன். பல மரங்களையும், மலர்ச்செடிகளையும் அதில் நட்டான். அதில் பூத்த மலர்களே அம்பாளுக்கும், சுவாமிக்கும் மாலை கட்ட பயன்படுத்தப்பட்டன.
53. கீரனைக் கரையேற்றிய படலம்!
சுந்தரரின் கோபத்தால் பொற்றாமரைக் குளத்தில் மூழ்கினார் நக்கீரன். வந்தது ஈசன் என்பதை உணர்ந்த செண்பக பாண்டியன், உணர்ச்சியும் சோகமும் மேலிட நக்கீரரை மீண்டும் பெறும் பொருட்டு கோயில் நோக்கி ஓடினான். மற்ற புலவர்களும் தொடர்ந்து ஓடிச் சென்று,
54. கீரனுக்கு இலக்கணம் உபதேசித்த படலம்!
பரமேஸ்வரன் பார்வதியிடம்,தேவி! நம் பிள்ளை நக்கீரன் என்னையே எதிர்த்து வாதாடியதைக் கவனித்தாயா! அவனது தமிழ்ப்பணி வியப்பிற்குரியது. அவனுக்கு இலக்கணம் கற்றுத்தந்தால், தமிழை இன்னும் அவன் வளப்படுத்துவான். ஆனால், அவனுக்கு இலக்கணத்தைக் கற்றுக் கொடுக்க யார் இருக்கிறார்கள்? அப்படி ஒரு நபரைத் தேர்வு செய்ய வேண்டும். என்ன செய்யலாம்?
55. சங்கத்தார் கலகம் தீர்த்த படலம்!
தமிழ்ச்சங்கத்தில் 48 புலவர்கள் இருந்தனர். அகத்தியர் கற்றுத்தந்த இலக்கணத்திற்கு அகத்தியம் என்று அவரது பெயரைச் சூட்டினர். இலக்கண அடிப்படையில் அதுவரை தாங்கள் இயற்றிய பாடல்களைப் புலவர்கள் சரிபார்த்துக் கொண்டனர்.
56. இடைக்காடன் பிணக்கு தீர்த்த படலம்!
இலக்கண, இலக்கியங்களில் கைதேர்ந்த குசேல வழுதி பாண்டியன், மதுரையை ஆண்டு வந்தான். அவன் சங்கப்புலவர்களுக்கு நிகராக செய்யுள் இயற்றும் திறமை பெற்றவன். ஒரு சமயம், சங்கப்புலவரான கபிலரின் நண்பர், இடைக்காடர் என்பவர் தான் இயற்றிய பிரபந்த நூல் ஒன்றை மன்னனிடம் படித்துக்காட்ட ஆசைப்பட்டார்.
57.வலை வீசிய படலம்!
ஒருநாள் கயிலாயத்தில் சிவபெருமான் சிவஞானபோதம் என்னும் சுவடியைப் படித்துக் கொண்டிருந்தார். அது வேதத்தின் உட்பொருள் பற்றிய நூலாகும். அந்த உட்பொருளை அவர் தன்னருகில் இருந்த துணைவி பார்வதி தேவிக்கு உபதேசித்தார். ஆனால், அம்பாள் அதை ஈடுபாட்டுடன் கவனிக்கவில்லை. ஆசிரியர் கற்றுக்கொடுக்கும் போது, குழந்தைகள் கவனமாகப் பாடத்தைக் கேட்க வேண்டும்.
மூலிகைகளும், தீரும் நோய்களும்...!
-மன்னை வை.ரகுநாதன் -
நமது முன்னோர்களெல்லாம் மூலிகைகளை கொண்டுதான் எல்லா வியாதிகளுக்கும் வைத்தியம் பார்த்திருக்கிறார்கள். இன்றைய ஆங்கில மருந்துகளில் பக்க விளைவுகளும், வீரியமும் அதிகம் இருப்பதால் எடுத்ததற்கெல்லாம் மருத்துவமனைக்கு செல்லாமல் நமக்குத் தெரிந்த மூலிகைகளை வைத்து வீட்டிலேயே குணப்படுத்தி விடலாம். தீராத வியாதிகளையும் குணப்படுத்தும் சக்தி மூலிகைக்கு இருக்கிறது. ஆகையால் மூலிகைகளை பயன்படுத்தி அதன் பலன்களை அடையலாமே!
