Friday, 17 May 2013

ஆட்சி, அதிகாரம், தலைமைப் பதவி வேண்டுமா? சூரியனை வழிபடுங்க!



நவக்கிரகங்களின் நாயகன் என்றழைக்கப்படுபவர் சூரியன். சகல ஜீவ ராசிகள், பயிர் பச்சைகளை தன் ஒளிக்கதிர்களால் வாழ வைத்துக் கொண்டிருக்கும் முதன்மை கிரகம். ஆட்சி, அதிகாரம், தலைமைப் பதவி, ஆளுமை போன்றவற்றின் கர்த்தா. ஜாதக அடிப்படையில் சூரியன் தயவு இல்லாமல் தலைமைப் பொறுப்புக்கு யாரும் வரமுடியாது.

வழிபாடு

தினசரி சிவாலய வழிபாடும், சூரிய நமஸ்காரமும் நல்ல பலன் தரும். தினசரி ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரம் படிக்கலாம். கோதுமையில் செய்த சப்பாத்தி, கோதுமை ரவை போன்றவற்றை இல்லாதோர், நோயாளிகளுக்கு தரலாம்.

கோதுமை பலகாரத்துடன் பழங்கள், கீரை சேர்த்து பசுவுக்கு கொடுக்கலாம். தினசரி சூரிய காயத்ரி மந்திரம் 108 முறை சொல்லி வரலாம்.

ஓம் அம் நமசிவாய சூரிய தேவாய நம என்ற மந்திரத்தை 108 முறை சொல்லலாம்.

சூரிய தலமான ஆடுதுறை சூரியனார் கோயிலுக்கு சென்று வரலாம். நவதிருப்பதிகளில் திருநெல்வேலி அருகே உள்ள ஸ்ரீவைகுண்டம் சூரியனுக்குரிய பிரார்த்தனை தலமாகும்.

No comments:

Post a Comment

...Recently Published Post...

குளிக்கும் போது...

குளிக்கும் போது வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று குளிக்கவேண்டும். (இவை இரண்டும் உத்தம திசைகள். (கர்மம் செய்தபின்னும், மயானத்திற்க...