Friday, 17 May 2013

கந்த சஷ்டி விரதம்.

ஐப்பசி மாத சுக்கிலபட்ச பிரதமையன்று வரும். கந்தசஷ்டி நோன்பானது
முருகப்பெருமானுடைய சிறப்பான நோன்பாகும் உண்ணா நோன்பு உடலுக்கு நல்லது. ஆன்மாவுக்குப் பலம் தருவது. எல்லாச் சமயங்களும் இதைக் கடைப்பிடிக்கின்றன. முருகனுக்குரிய விரதங்கள் மூன்று. அவை வெள்ளிக்கிழமை விரதம், கார்த்திகை விரதம், கந்த சஷ்டி விரதம். இவற்றுள் கந்த புராணம் கந்தசஷ்டி விரதத்தை .. ஒப்பரும் விரதம் .. என்றும் புகழ்கிறது.

கந்தபுராணம் நம் சொந்தப் புராணம். ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று மலங்களால் கட்டப்பட்டது ஆன்மா. ஆனைமுகச்சூரனை முருகன் வெல்வது மாயையை ஒழிப்பதாகும். சிங்கமுகச் சூரனை வெல்வது கன்மத்தை ஒழிப்பதாகும். சூரபதுமனை வெல்வது ஆணவத்தை (நான் எனது என்னும் அகங்காரத்தை) அழிப்பதாகும். உண்ணா நோன்பு கொள்ள ஆணவம் அடங்கும். ஆன்மா ஆண்டவனோடு ஒன்றுபடும். இந்தத் தத்துவத்தை விளக்குவதே சஷ்டித் திருவிழா.

விரதம் கொள்ளும் முறை

சஷ்டி விரதமிருப்பவர் ஆறு நாட்களும் காலையில் நீரில் மூழ்கி, சந்தியாவந்தனம் முடித்துத் தியானத்தில் அமர்ந்து, அக்கினி, கும்பம், பிம்பம் மூன்றிலும் முருகனை எழுந்தருளச் செய்து வழிபடவேண்டும். திருமுருகன் புகழ்பாடி குளிர்ந்த நீர் பருகி உபவாசம் இருத்தல் வேண்டும். பெண்ணாசையை மறந்தும், பகலில் தூங்காமலும் இருத்தல் வேண்டும். இது கந்த புராணம் கூறும் முறை.

உடலின் சுமை குறைவதால் மிகக் கடுமையான நோய்களைக்கூட உண்ணாநோன்பின் மூலம் நீக்கிவிட முடியும். உண்ணா நோன்பின் போது, உடலில் நோயுற்ற திசுக்களே முதலில் கரைக்கப்படுகின்றன. கொழுத்த உடல் கொண்ட மனிதன், உண்ணா நோன்பின்போது மறைமுகமாக உண்டு கொண்டே இருக்கிறார். உள்ளுருப்புக்களை வீணாகச் சுற்றியிருந்த பகுதிகள் கரைக்கப்படுகின்றன. உண்ணா நோன்பு மிகவும் எளிய, ஆனால் சிறப்பான ஊட்டச்செயலாக அமைந்து, உடலைக் காக்கிறது. உண்ணா நோன்பின்போது, உடல் ஓய்வடைகிறது. எல்லா உறுப்புக்களுக்கும் அமைதி கிட்டுகிறது. நரம்புகள் தளர்ச்சி நீங்குகின்றன. வெப்பநிலை மாறி தண்மை ஏற்படுகிறது. கழிவுப்பொருள்களை உடலிலிருந்து வெளியேற்ற இயற்கை கொள்ளும் வழிகளில் உண்ணா நோன்பு மிகவும் சிறந்ததாக அமைந்திருக்கிறது. இரத்தமும் நிணநீரும் தூய்மையாக்கப்படுகின்றன. காம உணர்வு தணிகிறது. தூய நினைவுகள் வளர்கின்றன. மனதின் சக்தி, பகுத்தறிகின்ற ஆய்வுநிலை, நினைவு கூறும் சக்தி, இணைத்துக்காணும் அறிவு அதிகமாகின்றது. உண்ணா நோன்பினால் இளையவரும், முதியவரும் புதுப்பிக்கப்படுகிறார்கள். உடல் உறுப்புக்களில் மாத்திரம் அல்லாமல், உடலியல் செயல்களிலும் இது நிகழ்கிறது.

No comments:

Post a Comment

...Recently Published Post...

குளிக்கும் போது...

குளிக்கும் போது வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று குளிக்கவேண்டும். (இவை இரண்டும் உத்தம திசைகள். (கர்மம் செய்தபின்னும், மயானத்திற்க...