நமது முன்னோர்களெல்லாம் மூலிகைகளை கொண்டுதான் எல்லா வியாதிகளுக்கும் வைத்தியம் பார்த்திருக்கிறார்கள். இன்றைய ஆங்கில மருந்துகளில் பக்க விளைவுகளும், வீரியமும் அதிகம் இருப்பதால் எடுத்ததற்கெல்லாம் மருத்துவமனைக்கு செல்லாமல் நமக்குத் தெரிந்த மூலிகைகளை வைத்து வீட்டிலேயே குணப்படுத்தி விடலாம். தீராத வியாதிகளையும் குணப்படுத்தும் சக்தி மூலிகைக்கு இருக்கிறது. ஆகையால் மூலிகைகளை பயன்படுத்தி அதன் பலன்களை அடையலாமே!
Friday, 17 May 2013
59. நரியை பரியாக்கிய படலம்!
குதிரைகள் நீண்டநாட்களாக வரவில்லை. மன்னனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. மாணிக்கவாசகரை அழைத்து விசாரித்தான். அவர் மூன்று நாள் தவணை கேட்டார். அதுவும் முடிந்தது. இதன்பிறகு, பொறுமையிழந்த மன்னன், வாதவூரானின் முகத்தில் நான் விழிக்க விரும்பவில்லை. ஏமாற்றுக்காரனுடன் என்ன பேச்சு! அரசுப்பணத்தைக் கையாடிய அவனை மந்திரி பதவியில் இருந்து நீக்குகிறேன்.
60. பரியை நரியாக்கி வையை அழைத்த படலம்!
குதிரைகள் கட்டப்பட்டிருந்த இடத்தில் அத்தனையும் நரிகளாக இருந்தன. பாண்டியன் கொதித்தான். இந்த அரிமர்த்தனனையே முட்டாளக்குகிறானா அந்த திருவாதவூரான்! பிடியுங்கள் அவனை! முதலில் அழகிய குதிரைகளைக் காட்டினான். இப்போது, நரிகளாக்கி விட்டான்.
61.மண் சுமந்த படலம்!
வைகை நதியின் வெள்ளப்பெருக்கு மதுரை நகரை அலைக்கழித்தது. அரசன் அமைச்சர்களுடன் கலந்து வெள்ளத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை பற்றி ஆலோசித்தான். கரைகள் உடைத்து மதிற்சுவர்களையும் சாய்த்ததால், ஊருக்குள் வெள்ளம் வரும் முன், கரைகளை உயர்த்த ஆணை பிறப்பித்தான்.
62.பாண்டியன் சுரம் தீர்த்த படலம்!
அரிமர்த்தனின் மறைவுக்குப் பிறகு பலர் மதுரையை ஆண்டனர். அவர்களில் ஒருவன் கூன் பாண்டியன் என்னும் நெடுமாறன். நெடுமாறனின் போர்த்திறமையும், புகழும் சோழ மன்னனை ஈர்த்தது. அவன் தன் மகள் மங்கையர்க்கரசியை நெடுமாறனுக்கு திருமணம் செய்து வைத்தான்.
63. சமணரைக் கழுவேற்றிய படலம்!
சம்பந்தர் இறைவனிடம், சைவத்துக்கு இடைஞ்சல் செய்பவர்களைத் தண்டிக்க வேண்டுமென வேண்டிக்கொண்டார். இதனிடையே மன்னனின் நோயைக் குணப்படுத்த முடியாமல் வீடு திரும்பிய சமணர்களை அவர்களது மனைவிமார் கேவலமாகப் பேசினார்கள். இதனால் சமணர்களுக்கு அவமானமாகப் போய்விட்டது.
