Saturday 18 May 2013

37. சோழனை மடுவில் வீழ்த்திய படலம்!

பாண்டியநாட்டை சுந்தரேச பாதசேகர பாண்டியன் ஆண்டு வந்தான். அவனுக்கு போர்களில் நாட்டமில்லை. படைபலத்தைக் குறைத்து, அதில் மிச்சமாகும் பெரும் தொகையைக் கொண்டு சிவகைங்கர்யம் செய்ய ஆசை கொண்டான். படைபலத்தைப் பாதிக்கும் மேலாக குறைத்து விட்டான்.
தன் ஆளுகைக்கு உட்பட்ட சிவாலயங்களில் திருப்பணி மேற்கொண்டான். மதுரை நகராளும் சொக்கநாதரின் தீவிர பக்தனாக இருந்தான். பாண்டியன் படைபலத்தைக் குறைத்து விட்டான் என்ற செய்தி சோழமன்னனுக்கு ஒற்றர்கள் மூலம் தெரியவந்தது. இதுதான் பாண்டியநாட்டைப் பிடிக்க தகுந்த சமயமென திட்டமிட்ட அவன், உடனடியாக போர் அறிவிப்பு செய்தான். பாண்டியன் அதிர்ச்சியடைந்தான். தற்போதைய நிலையில், வெற்றி பெறுவது சிரமம் என்பதால், சொக்கநாதப் பெருமானைச் சரணடைந்தான். அண்ணலே! உன் திருப்பணிக்காகவே படைகளுக்கான செலவைக் குறைத்தேன். போர்களால் ரத்தம் தான் சிந்துகிறதே தவிர, யாருக்கு என்ன லாபம்? இந்த நல்ல எண்ணத்தைக் கூட புரிந்து கொள்ளாமல் சோழன் படையெடுத்து வருகிறானே! நீயே என்னையும், மதுரை மக்களையும் காப்பாற்ற வேண்டும், என்றான். அப்போது அசரீரி ஒலித்தது. பாண்டியா! கவலை வேண்டாம். படைகளைக் கிளப்பு. உன் படையில் நானும் பங்கேற்பேன். கவலையின்றிச் செல், என்றார். பாண்டியனும் இருக்கிற படைகளுடன் மதுரையின் எல்லைக்குச் சென்று சோழனின் பெரும்படையை எதிர்கொண்டான். அந்தப் போரில் வேடனைப் போல் இருந்த ஒருவன், பாண்டியப்படைக்கு ஆதரவாக போரிட்டான். அவனை யாரென்று யாருக்கும் தெரியவில்லை. வேகமாக சோழனை நோக்கி முன்னேறிய அவன், ஏ சோழனே! முதலில் நீ என்னுடன் மோது.

என்னை ஜெயித்துவிட்டு, பாண்டியன் அருகில் போ, என்று சபதம் செய்தான்.ஒரு சாதாரண வேடன் தனக்கிட்ட சவாலை எண்ணி வெட்கமும் ஆத்திரமும் அடைந்த சோழன் அவனை நோக்கி வாளை நீட்டினான். அதை தன் ஈட்டியால் தட்டிவிட்டு, சுற்றி நின்ற வீரர்களையும் விரட்யடித்த வேடன், ஆயுதமிழந்து நின்ற சோழனை விரட்டினான். சோழன் பயந்து போய் குதிரøயில் ஏறி தப்பி ஓடினான். இந்த அதிசயத்தைப் பார்த்த பாண்டியன், அந்த வேடன் சொக்கநாதரே என்பதை உணர்ந்து கொண்டான். சற்றுநேரத்தில் வேடனைக் காணவில்லை. சோழனை, பாண்டியன் தப்பி ஓடிய தனது குதிரையில் விரட்டிச் சென்றான். சற்றுதூரம் சென்றதும் சோழன் பின்னால் திரும்பினான். தன்னை துரத்தி வந்த வேடனைக் காணாமல், பாண்டியன் துரத்தி வருவதைக் கண்ட அவன் சற்று தைரியமடைந்து குதிரையைத் திருப்பினான். இதைப் பார்த்த பாண்டியன் அச்சத்துடன், தன் குதிரையை போர்க்களம் நோக்கி திருப்ப சோழன் விரட்டினான். ஓரிடத்தில் பெரிய குளம் இருந்தது. அந்தக் குளத்திற்குள் அவன் ஏறி வந்த குதிரை விழுந்தது. பாண்டியன் நீச்சலடிக்க ஆரம்பித்தான். பின்னால் வந்த சோழனின் குதிரையும் வந்தவேகத்தில் குளத்தில் விழுந்தது. ஆனால், அது விழுந்த இடத்தில் ஒரு பெரும் சுழல் இருந்தது. சுழலில் சிக்கிய சோழன் அதில் இருந்து மீளமுடியாமல் மாண்டான். பாண்டியன் நீச்சலடித்து கரையேறினான். தூரத்தில் சுந்தரேசப் பெருமானின் கோபுரம் தெரிந்தது. அங்கு நின்றபடியே விழுந்து வணங்கி சொக்கநாதரைப் போற்றினான். சோழப்படையினரை கைது செய்து ஆயுதங்களைக் கைப்பற்றினான். அவற்றையும் விற்று சேர்த்த செல்வத்தில் சொக்கநாதர் கோயிலுக்கு மேலும் திருப்பணிகள் செய்து இறையருள் பெற்றான்.

No comments:

Post a Comment

...Recently Published Post...

குளிக்கும் போது...

குளிக்கும் போது வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று குளிக்கவேண்டும். (இவை இரண்டும் உத்தம திசைகள். (கர்மம் செய்தபின்னும், மயானத்திற்க...