64.வன்னியும் கிணறும் லிங்கமும் அழைத்த படலம்!
சோழநாட்டிலுள்ள வணிகர் ஒருவரின் வாழ்வில் தன் விளையாடலைச் செய்தார் சிவபெருமான். அந்த வணிகருக்கு திருமணமாகி, நீண்ட காலத்துக்குப் பிறகு ஒரு பெண் குழந்தை பிறந்தது. வணிகர் தனது மகளை, மதுரையில் வசிக்கும் தனது தங்கை மகனுக்கு திருமணம் செய்து வைப்பதாக அவள் இளமையாக இருக்கும்போதே பேசி முடித்திருந்தார்.
அட்சய திரிதியை:
அமாவாசைக்குப்பின் வரும் மூன்றாம் நாளை திரிதியை திதி என்பர். சித்திரை மாதம் வரும் திரிதியை திதியை அட்சய திரிதியை என சிறப்பித்துக் கூறுவதுடன் விழாவாகவும் கொண்டாடுகிறோம். அட்சய என்றால் வளர்வது, குறையாதது என்று பொருள்.
அள்ள அள்ளக் குறையாது அள்ளித் தரும்
ராம நவமி .. வழிபடும் முறையும் சிறப்பும்!
மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ராமாவதாரம். சித்திரை மாதத்தில் வளர்பிறை நவமியன்று இவர் அவதரித்தார். சில ஆண்டுகளில் இந்த விழா, பங்குனி மாதத்திலும் வரும். தசரதரின் மகனாகப் பிறந்த ராமன்,
ஆட்சி, அதிகாரம், தலைமைப் பதவி வேண்டுமா? சூரியனை வழிபடுங்க!
நவக்கிரகங்களின் நாயகன் என்றழைக்கப்படுபவர் சூரியன். சகல ஜீவ ராசிகள், பயிர் பச்சைகளை தன் ஒளிக்கதிர்களால் வாழ வைத்துக் கொண்டிருக்கும் முதன்மை கிரகம்.
கிருஷ்ணர் ஆட்சிபுரிந்த துவாரகை இருந்தது உண்மை தான்!
5200 ஆண்டுகளுக்கு முன் மூழ்கிய.. கிருஷ்ணர் ஆட்சிபுரிந்த துவாரகை இருந்தது உண்மை தான்!
ராமர் கட்டிய சேது பாலம் 17 லட்சத்து 50 ஆயிரம் ஆண்டுகளாக ராமேஸ்வரம் கடலில் மூழ்கி இருப்பதைப் போல, மகாபாரத காலத்தில் கிருஷ்ணர் ஆட்சிபுரிந்த துவாரகையும் 5200 ஆண்டுகளுக்கு முன் கடலில் மூழ்கியது. தொல்லியல் ஆராய்ச்சியில், புதைந்த பகுதிகளைக் காண முடிந்ததால் துவாரகை இருந்தது உண்மை என்பது நிரூபணம் ஆகியுள்ளது.
ராமர் கட்டிய சேது பாலம் 17 லட்சத்து 50 ஆயிரம் ஆண்டுகளாக ராமேஸ்வரம் கடலில் மூழ்கி இருப்பதைப் போல, மகாபாரத காலத்தில் கிருஷ்ணர் ஆட்சிபுரிந்த துவாரகையும் 5200 ஆண்டுகளுக்கு முன் கடலில் மூழ்கியது. தொல்லியல் ஆராய்ச்சியில், புதைந்த பகுதிகளைக் காண முடிந்ததால் துவாரகை இருந்தது உண்மை என்பது நிரூபணம் ஆகியுள்ளது.
உணவு பரிமாறும்போது…
தர்ம சாஸ்திரத்தில், பல தர்மங்கள் சொல்லப்பட்டுள்ளன. உணவு பரிமாறும்போதும், உட்கொள்ளும் போதும், சில சாஸ்திரங்களை கடைப்பிடிக்க வேண்டும். உணவில் ரோமம் (தலைமுடி) இருந்தால், அந்த உணவை நிராகரிக்க வேண்டும். அதனால், உணவில் ரோமம் வந்து விடாமல், கவனமாக இருக்கச் சொல்லியிருக்கிறது. தலையில் இருக்கும் வரைக்கும் அது சிகை அல்லது கூந்தல். அப்போது, அதற்கு எண்ணெய் தடவி, சீவி, சிங்காரித்து பூ வைப்பர்.
திருமணத்தின் போது இந்த சடங்குகளை ஏன் செய்கின்றோம்?
அரச மரத்தின் வேரில் பிரம்மதேவனும், அடியில் திருமாலும், நுனியில் சிவமூர்த்தியும் இருக்கிறார்கள். அரசமரம் மும்மூர்த்தி ஸ்வரூபம். அதனால், சுமங்கலிகள் அரசமரத்தின் கிளயப் பாலும் பன்னீரும் விட்டுப் பூசித் மும்மூர்த்திகளயும் அங்கு எழுந்தருளச் செய்கின்றார்கள்.
சொர்ண பைரவரின் வழிபாட்டு முறை(வீட்டில் செய்யும் சுலப முறை) .
தேவையானவை: ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் படம்,கொஞ்சம் சந்தனம்,சந்தன ஊதுபத்தி ஒரு பாக்கெட்,இரண்டு கிண்ணங்கள்,தாமரை தண்டுத்திரி, அகல்விளக்கு எனப்படும் மண் விளக்கு,கலப்படமில்லாத,பாக்கெட்டில் அடைக்கப்படாத நெய்(இவற்றை ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவருக்கு மட்டுமே பயன்படுத்திட வேண்டும்)
*அசைவ உணவு சாப்பிடுவதை நிறுத்தும் மனவலிமை
28 கொடிய நரகங்கள்.
காலதேவனால் நிச்சயிக்கப்பட்ட தீவாய் நரகங்கள் எண்பத்து நான்கு
லட்சமிருக்கின்றன.
அவற்றில் கொடிய நரகங்கள் 28 இருகின்றன. அவை
லட்சமிருக்கின்றன.
அவற்றில் கொடிய நரகங்கள் 28 இருகின்றன. அவை
கார்த்திகை தீபம் ஏற்றும் முறையும் பலனும்!
நவம்பர் 26,2012 (தினமலர்)
ஒளி வடிவான இறைவனை தீபம் ஏற்றி வழிபடுவது எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வைப் பிரகாசிக்கச் செய்யும். வேத புராணங்களும் கூட விளக்கேற்றுவதே மிகச் சிறந்த பலன் தரும் என்கின்றன. எத்தனை எத்தனையோ அரசர்கள், கோயில்களில் தீபம் ஏற்றுவதையே மிகச் சிறந்த திருப்பணியாகச் செய்துள்ளனர்.
ஒளி வடிவான இறைவனை தீபம் ஏற்றி வழிபடுவது எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வைப் பிரகாசிக்கச் செய்யும். வேத புராணங்களும் கூட விளக்கேற்றுவதே மிகச் சிறந்த பலன் தரும் என்கின்றன. எத்தனை எத்தனையோ அரசர்கள், கோயில்களில் தீபம் ஏற்றுவதையே மிகச் சிறந்த திருப்பணியாகச் செய்துள்ளனர்.
எந்த கோயிலில் எவ்வாறு வலம்வர வேண்டும் தெரியுமா?
விநாயகரை ஒரு முறைதான் வலம் வரவேண்டும். ஈஸ்வரனையும், அம்மனையும் 3 முறை வலம் வர வேண்டும், அரச மரத்தை 7 முறை வலம் வர வேண்டும், மகான்களின் சமாதியை 4 முறை வலம் வர வேண்டும், நவக்கிரகங்களை 9 முறை வலம் வர வேண்டும், சூரியனை 2 முறை வலம் வர வேண்டும், தோஷ நிவர்த்திக்காக பெருமாளையும், தாயாரையும் வணங்குபவர்கள் 4 முறை வலம் வர வேண்டும், கோவிலுக்குள் ஆலய பலிப்பீடம், கொடிக்கம்பம் முன்பு தான் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்க வேண்டும்.
சப்த கன்னியர்கள்
சப்தமாதாக்கள் அல்லது சப்தகன்னியர் வழிபாடு என்பது அம்பிகை வழிபாட்டின் அங்கமாகக் காணப்படுகின்ற கிராமிய தெய்வ வழிபாடு ஆகும். சக்தி அம்சத்தில் சப்த மாதர்கள் வழிபாடு சிறப்பிடம் பெறுகிறது.
கி.பி 510 ஆம் ஆண்டில் சப்தகன்னியர்கள் வழிபாடு சிறப்புற்று இருந்ததாக கல்வெட்டுக்களிலும், இலக்கியங்களிலும் தெரிவிக்கப்பட்டுள்ளன. சப்தகன்னியர்கள் எழு தாய்மார்கள் எனவும் அழைக்கப்படுகின்றனர்.
சப்தகன்னியர்கள் பிறந்த கதை
கி.பி 510 ஆம் ஆண்டில் சப்தகன்னியர்கள் வழிபாடு சிறப்புற்று இருந்ததாக கல்வெட்டுக்களிலும், இலக்கியங்களிலும் தெரிவிக்கப்பட்டுள்ளன. சப்தகன்னியர்கள் எழு தாய்மார்கள் எனவும் அழைக்கப்படுகின்றனர்.
சப்தகன்னியர்கள் பிறந்த கதை
கந்த சஷ்டி விரதம்.
ஐப்பசி மாத சுக்கிலபட்ச பிரதமையன்று வரும். கந்தசஷ்டி நோன்பானது
முருகப்பெருமானுடைய சிறப்பான நோன்பாகும் உண்ணா நோன்பு உடலுக்கு நல்லது. ஆன்மாவுக்குப் பலம் தருவது. எல்லாச் சமயங்களும் இதைக் கடைப்பிடிக்கின்றன. முருகனுக்குரிய விரதங்கள் மூன்று. அவை வெள்ளிக்கிழமை விரதம், கார்த்திகை விரதம், கந்த சஷ்டி விரதம். இவற்றுள் கந்த புராணம் கந்தசஷ்டி விரதத்தை .. ஒப்பரும் விரதம் .. என்றும் புகழ்கிறது.
முருகப்பெருமானுடைய சிறப்பான நோன்பாகும் உண்ணா நோன்பு உடலுக்கு நல்லது. ஆன்மாவுக்குப் பலம் தருவது. எல்லாச் சமயங்களும் இதைக் கடைப்பிடிக்கின்றன. முருகனுக்குரிய விரதங்கள் மூன்று. அவை வெள்ளிக்கிழமை விரதம், கார்த்திகை விரதம், கந்த சஷ்டி விரதம். இவற்றுள் கந்த புராணம் கந்தசஷ்டி விரதத்தை .. ஒப்பரும் விரதம் .. என்றும் புகழ்கிறது.
திருநள்ளாறில் சனிபகவானை வழிபடும் முறை
திருநள்ளாறு அருள்மிகு தர்ப்பணேஸ்வரர் கோவிலுக்குச் சென்றதும்,நேராக சனிபகவானை வழிபடச் சென்றுவிடுகிறோம். இப்படி வழிபடுவது தவறு.
முதலில் நளதீர்த்தத்தில் நீராட வேண்டும்.
முதலில் நளதீர்த்தத்தில் நீராட வேண்டும்.
பதினெட்டுச் சித்தர்கள் அடங்கியிருக்கும் ஜீவ சமாதிப் பீடங்கள்
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஜீவசமாதிப் பீடங்கள் உள்ளன. உதாரணமாக சென்னையில் திருபொற்றீஸ்வரர் ஆலயம். அங்கேயே அருகில் பட்டினத்தார் ஆலயம். தண்டையார்பேட்டை திருவருள் குணங்குடி மஸ்தான் தர்க்கா, மைலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயம், முண்டகக் கண்ணியம்மன் ஆலயம், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் ஆலயம், கொரட்டூர் ஜம்புகேஸ்வரர் ஆலயம், திருமுல்லைவாசல் மாசிலா மணீஸ்வரர் ஆலயம், பூந்தமல்லி அருகில் திருமழிசையாழ்வார் ஆலயம், அரக்கோணம் அருகில் திருவாலங்காடு திருவேற்காடு கருமாரியம்மன் ஆலயம், மாங்காடு ஆலயம் மற்றும் அருகில் திருத்தணி, காளகத்தி, திருப்பதி இவை யாவும் சித்தர்கள் அடங்கி அருளும் சிறப்புமிகு தலங்கள். இன்னும் சென்னையிலும் அதைச் சுற்றிலும் பல ஜீவ சமாதிகள் உள்ளன.
சங்கடஹர சதுர்த்தியின் மகிமை:
சங்கடஹர சதுர்த்தி: நமக்கு வரும் சங்கடம் அனைத்தையும் நீக்கிச் சௌபாக்கியம் தரவல்லது சங்கடஹர சதுர்த்தி விரதம். ஆவணி மாதம் தேய்பிறைச் சதுர்த்தி தினத்தில் இவ்விரதத்தைத் தொடங்க வேண்டும். இரவு சந்திரன் உதயமாகும் பொழுது விநாயகரை வழிபட்டுச் சந்திரனுக்கு அர்க்கியம் தர வேண்டும் என்கிறது சாத்திரம்.
பிரணவ மந்திரத்தின் மகிமைகள்
ஓம் என்னும் மந்திரத்திற்கு பல விளக்கங்கள் உள்ளன. ஆதிபகவானாகிய இறைவனே! ஜீவனாகிய என்னை சேர்த்துக்கொள், என்பது இதன் பொருள். ஒவ்வொரு தடவையும் ஓம் என்று சொன்ன பிறகு, விஷ்ணுவே, சிவனே, சக்தியே, விநாயகா, ஐயப்பா, முருகா என்றெல்லாம் அவரவர் இஷ்டதெய்வத்தை அழைக்கிறோம்.
பிரதோஷம் அன்று எப்படி வலம் வந்து வணங்க வேண்டும்!
சிவன் கோயில்களில் பிரதோஷம் அன்று எப்படி வலம் வந்து வணங்க வேண்டும்!
. மாதந்தோறும் இரண்டு முறை பிரதோஷம் வருகிறது. பிரதோஷம் அன்று சிவன் கோயில்களில் எந்தெந்த தெய்ங்களை எப்படி வலம் வந்து வணங்கி பலன் பெறுவது என்பது பற்றி பார்ப்போமே!. சிவன் கோயில்களில் சிவபெருமானுக்கு எதிரே நந்தி பகவானின் பெரிய திருவுருவம் கம்பீரமாக உள்ளது. பிரதோஷ காலங்களில் வழிபடும் பக்தர்கள் நந்தியை வழிபட்டு விரதமிருந்து மாலை பூஜை முடித்த பின் உணவு அருந்துகின்றனர்.
. மாதந்தோறும் இரண்டு முறை பிரதோஷம் வருகிறது. பிரதோஷம் அன்று சிவன் கோயில்களில் எந்தெந்த தெய்ங்களை எப்படி வலம் வந்து வணங்கி பலன் பெறுவது என்பது பற்றி பார்ப்போமே!. சிவன் கோயில்களில் சிவபெருமானுக்கு எதிரே நந்தி பகவானின் பெரிய திருவுருவம் கம்பீரமாக உள்ளது. பிரதோஷ காலங்களில் வழிபடும் பக்தர்கள் நந்தியை வழிபட்டு விரதமிருந்து மாலை பூஜை முடித்த பின் உணவு அருந்துகின்றனர்.
வாழை மரத்தின் சிறப்பு
இறைவழிபாடில் வாழை ஒரு முக்கிய இடம் பெறுகிறது. வாழைப்பழத்தை வைத்துத்தான் இறைவனுக்கு நைவேதியம் செய்கிறார்கள். வாழை மரத்தை தெய்வமாக வணங்குகிறார்கள். வாழையை பெண்ணாக பாவிக்கிறார்கள். வாழ வைக்கும் மரமாக நினைக்கிறார்கள்.
51 விநாயக வடிவங்களும் வணங்குவதால் வரும் வளங்களும்...
விநாயக வடிவங்களும் வணங்குவதால் வரும் வளங்களும்
விநாயகர் என்றால் அவருக்கு மேம்பட்ட தலைவர் இல்லை என்று பொருள். அவரை சிருஷ்டித்தவரே சிவபெருமான்தான்.
இன்னல்கள் அனைத்தையும் தீர்க்கும் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்தவரும் சிவபெருமான்தான். ஆனால், திரிபுரம் எரிக்கச் சென்ற சிவன் விநாயகரை வழிபடாமல் சென்றதால் அவரது தேர்ச் சக்கரம் முறிந்தது. பின்னர் விநாயகரை வழிபட்டு அவர் திரிபுரம் எரித்தார்.
விநாயகர் என்றால் அவருக்கு மேம்பட்ட தலைவர் இல்லை என்று பொருள். அவரை சிருஷ்டித்தவரே சிவபெருமான்தான்.
இன்னல்கள் அனைத்தையும் தீர்க்கும் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்தவரும் சிவபெருமான்தான். ஆனால், திரிபுரம் எரிக்கச் சென்ற சிவன் விநாயகரை வழிபடாமல் சென்றதால் அவரது தேர்ச் சக்கரம் முறிந்தது. பின்னர் விநாயகரை வழிபட்டு அவர் திரிபுரம் எரித்தார்.
Tuesday, 14 May 2013
உடல் பருமனைக் குறைக்க சில வழிகள்.
* இஞ்சியைத் தோல் சீவி அரைத்து, ஒரு கரண்டி சாறு எடுத்து, அதனுடன் சம அளவு தேன் சேர்த்து ஒரு டம்ளர் இளம் சூடான நீரில் கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இஞ்சியில் உள்ள ஜின்ஜெரால் (Gingerol), ஜின்ஜிபெரின் (Zingiberine) மற்றும் தேன் ஆகியவை செரிமானத்தைத் தூண்டுவதுடன் தேவையற்ற கொழுப்பையும் எரிக்கும்.
Sunday, 5 May 2013
தயிர் தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படும் உடல்நல நன்மைகள்:-
பலருக்கு தயிர், மோர் போன்றவை பிடிக்காது.
நான் இவைகளை எடுத்துக்கொள்ள மாட்டேன் என்று
பெருமையாக சொல்வார்கள்.!!!
சிலருக்கு தயிர் இல்லாமல் ஏதுமில்லை...
தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து.குளிர்ச்சியைத் தரும். நல்ல ஜீரண சக்தியை தருவது
தயிர்தான்.
நான் இவைகளை எடுத்துக்கொள்ள மாட்டேன் என்று
பெருமையாக சொல்வார்கள்.!!!
சிலருக்கு தயிர் இல்லாமல் ஏதுமில்லை...
தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து.குளிர்ச்சியைத் தரும். நல்ல ஜீரண சக்தியை தருவது
தயிர்தான்.
Subscribe to:
Posts (Atom)
...Recently Published Post...
குளிக்கும் போது...
குளிக்கும் போது வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று குளிக்கவேண்டும். (இவை இரண்டும் உத்தம திசைகள். (கர்மம் செய்தபின்னும், மயானத்திற்க...